உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, June 30, 2012

அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா? அப்ப படியுங்கள் இதை)
அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்குதெரியவில்லையாஅப்ப படியுங்கள் இதை)

ஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10ரூபாய் தருகிறேன் என்றான்உடனே கிராம மக்கள் ஊரில்உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயைவாங்கி கொண்டார்கள்ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும்பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததுஅதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

Friday, June 29, 2012

குடியரசுத் தலைவரை "சிபிஐ" விசாரிக்கலாமா? கூடாதா?


2 ஜி ஊழல் வந்தப்ப சுப்பிரமணிய சுவாமி சிதம்பரத்துல இந்த வழக்குல சேக்கணும்னு சொன்னாரு. ஆனா சி பி ஐ மத்திய உள்துறை அமைச்சர் மேல வழக்கு பதிய செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லேன்னு சொல்லிடுச்சு.
 வழக்குன்னு வந்தா எல்லோரும் ஒண்ணுதானே..கூப்பிட்டு விசாரிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்களால முடியாதுன்னு கைய விரிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ என்ன டவுட்டு னா இப்போ மத்திய நிதித் துறை அமைச்சரா இருக்கிற பிரணாப் முகர்ஜிய எதுக்கு குடியரசுத் தலைவரா உட்கார வைக்கணும்? காங்கிரசுல அப்புறம் வேற ஒரு நல்ல தலைவரே இல்லையா? அதை அவங்களே ஒத்துக்கிறாங்களா?

பிரணாப் முகர்ஜி மட்டும்தான் அங்கே திறமையானவரா இருக்காரா? ஒருவேளை நாளைக்கு அவர் குடியரசுத தலைவர் ஆயிட்டாருனா?!!? ஒரு வேளை நாளைக்கு நிதித் துறையிலே ஏதாவது பிரச்சினை வர்றப்ப அப்பவும் சி பி ஐ அவரை விசாரிக்காம இருக்கிறதுக்கு இப்படி அவரை மட்டுமே குடியரசுத் தலைவரா வைக்க ஆசைப்படு றாங்களோ? ஏன் காங்கிரசுல பிரணாப் தவிர ஒரு ஆள் கூட உருப்படியா இல்லையா?

மதச்சார்பற்ற கட்சி என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஏன் ஒரு சிறுபான்மையினரை குடியரசுத்தலைவராக, ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க கூடாது! இது போன்று எத்தனையோ கேள்விகள் இருக்கின்றது.? 

எனது நண்பன் ஒருவனிடம் (காங்கிரஸ் கட்சிக்காரன்) னிடம் இது பற்றி கேட்டதற்கு அவன் சொன்ன பதில், " அதுல அமௌன்ட் ரொம்ப அடிக்க முடியாதுப் பா? 
 
எது எப்படியோ எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?!!!? நாம என்னத்த சொல்ல? "

ஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்????

என்ன தலையை சுத்துதா? 

இது ஏதோ வெளிநாட்டு சரக்கோ அல்லது ஏதாவது பிரபலம் குடிச்ச எச்சி பாக்கெட் ஏலத்துல வந்ததோ கிடையாதுங்க..நம்ம உள்ளூருல ரெடியான போலி ஐஎஸ்ஐ முத்திரை மாடல் குத்தின ஆடுனரி காலி வாட்டர் பாக்கெட்டு தாங்க???
போன வாரம் வரை நம்ம சென்னையிலே அடிச்ச வெயில்ல அவனவன் தண்ணிக்கு என்னமா அலைஞ்சானு அவனுகளுக்குத் தான் தெரியும்..கிடைச்ச ஜூசை எல்லாம் குடிச்சி வைச்சானுங்க..வாட்டர் பாக்கெட் 3 ரூவாய் நா கூட வாங்கி குடிச்சானுங்க. 

அப்படி எவனோ அல்லது எவளோ குடிச்சி போட்ட காலி வாட்டர் பாக்கெட்டோட விலைதான் இன்னிக்கு 68750 ரூவாய்??!!!??

அதுல என்னாங்க அப்படி ஒரு விசேசம், அந்த பாக்கெட்டு தங்கத்துல செஞ்சதாங்க, இல்லையே...அப்புறம் எப்படி???


போன வாரம் வரைக்கும் வெயிலுக்கு தாகத்துக்கு குடிச்சிட்டு ரோட்டுல போட்ட காலி பாக்கெட்டுல நேத்திக்கு பெய்ஞ்ச சின்ன தூறல்ல நல்லா வழு வழு னு மின்னிக்கிட்டு இருந்துச்சி..

