உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, May 25, 2012

பெட்ரோலே இல்லாம வண்டிய ஓட்டுங்க... கூட்டணிய விட்டு வரமாட்டேன். - கருணாநிதி


நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை 77 ரூவாய் 95 காசுகள் அதிகரித்துள்ளது. 

இது சாதாரண விஷயம் கிடையாது. அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்து வருகின்றது.  மத்தியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான மம்தா பானர்ஜி கூட  கூட்டணியில் இருந்தாலும் கூட இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். 
அது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் கூட்டணியில் இருந்து  விலகுவோம் 
என்று பகீரங்கமாகவே தெரிவிக்கின்றார். அந்த முடிவினை தமிழ் நாட்டு மக்களுக்காக கருணாநிதி இதுவரை ஏன் எடுக்க முன்வரவில்லை என்றும் தெரியவில்லை??

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதலாய் மூன்று தொகுதிகள் கேட்டதற்காக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று சொன்னவர் 
இன்று தமிழ் நாட்டு மக்களின் மீது தொடர்ந்து சுமைகளை தூக்கி போடும் காங்கிரஸ் கூட்டணியில் 
இருந்து விலக மறுப்பதன் பின்னணி என்ன? 

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE


இந்தியாவிற்கு பேச 1 ரூபாய், அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50 பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். 

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS,LINUX, MAC)

மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRYஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.
தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)

ட்விட்டர் உபயோகிப்பது எப்படி? எளிமையான விளக்கங்கள்!

  ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரால் மட்டுமே முடியும்! வரும் காலங்களில் தொலைக்காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடமாக ட்விட்டர் மாற இருக்கிறது.

  இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவில்லையாஉதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உணருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போதுஉங்களைப் பின்தொடருபவர்கள் ரீட்வீட் செய்யும்போது அவர்களைப்பின் தொடரும் நண்பர்களுக்கு நொடியில் செய்தி சென்று சேரும்! இப்படி ஒருசில வினாடிகளில் உங்கள் செய்தி உலகம் முழுவதும் தெரிந்துவிடும். ட்விட்டரை விளக்கும் வகையில் புதிதாய் ட்விட்டருக்கு வரும் அன்பர்களுக்கான பதிவு இது!

  மிகமிக முக்கியமான விஷயம் – ட்விட்டர் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய விவரங்களைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பு மிக அதிகம். புகைப்படம் போன்றவற்றை தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ட்விட்டரில் நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை நீங்களாகவே வெளியிடாதவரை யாருக்கும் தெரியாது.

Sunday, May 20, 2012

திருப்பூர் சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்,' என, கலெக்டர் மதிவாணன்தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உ<ள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது காலியாக உள்ள 184 மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், 251 சமையலர்கள் மற்றும் 274 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணியிடம்: கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பொது மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர். 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத பழங்குடியினர். வயது வரம்பு - பொது மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு விடப்பட்ட அல்லது விதவை பெண்களுக்கு 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்காததால் அவலம்!

:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, அப்பகுதியில் இருந்த 33 கடைகள் இடிக்கப்பட்டன.ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும், ரோடு விஸ்தரிக்கப் படாமல் உள்ளது. தள்ளுவண்டி கடைகள் அதிகரிக்கத் துவங்கி விட்டன. மினி பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்கு வரத்து நெரில் அதிகரித்த வண்ணம் உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காமராஜர் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 33 கடைகள் இருந்தன. ஜவுளிக்கடைகள் மற்றும் செருப்பு கடைகள் செயல்பட்டு வந்தன. அவற்றின் மூலமாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. காமராஜ் ரோட்டில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, அப்பகுதியில் இருந்த கடைகளை இடிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க )

நம்பாதீங்க 

முன்குறிப்பு:
இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே.

எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!!


இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!!


கதை இதோ:

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?:


நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 

Saturday, May 19, 2012

ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )

Blogger_Users_list

நண்பர்களே உலகின் அதிகமாக பயன்படுத்த படும் பிளாக்-களில் முக்கியமானதும் அதிக நபரால் பயன்படுத்தபடுவது பிளாக்கர் தளம்

 பிளாக்கர் தளம் பயன்படுத்தும் சிலருக்கு அதன் விதிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் .. 
ஒரு பிளாக்கர் கணக்கை வைத்து எத்தனை வசதிகளை பெறலாம் என்பதை விளக்கவே இந்த பதிவு :

ஒரு பிளாக்கர் கணக்கு (one blogger Account): 


ஒரு கணக்கை கொண்டு  .....


 1. நூறு (100 blogs ) வலைப்பூக்களை உருவாக்கலாம் ..

