உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, May 03, 2012

இத்தாலியில் ஆராய்ச்சிப் படிப்பு வாய்ப்பு – (PhD Options) – பலவேறு துறைகளில்

இத்தாலிய தலைநகர் ரோமில் மூன்று முக்கிய பல்கலைகழகங்கள் உள்ளன. அவற்றில் ரோமா பல்கலைகழகம் – தோர் வெர்கட்டா வில் (http://web.uniroma2.it/home.php ) ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித் தொகைகள் தோராயமாக 70,000 ரூபாய் மதிப்பில் கிடைக்கும்.
மருத்துவம் , பொறியியல், உயிர் தொழில்நுட்பம், கலை, அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை, வரலாறு, மொழியியல், தகவல் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தாலியில் ஆராய்ச்சிப்படிப்புகளில் ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகின்றது.
உதவித்தொகை மற்ற நாடுகளைக்காட்டிலும் குறைவு என்றாலும் தரத்தில் ஏனைய ஐரோப்பியப் பல்கலை கழகங்களுக்கு இணையானதே !!!
நான் இந்தப் பல்கலைகழகத்தில் தான் தகவல் பாதுகாப்புத் துறையில் எனது ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். எனது ஆராய்ச்சிக்கூடத்திலும் ஓர் இடம் காலியாக உள்ளது.
விண்ணப்பங்களுக்கான விதிமுறைகள், தகுதி நிர்ணயம் ஆகியன கீழ்க்காணும் சுட்டியில் உள்ளது.
http://dottorati.uniroma2.it/index.php?option=com_content&view=article&id=698&Itemid=224

விண்ணப்பிக்க கடைசித் தேதி – மே 2.
தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுடன் ஏற்கனவே ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் மேற்படிப்பு படித்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். மருத்துவம் சார்ந்தத் துறைகளில் ஆராய்ச்சிப்படிப்பிற்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.அடுத்த கல்விவருடத்தில், ரோம் நகரத்தில் தமிழ் குரல்களின் எண்ணிக்கை அதிகம் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இத்தமிழ் வையகம் … விபரங்களைத் தமிழில் பிற தமிழ்நாட்டு, தமிழ் பேசும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
tதகவல் : வினையூக்கி
Posted: 02 May 2012 07:17 AM PDT
நிலக்கரி சுரங்கம்
நீங்கள் CA/ ICWA முடித்தவர்களா? உங்கள் தகுதிக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் அக்கவுண்டென்ட் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 10.4.2012.
மத்திய போலீஸ் படை
நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI படித்தவரா? உங்கள் தகுதிக்கு மத்திய போலீஸ் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.4.2012.
 CRPF
நீங்கள் ரேடியோ இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ்/கம்யூட்டர் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்தவர்களா? உங்கள் தகுதிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.4.2012.
Related Posts Plugin for WordPress, Blogger...