உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, June 17, 2012

வீடியோக்களின் பார்மெட்டை மாற்றம் செய்வதற்கு


பல்வேறு விதமான வீடியோ கோப்புகள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித் தனி பார்மெட்டில் இருக்கும்.
அவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில கோப்புகள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ கோப்புகளை மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
வீடியோக்களை மாற்றம் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்று தான் AIO Video Converter. இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.
பின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.
இந்த அப்ளிகேஷனின் அமைப்பை(Setting) உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ கோப்பாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...