உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, May 17, 2012

gEdit - Text Editor விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தலாம்லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தும் அனைவரும் gEdit - Text Editor -னைப் பயன்படுத்தி இருபோம். gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் சிறப்பானதொரு உரை எழுதியாகும்.  GNOME  Desktop Environment -ல் gEdit இருப்பியல்பாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.

லினக்ஸ் இயங்குதளங்களைப் பொறுத்த வரையில் gEdit -னை விட சிறப்பான உரை எழுதிகள் இருக்கின்றன.  எடுத்துக்காடிற்கு Vim, Emacs, Nano போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

நாம் மேற்கண்ட Vim, Emacs, Nano உரை எழுதிகளையெல்லாம் முழுவதும் கட்டளைகளைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.  ஒரு சில பயனாளர்கள் இது போன்று கட்டளைக் கொண்டு செயல்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.  அவர்களுக்கு gEdit ஒரு மாற்றாகும்.

gEdit நிரல்கள் எழுதுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.  புதிதாக நிரல்கள் எழுதி பழகும் மாணவர்கள், பயனாளர்கள் gEdit -னைப் பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக நிரல்கள் எழுதிப் பழகுவார்கள்.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த gEdit Text Editor -னை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா.  ஆகையால் இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைத்தது.  தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

முதன்முதலாக நிரல்களை எழுதிப் பார்க்கும் மாணவர்கள், பயனாளர்கள்  Windows இயங்குதளத்தினுடைய Notepad -னைப் பயன்படுத்த வேண்டாம்.  நிரல்கள் எழுதும் ஆர்வத்தையே Notepad கெடுத்துவிடும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துக்கொண்டது.  ஒரு வரி எண்ணைக் கூட பிரதிப்பலிக்காத Editor.

அதற்குப் பதிலாக jEdit, gEdit, Notepad++ போன்ற உரை எழுதிகளைப்  பயன்படுத்தலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...