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் புதியதாக பதிய / புதுபிக்க

வேலைவாய்ப்பு அலுவலங்களுக்குச் செல்லாமலே உங்களது வேலைவாய்ப்புப் பதிவினை ஆன்லைன் மூலமாக எளிமையாக புதியதாக பதியவும் , புதுபிக்கவும் முடியும்.

புதியதாக பதிபவர்களுக்கான சுட்டி : Click here for new User ID Registration
பதிவை புதுபிப்பதற்கான சுட்டி : http://tnvelaivaaippu.gov.in/Empower/  -  ல் Renewal தேர்வு செய்யவும்

Renewal செய்பவர்கள் கவணிக்க வேண்டியவை
User Name : _________________
(User Name 16  இலக்கத்தில் இருக்க வேண்டும்.
அ. முதல் மூன்று இலக்கம் நீங்கள் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்
ஆ. திவு செய்யப்பட்ட ஆண்டு
இ. ஆண் M (அ) பெண்  F
ஈ. பதிவு எண்  (8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், உங்களின் பதிவு எண் 4 இலக்கம் எனில் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்)

எடுத்துக்காட்டு :
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்:      CHP  (தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை)
பதிவு செய்ய ஆண்டு : 1999
ஆண் / பெண்   :   M
பதிவு எண்         :  5775
Therefore :              CHP1995M00005775

கடவுசொல் (password)
உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.
username : CHP1995M00005775
password : dd / mm / yyyy

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, ஜூன் 27: பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.
 இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Source : dinamani

நம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி? 


நம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி?   

நம்முடைய வாசகர்கள் இதுவரை நம் போஸ்ட்களை Feedburner subscription மூலமாக பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் மெயில் செக் செய்தால் மட்டுமே நம்முடைய நியூ போஸ்ட்ஸ் பற்றி தேடாமல் அடிக்கடி தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அவர்கள் அலைபேசிக்கும் நம் போஸ்ட்ஸ் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அனுப்பலாம்.


இந்த சேவையை நமக்கு கூகுள் வழங்கி உள்ளது.
எப்படி என பார்ப்போம்.


முதலாவதாக  கூகுள் Search இல்  "Google SMS Channels" என தேடவும்.


அதில் இப்போது இந்த லிங்க் வரும் http://labs.google.co.in/smschannels/browse .

Tuesday, June 26, 2012

கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொரு ளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதா வது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரி யாக வேலை செய்யாவிட்டால், மாற் றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினா ரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானி ட்டர் வெறுமையாகிவிட்டது.

மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கி றார். உடனே, ‘லாப்_டாப் வாங் கிய நிறுவனத்தைக் கேட்ட தில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக் கில்’ செருக வில்லை. அத னால் அது எங்கள் தவறு இல் லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட் டிக்கழித்து விட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியார ண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற வுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்க வில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கி றோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி _ வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடி விட்டா ர்கள் பாருங்கள்!

பட்டா சிட்டா அடங்கல்..


சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.    இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்..!!

குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?

குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?,Birth control கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.
முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும்காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.


இரண்டாவது எளிமையான முறை
கருமுட்டை, கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்துகொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மூலமும் கரு முட்டையும், கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருந்துவதன் மூலம் கரு வளர்வதைக் தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும், மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் கைக்கொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்.
2. நீண்ட நாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் அறிதல்
3.அது தாய்ப்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும் தாயப்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்துவிட வாயப்புள்ளதா என்னும் அறிய வேண்டும்.
4.பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்குமா என்பதை அறிதல்
5.கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா? ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா? ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

Monday, June 25, 2012

முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பாளர்

ஆண்டு


ஆகாய விமானம் (Aeroplane)
ரைட் சகோதரர்கள்
1903

தூசிப்படலம் (Aerosol))
எரிக் ரோதிம்
1926

காற்றுக் குழாய் (Air pump))
ஒட்டோ வான் கியூரிக்
1654

ஆம்புலன்ஸ் (Amnulance)
பரோன் டொமினிக் ஜீன் லேரி
1792

அனஸ்தீஸியா (Anaesthesia)
வில்லியம் மோர்டன்
1846

நீர் மூழ்கு குழாய் (Aqualung)
கௌஸ்டியா மற்றும் காங்னன்
1943

ஆஸ்பிரின் (Aspirin)
கோல்பே, ஹெயின்ரிச்
1859

ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக)
ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி)
1899

