உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, April 29, 2012

சிபிஎம் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்.குமாரை காவல் துறை யினர் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதி காரிகள் மீது கோட்டாட்சி யர் விசாரணை நடத்திட சிஐடியு கோரிக்கை விடுத்த தால், ஆத்திரத்தில் பழிவாங் கும் வகையில் குமாரை ஊத்துக்குளி காவலர்கள் கைது செய்தனர்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி ஒன்றியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.குமார் ஊத்துக் குளி ஆர்.எஸ். - குன்னத்தூர் சாலை யில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமையன்று அதி காலை 6 மணியளவில் காவ லர்கள் அவரது வீட்டுக்கு வந்து குமாரை திடீரென கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த மார்ச் 27ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் தாராளமயக் கொள்கைக்கு எதிராக மறி யல் போராட்டம் நடத்தி யது. அதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளியில் நடை பெற்ற மறியலின் போது மார்க்சிஸ்ட் கட்சியினரி டம் காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண் டனர். மேலும் இந்த சம்ப வத்திற்கு பழிவாங்கும் நோக் கத்தில் குமார் மீது காவல் துறையினர், அரசு அதிகாரி யை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நிலுவை யில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊத்துக்குளி பகுதி யில் ஊத்துக்குளி காவல் நிலைய எஸ்.ஐ., சேகர் மற் றும் பயிற்சி எஸ்.ஐ. ராமலிங் கம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி விட்டு ஆட்டோவை ஓட்டி வந்ததாக இருவரை ஊத்துக் குளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் அதிகாரிகள் பகல் 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காவல்நிலை யத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.


இதில் தலையில் பலத்தக் காயமடைந்த ஆறுமுகம் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார். அவரை பரிசோதித் துப் பார்த்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கும்படி கூறிவிட்டனர். ஆபத்தான நிலையில் கோவை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.

ஆட்டோ தொழிலாளி மீது கொலைவெறித் தாக்கு தல் நடத்திய பயிற்சி ஆய் வாளர் ராமலிங்கம் உள் ளிட்ட காவல் துறையினர் மீது ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத் துள்ளது. இந்த நிலையில் ஊத்துக்குளி காவலர்கள் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் என்ற முறையில் ஆர்.குமாரிடம் தொடர்பு கொண்டு ஆட்டோ ஓட்டு நர் தாக்கப்பட்ட சம்பவத் தில் சமரசமாகப் போய்க் கொள்ளலாம் என்று கூறி யுள்ளனர். ஆனால் தொழி லாளியின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களது சமரசப் பேச்சு வார்த்தைக்கு ஆர்.குமார் மறுத்துவிட்டார்.

மேலும் சிஐடியு மாவட் டச் செயலாளர் எம்.சந்தி ரன், ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்டச் செய லாளர் ஒய்.அன்பு ஆகி யோர் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் மா.மதி வாணனை நேரில் சந்தித்து புகார் மனுக் கொடுத்தனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இது தொடர்பாக காவல் கண் காணிப்பாளர் வே.பால கிருஷ்ணனிடம் விசாரித் துள்ளார். இந்த வழக்குத் தொடர்பாக உரிய நடவடிக் கை எடுப்பதாக ஆட்சியர் மதிவாணன் சிஐடியு நிர் வாகிகளிடம் உறுதியளித் தார். இந்தப் பின்னணியில் சனிக்கிழமை அதிகாலை ஊத்துக்குளி காவலர்கள் ஆர்.குமாரை கைது செய் தது கவனிக்கத்தக்கது.

இவர் மீது அரசு அதி காரியை பணி செய்ய விடா மல் தடுத்ததாக ஏற்கனவே புகார் பதிவு செய்திருந்த காவலர்கள் குற்றப்பத்திரி கையில், பயிற்சி எஸ்.ஐ. ராம லிங்கத்துக்கு கொலை மிரட் டல் விடுத்ததாக பொய்யாக ஜோடித்து ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 9ம் தேதியே வழக்குப் பதிவு செய்துவிட்டதாக வும், ஆனால் குமார் தலை மறைவாக இருந்ததால் சனிக்கிழமை “வீட்டின் முன்பு” கைது செய்ததாக வும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெருந் துறை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று குமாரை சிறையில் அடைத் தனர். இச்சம்பவத்தை அறிந்து ஊத்துக்குளி வட் டாரத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.

காவல் துறைக்கு சிபிஎம் ஒன்றியக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...