உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, May 20, 2012

நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்காததால் அவலம்!

:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, அப்பகுதியில் இருந்த 33 கடைகள் இடிக்கப்பட்டன.ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும், ரோடு விஸ்தரிக்கப் படாமல் உள்ளது. தள்ளுவண்டி கடைகள் அதிகரிக்கத் துவங்கி விட்டன. மினி பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்கு வரத்து நெரில் அதிகரித்த வண்ணம் உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காமராஜர் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 33 கடைகள் இருந்தன. ஜவுளிக்கடைகள் மற்றும் செருப்பு கடைகள் செயல்பட்டு வந்தன. அவற்றின் மூலமாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. காமராஜ் ரோட்டில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, அப்பகுதியில் இருந்த கடைகளை இடிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 

வருவாய் இழப்பையும் பொருட்படுத்தாமல், அக்கடைகள் இரவோடு இரவாக இடிக்கப்பட்டன.இடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன. ஆனால், அப்பகுதியில் ரோட்டை விஸ்தரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை இடம் கேட்பதாக கூறி, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கடைகள் அவசர அவசரமாக இடிக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த விநாயகர் கோவிலும் இடிக்கப்பட்டது. ஆனால், ரோடு அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை தரப்பில் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை; அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.தேவையான இடத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கும் பணிகளை சட்ட ரீதியாக முடித்துவிட்டு, அதன்பிறகு கடையை இடித்திருக்க வேண்டும். மாறாக, தீர்மானம் நிறைவேற்றியதும் கடைகள் இடிக்கப்பட்டதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதித்துள்ளதே தவிர, மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை.

தற்போது, கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில், தள்ளுவண்டி கடைகளும், இரவு நேர சிற்றுண்டி கடைகளும் முளைத்து வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் குறுக்கு வீதிகளை பயன்படுத்திக் கொண்டிருந்த கட்டட உரிமையாளர்கள், காமராஜர் ரோடு பக்கமாக நுழைவாயில் ஏற்படுத்தி, பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆட்டோ ஸ்டாண்டுகளும் உருவாகியுள் ளன. பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெறுவதால், மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு வரு கின்றன. பழ வியாபாரிகளும் கடை அமைத்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே, கடைகள் இடிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேர்மாறான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மினி பஸ்களை நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் அசோக்குமாரிடம் கேட்ட போது,""கடைகள் இடிக்கப்பட்ட பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானது; இதுவரை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கவில்லை. வருவாய்த்துறை மூலமாக பெயர் மாற்றம் செய்த பிறகே, அடுத்தகட்ட பணிகளை முடிவு செய்ய முடியும்,'' என்றார்.மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது,""அதுகுறித்து கோப்புகளை பார்த்துத்தான் கூற முடியும்,'' என்று கூறினார்.இனியும் இதே நிலை தொடராமல் இருக்க, நேரடியாக கள ஆய்வு செய்தும், சிறப்பு கூட்டம் நடத்தி விவாதித்தும், அந்த இடத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும். ப்பிக்க வேண்டும், என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...