2.  சுய விவர பலகையில் (Profile) " About me " என்ற பகுதியில் 1,200 characters
வரை எழுதாலாம்

3 . விருப்பம் மற்றும் பிடித்தது  " Interests and Favorites "  --பகுதியில் 2,000 characters வரை பயன் படுத்தலாம் .

4 . மூந்நூறு வலைப்பதிவு களை பின்தொடரலாம் (follow 300 blogs)

5. படங்களை பதிவேற்றும் போது அதிக பட்சமாக 1600px அளவுள்ள ( 8MB ) படங்களை பதிவேற்றலாம் .. (Post Editer பதிவு எழுதி மூலம் )

6. வார்ப்புருக்களின் பின்னணியில் படங்களை இணைக்கும் போது 300kb அளவுள்ள படங்களை இணைக்கலாம் ..

கூகுள் பிகாஸா மூலம் படங்களை பதிவேற்றினால் 1024MB வரை தான் பதிவேத்ற்ற முடியும் .

பிளாக்கர் பதிவு எழுதும் கருவியில் படங்களை பதிவேற்றினால்

நன்றி நன்றி நன்றி

வணக்கம் அன்பர்களே...

சென்ற சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்டுகிறது...
 பதிவிற்கு அமோக வரவேற்பு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 773 பேர் வந்து சென்றனர். சின்னதாய் ஒரு நன்றி

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10

பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து.
தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

அழித்த புக்மார்க் திரும்பப் பெற

இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப்பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் பிரவுசரில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மின் வாரிய ஊழியர் சாவு

பல்லடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மின் வாரிய ஊழியர் சாவு
பல்லடம், மே. 14- 
 
பல்லடத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). திருப்பூர் மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை.
 
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை கவிதா பல்வேறு இடங்களில் குணசேகரனை தேடினர். பலன் இல்லை.
 
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையம் எதிரேயுள்ள மீன் வளர்ச்சி கழக விற்பனை அங்காடி அருகே மது குடித்து ஒருவர் இறந்து கிடப்பதாக பல்லடம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிரமாக விசாரித்தனர்.
 
அப்போது இறந்து கிடந்தவர் குணசேகரன் என்பதும், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததும் தெரியவந்தது.  

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க


தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

Selling Online Air Tickets by IRCTC

Ministry of Railways

Selling Online Air Tickets by IRCTC

Indian Railways Catering and Tourism Corporation (IRCTC) has been selling air tickets at its website since May 6, 2010 as a white label arrangement with a backend content provider. However, now IRCTC has launched air ticketing website on its own since May 7, 2012. This initiative has been taken to improve customer satisfaction and provide a seamless passenger movement over various modes of transport. IRCTC has developed in house air ticketing module for booking tickets for domestic and international airlines through website irctc.co.in and railtourismindia.com.

IRCTC now has directly entered into agreement with the major airlines and the low cost carries in the country like Air India, Jet Airways, Kingfisher, Spicejet, Indigo and Go Air. Initially, the customer will be able to book tickets for these airlines for domestic travel and later the international airlines for international travel.

This information was given by the Minister of State for Railways, Shri Bharatsinh Solanki in a written reply in Rajya Sabha today.

PIB
this is a test message

Thursday, May 17, 2012

தகவல் அறியும் சட்டத்தின் முலம் கோவை போக்குவரத்து கழகத்தில் எனது நண்பர் கேட்ட கேள்வியும் பதிலும்

g.Njrha;fhe;jp>
jkpoh; ew;gzp kd;wk;>
35.uh[htPjp>
nfhsg;gY}h; mQ;ry;
Nfhgp tl;lk;
<NuhL khtl;lk; 638456

ngWeH
nghJ jfty; mYtyh;>
jkpo;ehL muR Nghf;Ftuj;Jf;fofk;>(Nfhitypkpl;)
37>Nkl;Lg;ghisak; NuhL>
Nfhit

ஒழுங்கா ஊர் போயிச் சேருங்க, போலீஸ் எச்சரிக்கை!!!

 நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம்.  அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு

gEdit - Text Editor விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தலாம்லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தும் அனைவரும் gEdit - Text Editor -னைப் பயன்படுத்தி இருபோம். gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் சிறப்பானதொரு உரை எழுதியாகும்.  GNOME  Desktop Environment -ல் gEdit இருப்பியல்பாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.

லினக்ஸ் இயங்குதளங்களைப் பொறுத்த வரையில் gEdit -னை விட சிறப்பான உரை எழுதிகள் இருக்கின்றன.  எடுத்துக்காடிற்கு Vim, Emacs, Nano போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

போஸ் கொடுக்கலாம் வாங்க

போஸ் கொடுக்கலாம் வாங்க: போஸ் கொடுக்க வாங்க கேமராவை கையில் எடுத்த உடனே எதிரில் இருப்பவரில் பலர் attention போஸில்தான் நிப்பாங்க. நம்க்கும் அவங்களை எந்த மாதிரி நிறகவைக்க வேண்டும் என்ற தவிப்பும் இருக்கும். இந்த இடுகைகளில் சில அழகிய எளிதான் போஸ்கள் இருக்கு. பார்த்து பழ்க்குங்க.


