உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, June 12, 2012

உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்

Thanks to Abdul Basith நாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.

அதிகமான தளங்களில் உலவு ஓட்டுபட்டைகளை காண முடியும். தற்போது உலவு தளம் அதன் டொமைனை புதுபிக்காததால் உலவு ஓட்டுப்பட்டை வைத்திருக்கும் அனைத்து தளங்களும் உலவு தளத்திற்கு சென்று,  பின்வருமாறு செய்தி காட்டுகிறது.


இதனை தவிர்ப்பதற்கு உங்கள் தளத்தில் இருந்து உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும். பிழை சரி செய்யப்பட்ட பிறகு ஓட்டு பட்டையை வைத்துக் கொள்ளலாம்.

உலவு ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி?

பழைய ப்ளாக்கர் தளத்தில் Edit Html பக்கத்திற்கு சென்று Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.

புதிய ப்ளாக்கர் தளத்தில் Template பக்கத்திற்கு சென்று  Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.


அதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில்Proceed என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.


அதில் Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு  "Cntrl + F" அழுத்தி பின்வரும் உலவு ஓட்டுபட்டையின் நிரலை தேடி கவனமாக  Delete செய்யுங்கள்.

<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>


பிறகு Save Template என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

தகவல்: உலவு தளத்தினர் ewebguru.com தளத்தின் மூலம் டொமைன் வாங்கியுள்ளார்கள் என நினைக்கிறேன். உலவு முகவரி 2013-ஆம் ஆண்டு தான் காலாவதியாகிறது. உலவு தளத்தினர் ewebguru.com தளத்தில் டொமைனை புதுப்பித்தால் தான் தளம் வேலை செய்யும்.
Related Posts Plugin for WordPress, Blogger...