அணு குண்டு (Atom bomb)
ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ்
1939

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள்   தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண்  (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு
ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

Sunday, June 24, 2012

விண்வெளித்திருவிழா 2012 கோவை

மேலும் விபரங்களுக்கு 
Dr. D. Mangalaraj 
Coordinator, Space Festival,
Professor and Head,
Nano Science and Technology,
Bharathiar University,
Coimbatore - 641046

Voice: 0422 2428421, 2425458
Hand: 98947 62141
Fax: 0422 2422387, 2425706
Email : dmraj800@yahoo.com, dmraj800@gmail.com, mangalaraj@buc.edu.in

Saturday, June 23, 2012

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற


இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை
நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.

PNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:
இணையத்தின் மூலம் பதிவு :
1)      முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.
2)      தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
3)      அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில்  sms ஆக வந்து சேரும்.

Friday, June 22, 2012

Computer Start செய்யும் போது பிரச்சனையா ?

உங்கள் கம்ப்யூட்டர்  இயங்க  தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.


எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

start up slow for your pc

Sunday, June 17, 2012

உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software

உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software:
நாம் பெரும்பாலும் உபயோகபடுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகமாக உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்கள் நிருவபட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும். ஆகவே நம்முடைய டேட்டாவை பாதுக்காக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய டேட்டா தானாகவே(automatic) எடுக்கும் வசதி.
கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு வரும் exe பைலை இயக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
 • இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • இந்த பக்கத்தில் இந்த மென்பொருளை பற்றிய அனைத்து செய்திகளும் விரிவாக கொடுக்க பட்டு உள்ளன. உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து பார்த்து கொள்ளவும்.
 • Backup என்பதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்க விரும்பும் folder அல்லது files களை Addfolder பட்டனை உபயோகித்து சேர்த்து கொள்ளுங்கள்.
 • நீங்கள் ஒட்டுமொத்தமாக Full Drive கூட தேர்வு செய்து கொள்ளலாம்.

 • அடுத்து Next க்ளிக் செய்தால் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் உங்கள் backup பைலுக்கு Password போட நினைத்தால் போட்டு கொள்ளலாம்.
 • Next அழுத்தினால் வரும் விண்டோவில் நீங்கள் Backup எடுக்கும் நேரம் ஆகியவைகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • அடுத்து Save என்பதை க்ளிக் செய்து வரும் சப் மெனுவில் Save and Run கொடுத்தால் உங்கள் பைல் Backup ஆகி விடும்.
 • நீங்கள் டைம் செட் செய்திருந்தால் அந்த நேரத்திற்கு உங்கள் பைல் தானாகவே Backup ஆகி விடும்.

வீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு


பல்வேறு விதமான வீடியோ கோப்புகள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித் தனி பார்மெட்டில் இருக்கும்.
அவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில கோப்புகள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
வீடியோக்களை மாற்றம் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்று தான் AIO Video Converter. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.
பின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.
இந்த அப்ளிகேஷனின் அமைப்பை(Setting) உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ கோப்பாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற

நாம் காப்பி செய்யும் சிடிகளில்  அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

Employment News : Employment News for this week - Job Highlights (16 Jun – 22 Jun 2012)

Employment News : Employment News for this week

This week from 16th June 2012 to 22nd June 2012, the Employment News weekly update brings a lot of opportunities for job seekers particularly in Railways.
Railway Recruitment Boards invite applications for 12042 post of Technicians.
Carana Bank requires 2000 Probationary Clerks.
Corporation Bank requires 1550 Single Window Operators (Clerks).

Job Highlights  (16 Jun – 22 Jun 2012)

Railway Recruitment Boards invite applications for 12042 post of Technicians.
Last Date: 16.07.2012

Carana Bank requires 2000 Probationary Clerks.
Closing Date for online Registration : 01.07.2012

Corporation Bank requires 1550 Single Window Operators (Clerks).
Last Date for one Registration: 26.06.2012

United Bank of India needs 751 Single Window Operators ‘A’ (In Clerical Cadre).
Last Date for online Registration : 22.06.2012.

Footwear Design & Development Institute, Noda invites applications for 105 non-academic posts.
Last Date : 30 days after publication.

