உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, May 07, 2012

கடத்தப்பட்ட கலெக்டரின் வலைப்பதிவு.


அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக மாவோயிஸ்ட்களாக கடத்தப்பட்டதை அடுத்து அவர் கடத்தப்பட்ட கலெக்டர் என்றே அறியப்படுகிறார்.
ஆனால் அலெக்ஸ் மேனன் பற்றி வரும் செய்திகள் அவர் மக்கள் நலனில் எத்தனை அக்கரை கொண்டிருந்தார் என்பதையும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எப்படி துடிப்போடு செயல்பட்டு வந்தார் என்பதையும் உணர்த்துகின்றன.அலெக்ஸ் மேனனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பத்திரிகைகளில் பேட்டி மூலம் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் மீது நன்மதிப்பை ஏற்படுத்துகின்றன.

இப்படி ஒரு இளம் கலெக்டரா,இவரை கடத்த தீவிரவாதிகளுக்கு எப்படி மனது வந்தது என்று தோன்றும் எண்ணங்களுக்கு மத்தியில் அலெக்ஸ் மேனன் ஒரு வலைப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.அதோடு அவரது வலைப்பதிவு மூலம் அந்த இளம் கலெக்டரின் எண்ண ஓட்டங்களையும் நம்பிக்கை மற்றும் ரசனையையும் அறிய முடிகிறது.அவர் எத்தனை அடக்கமானவராகவும் இருந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
ஐஏஸ் தேர்வி வெற்றி பெற்று 32 வயதில் கலெக்டராகி இருக்கும் அவரது வலைப்பதிவின் தலைப்பு ‘குறைகுடம்’.
தலைப்புக்கு ஏற்பவே எந்த வித ஆர்ப்பாட்டமோ கர்வமோ இல்லாமல் தனது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.ஆங்கிலமும் தமிழும் கலந்தே பதிவுகளை எழுதியிருக்கிறார்.
2006 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அலெக்ஸ் மேனன் 2008 ல் இந்த வலைப்பதிவை துவக்கியிருக்கிறார்.
தன்னுடைய பணி மற்றும் தனி வாழ்க்கை தொடர்பான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே வலைப்பதிவின் நோக்கம் என குறிப்பிடும் மேனன் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய பதிவுகளை எழுதுவதும் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.எளிமையான பணிவான மனித குலத்தை நேசிக்கும் மனிதர் என தன்னை அறிமுகம் செய்து கொள்வதோடு தான் இருக்கும் இடத்தில் நகைச்சுவையும் இருக்கும் என குற்ப்பிட்டுள்ளார்.
வலைப்பதிவின் கருத்து சுதந்திரம் பற்றியும் குறிப்பிடும் அவர் புத்தகங்கள் திரைப்படங்கள் இணையதளங்கள் பற்றிய எண்ணங்களை எல்லாம் பகிரவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதற்கேற்பவே பதிவுகளையும் எழுதியுள்ளார்.அதிக பதிவுகள் இல்லை என்றாலும் கலெக்டர் பணியில் துவங்கி சினிமா முதல் எல்லாவற்றையுமே எழுதியிருக்கிறார்.
அவருக்கு பிடித்த தமிழ படம் சுப்பிரமணியபுரம்.இந்த படம் பற்றிய பதிவில் வீழும் தமிழ் சினிமாவின் தரத்தை தூக்கி நிறுத்தும் மற்றொரு நன் முயற்சி என எழுதியுள்ளார்.படத்தில் வரும் அனுபவம் கல்லூரி காலத்தில் தனக்கும் உண்டு என்றும் எழுதியுள்ளார்.
மற்றொரு பதிவில் ஜப் வே மெட் இந்தி படத்தையும் ரஜினி நடித்த ஜானி படத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.இந்த இரண்டு படங்களுமே வணிக படங்களில் ஆழமான வாழ்வியல் விசாரணைக்கு தகுதியுடைய வெகு சில படங்களின் வகையை சேர்ந்தவை என தேர்ந்த விமர்சகர் போலவே குறிப்பிடுகிறார்.
அதே போல தன்னை வெகுவாக கவர்ந்த புரட்சியாளர் சே குவாரா பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.சேவின் மேட்டார் சைக்கிள் டைரிஸ் புத்தகத்தை வாசித்த அனுபவத்தை விவரிக்கும் பதிவில் இதனை காண முடிகிறது.
நடுவே சில கவிதைகளையும் எழுதிருக்கிறார் அல்லது மேற்கோள் காட்டியிருக்கிறார்.
மேனன் தனது சமூக பார்வையையும் தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.நித்தியானந்தா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய காலத்தில் எழுதியுள்ள இரண்டு பதிவுகள் அவரது சிந்தனை நிதானத்தையும் தெளிவையும் காட்டுகிறது.ஒரு பத்தியாளரின் நேர்த்தியோடு தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
ஒரு அரசு அதிகாரியாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மீட்ட்ங் எத்தனை மீட்டிங்கடா என்னும் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.அரசு எந்திரத்தால ரொம்பவே நொந்து போவதை இதில் சற்றே நையாண்டியாக வெளிப்படுத்தியுள்ளார்.அதே பொலவே சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது எப்படி என ஒரு புத்தகம் எழுதலாம் என நினைப்பதாக ஆரம்பித்து பொய் பேசுவதன் நிர்பந்த்தை விவரித்து இஆப பணியில் இருந்து உண்மை பேசி பிழைக்க முடியாது என குறிப்பிடுகிறார்.
மனித நேர்மையை எத்தனை முக்கியமாக நினைத்திருக்கிறார் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது .
சிவில் சர்வீஸ் தேர்வு எழுததுபவர்களுக்கு ஆலோசனையாக ஒரு பதிவும் குழந்தைகள் திரைப்படம் பற்றி ஒரு பதிவும் எழுதியிருக்கிறார்.எந்த பதிவிலும் அதிகாரத்தின் தெனி துளியும் கிடையாது.ஒரு சில பதிவுகளில் இளைஞர்களின் மொழியிலேயே எழுதியுள்ளார்.
அதே போல ஆரமப பதிவுகளுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு எழுத வரும் போது நம் வலைப்பூவையும் யாராவது வாசிப்பார்கள் என்ற இறுமார்ப்பிலே அறைகுறையாக விட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டு எழுதியவர் பிளாசகர் (பிளாக்+வாசகர்)என்னும் புது வார்த்தையையும் உருவாக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2011 ம் ஆண்டுக்கு பிறகு பதிவுகள் இல்லை.பணி சுமை அதிகரித்ததால் இருக்கலாம்.
இளமை துடிப்பான இந்த கலெக்டர் விரைவில் விடுவிக்கப்பட்டு தனது பணியை தொடர வேண்டும்.வலைப்பதிவையும் தான்!
பின்குறிப்பு;மேனன் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
—————
Related Posts Plugin for WordPress, Blogger...