உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, May 25, 2012

பெட்ரோலே இல்லாம வண்டிய ஓட்டுங்க... கூட்டணிய விட்டு வரமாட்டேன். - கருணாநிதி


நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை 77 ரூவாய் 95 காசுகள் அதிகரித்துள்ளது. 

இது சாதாரண விஷயம் கிடையாது. அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்து வருகின்றது.  மத்தியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான மம்தா பானர்ஜி கூட  கூட்டணியில் இருந்தாலும் கூட இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். 
அது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் கூட்டணியில் இருந்து  விலகுவோம் 
என்று பகீரங்கமாகவே தெரிவிக்கின்றார். அந்த முடிவினை தமிழ் நாட்டு மக்களுக்காக கருணாநிதி இதுவரை ஏன் எடுக்க முன்வரவில்லை என்றும் தெரியவில்லை??

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதலாய் மூன்று தொகுதிகள் கேட்டதற்காக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று சொன்னவர் 
இன்று தமிழ் நாட்டு மக்களின் மீது தொடர்ந்து சுமைகளை தூக்கி போடும் காங்கிரஸ் கூட்டணியில் 
இருந்து விலக மறுப்பதன் பின்னணி என்ன? 

அது போல கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று யாரைப் பார்த்து எதற்காக சொன்னார் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிர்கள், 
உடமைகளையும் இழந்து நின்ற போதும் வாபஸ் வாங்க முன்வரவில்லை. 

தற்போது பெட்ரோல் விலையை அதிகரித்த போது மத்தியில் இருக்கும் கட்சித் திமுக எம்பிக்கள் சென்று 
விவாதித்து  சொல்வார்கள் என்று தெளிவாய் பதில் அளித்து இருக்கின்றார். 

இன்னும் என்னென்ன விவாதிப்பார்களோ? எப்படி இவர்களால்  தமிழ் நாட்டு சனங்களை பார்த்து பேச முடிகின்றது என்றும் புரியவில்லை. மனசு உறுத்த வில்லையா?  
தன்னை பாசத் தலைவனே என்று பாராட்டிய தமிழ் உள்ளங்களுக்கு பாறாங்கல்லை தூக்கி எரிகின்றோமே என்றும் ஏன் இவர்களுக்கு புரியவில்லை?

இன்னும் எத்தனை எத்தனை கவிதைகளை , கதைகளை தமிழக மக்களுக்கு சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை.?
வாழ்க இவரது பணி ! வளர்க இவரது புகழ்! 
Related Posts Plugin for WordPress, Blogger...