Ordnance Factory, Dehu Road, Pune requires 82 Boiler, Attendant, Fitter, Machinist, Turner, Examiner etc.
Last Date: 21 days after publication.

Public Service Commission, Uttar Pradesh invites applications for 79 various posts.
Last Date: 16.07.2012.

Indian Navy invites online applications from unmarried Male candidates for enrolment as Sailors for Artificer Apprentice (AA)-133 Batch.
Last Date: 06.07.2012

Indian Institute of Technology, Kanpur requires 7 Deputy Registrars Medical Officers ad Assistant Physical Education Officer.
Last Date: 06.07.2012.
this is a test message

Railway Jobs - Railway Recruitment Board 12042 Technician Posts - Last date 16.7.2012
Railway Recruitment Boards invite applications for 12042 technician posts

The centralised employment notice has been issued on 16.6.2012 by the Railway Recruitment Board, applications are invited from eligible Indian Nationals for the posts of Technicians.  The date of written examination will be held on 16.12.2012 and the closing date 16.7.2012.

Educational Qualifications for the posts of Technicican Gr.II, candidates should be passed 1st year B.Sc(Physics) and for other Technician posts applicants should be passed Act Apprenticeship/ITI approved by NCVT/SCVT with matriculation.

Age limit : Candidates age should be between 18 to 30 years as on 1.7.2012 and age relaxations will be extended as per rules.


The other terms and conditions are available in the Notification (Centralised Employment Notice No.04/2012) issued by the RRB.

Please click here to download the Notification
this is a test message
Original enclosure (RRB-for-Technician-Last-Date_16.07.2012.pdf)

Saturday, June 16, 2012

என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

THANKS TO Kalyanasundaram Ramachandaran.

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

Tuesday, June 12, 2012

உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்

Thanks to Abdul Basith நாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.

Saturday, June 09, 2012

தமிழ் கோப்புகளை PDF ஆக மாற்ற PDF Cute Writer..

வணக்கம் நண்பர்களே.. நம்மில் பெரும்பாலானோர் பி.டி.எப் கோப்புகளைப் பற்றி அறிந்திருப்போம். PDF என்பது Portable Document File என்பதின் முதல் எழுத்துக்களை மட்டும் கொண்ட சுருக்கமாகும். இதன் நன்மைகளைப் பற்றி நாம் ஏற்கனவே அறிவோம். 


convert tamil document to pdf
இணையத்தில் PDF கோப்புகளாக மாற்ற நிறைய இணைதளங்கள் இருக்கின்றன. அவற்றில் நம்முடைய கோப்புகளை Upload செய்து அவற்றை PDF கோப்பாக மாற்றி அதனை மீண்டும் Download செய்து பெறுவோம். இதுதான் வழக்கமான நடைமுறை.
ஒரு சிலர் PDF கோப்புகளாக மாற்ற PDF convertor மென்பொருள்களையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு அதில் கோப்புகளை ஏற்றி வேண்டிய கோப்புகளை PDF வடிவில் பெறுவோம்.

MS-Word-ல் text to table வசதி

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலபேர் MS-word உபயோகித்துக் கொண்டிருப்போம். இதில் அடங்கியுள்ள வசதிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் TEXT TO TABLE வசதி..


இதில் உள்ள TEXT TO TABLE வசதியின் மூலம் உங்களுடைய டெக்ஸ்ட்டை டேபிளாக convert செய்துகொள்ள முடியும். 

text to table in ms-word
இதற்கு Insert மெனு சென்று table ஆப்சனை கிளிக் செய்து அதில் தோன்றும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Monday, June 04, 2012

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

Sunday, June 03, 2012

ICDS Anganvadi Workers Recruitment News - at Thiruppur

Thiruppur Govt Technical Training Institute Admission

SSA Differently Abled Children Free Medical Camp News - at Thiruppur

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - [பகுதி 2]


இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது. கடந்த பகுதியில் சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" 
- என்பது பற்றி முதல் பத்து இனங்களை [பகுதி - 1] ல் பார்த்தோம். தற்போது மீதமுள்ள 10 இனங்களை பற்றி [பகுதி 2] பார்ப்போம். என்னுடைய முந்தய பதிவு சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - [பகுதி 1]

Saturday, June 02, 2012

தமிழில் MS OFFICE 2007


<%MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.

பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

 • Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
 • Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in:என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
 • Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxesஎன்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
 • Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு Add என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.
 • Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
 • பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...