உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, May 20, 2012

திருப்பூர் சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்,' என, கலெக்டர் மதிவாணன்தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உ<ள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது காலியாக உள்ள 184 மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், 251 சமையலர்கள் மற்றும் 274 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணியிடம்: கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பொது மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர். 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத பழங்குடியினர். வயது வரம்பு - பொது மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு விடப்பட்ட அல்லது விதவை பெண்களுக்கு 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சத்துணவு சமையலர் பணியிடம்: கல்வித்தகுதி - 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர். பழங்குடியினர் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது. வயது வரம்பு - பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் - 21 முதல் 40 வயதுக்குள். பழங்குடியினர் - 18 முதல் 40 வயதுக்குள், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர்: கல்வித்தகுதி - பொது மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் - ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. பழங்குடியினர் - எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும். வயது வரம்பு - பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் - 21 முதல் 40 வயது. பழங்குடியினர் - 18 முதல் 40 வயது. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் - 20 முதல் 40 வயது.விண்ணப்பதாரர் நியமன இடத்துக்கும், வசிக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். இருப்பிட சான்று, கல்வி சான்று நகல் மற்றும் ஜாதி சான்று நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.சத்துணவு பணியாளர் நியமனம் இனச்சுழற்சி அடிப்படையில் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 

எனவே, ஒவ்வொரு பகுதிக்கும், அறிவிக்கப்பட்ட சுழற்சியில் விண்ணப்பிக்கும் நபர், அந்த இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். காலி பணியிட விவரம் மற்றும் இன சுழற்சி முறை விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் வரும் ஜூன் 5 மாலை 5.45க்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடக்கும் இடம், நாள் மற்றும் நேரத்துடன் கூடிய அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.இதற்கென தனி படிவம் எதுவும் இல்லை. வெள்ளைத்தாளில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து, கல்வி, வயது, ஜாதி மற்றம் இருப்பிட சான்றிதழ்களின் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். சான்று இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...