  • குழந்தைகளுக்கு facebook இன் புதிய வசதி அறிமுகம்

பல மில்லியன் மக்களின் மனங்களை வென்ற சமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்ந்து முன்னிலையில் காணப்படுகின்றது.


இந்த முதலிடத்தை தக்கவைத்து மேலும் அதிகளவான பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியில் இடைவிடாது செயற்பட்டு பல வசதிகளை பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அதன் அடிப்படையில் கோப்புகளை பரிமாற்றும் வசதியினை தற்போது மேம்படுத்தி வழங்க முன்வந்துள்ளது.

ரூபா 10000 மதிப்புள்ள eMagMaker PDF Editor மென்பொருள் இலவசமாக கூகிள்சிறியில் இன்று பெறுங்கள்.

ரூபா 10000 மதிப்புள்ள eMagMaker PDF Editor மென்பொருள் இலவசமாக கூகிள்சிறியில் இன்று பெறுங்கள்.: eMagMaker PDF Editor is an easy to use, yet powerful PDF editor tool that works on Windows. eMagMaker PDF Editor allows users to review and annotate PDF documents, highlight text, fill PDF forms, add...

doPDF - இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள் 7.3.382

doPDF - இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள் 7.3.382:


doPDF மென்பொருளானது தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாடு இரண்டிற்க்கும் ஒரு இலவச PDF கன்வெர்ட்டராக உள்ளது. DoPDF பயன்படுத்தி உங்களுக்கு எந்த ஒரு "அச்சு" கட்டளையும் தேர்ந்தெடுத்து தேடக்கூடிய PDF கோப்புகளை உருவாக்கலாம். ஒரு கிளிக்கில் உங்களுக்கு PDF கோப்புகளை உங்கள் Microsoft Excel, Word அல்லது பதிவு ஆவணங்கள் அல்லது உங்கள் மின்னஞ்சல்களை மற்றும் பிடித்த வலைத்தளங்களை PDF கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

மேலும் படிக்க »

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf  
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்),  சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்https://passport.gov.in/pms/PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.

ஈமு மோசடி - பறிபோகும் 500 கோடி!


''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் 
இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.
'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம்.நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம்.இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.இதெல்லாம் எப்படி சாத்தியம்?

Wednesday, May 16, 2012

பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள்..


 வணக்கம்நண்பர்களே!!
தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .

இவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE  செய்ய பல மென்பொருட்கள் உள்ளன .

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER  ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE  செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER  ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் .

FastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1  MB ).பயன்படுத்துவதும் மிக எளிது.

தரவிறக்க சுட்டி 

Tuesday, May 15, 2012

ALCATEL, ZTE Dongle இனை unlock செய்வது எப்படி?

THANKS TO   http://www.nimzath.com/2012/03/alcatel-zte-dongle-unlock.html

Huawei  Dongle இனை unlock செய்வது எப்படி? என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா? அதைப்போன்று  இன்று Alcatel, ZTE Bluebelt / Silverbelt  போன்ற Dongle இனை unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதில், ALCATEL Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.

அனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker


இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model :  MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.


01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

http://www.mediafire.com/download.php?i44h2632c84r2xi 

or

http://dl.dropbox.com/u/53992679/DC%20Uclocker.rar

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?

Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.

Monday, May 07, 2012

இவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்?

ஒர் அரசியல்வாதி அரசியலுக்கு வருவதற்கு முன் என்ன தொழில் செய்தார் ? இப்போது என்ன தொழில்செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் தானே அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். 

எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.  அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.  

இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு நாட்டின் மிகபெரிய கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? 

அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.  

கடத்தப்பட்ட கலெக்டரின் வலைப்பதிவு.


அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக மாவோயிஸ்ட்களாக கடத்தப்பட்டதை அடுத்து அவர் கடத்தப்பட்ட கலெக்டர் என்றே அறியப்படுகிறார்.
ஆனால் அலெக்ஸ் மேனன் பற்றி வரும் செய்திகள் அவர் மக்கள் நலனில் எத்தனை அக்கரை கொண்டிருந்தார் என்பதையும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எப்படி துடிப்போடு செயல்பட்டு வந்தார் என்பதையும் உணர்த்துகின்றன.அலெக்ஸ் மேனனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பத்திரிகைகளில் பேட்டி மூலம் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் மீது நன்மதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?

ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...