உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, May 05, 2012

மே 13-ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு

சென்னை, ஏப். 30: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக மே 13-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 22-ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு, நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 13-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 32 மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும்.

தேர்வர்களுக்குரிய நுழைவுச் சீட்டுகள் மே 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த நகலினைக் கொண்டும் தேர்வு எழுதலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 26 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பரிசீலனைக்குப் பிறகு 12 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in  வெளியிடப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...