உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, June 23, 2012

ரயில்வே டிக்கெட் மாறுதல் நிலவரங்களை இலவசமாக உங்கள் மொபைலில் பெற


இந்தியாவில் நெடு தூரப் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் தொடர்வண்டி பயணத்தை தான் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு பயணம் மேற்கொள்ள நாம் பயணச்சீட்டை முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் நமக்கு அமர இருக்கை கிடைப்பது எளிதாகும். பயணச்சீட்டை பதிவு செய்த உடனேயே அனைவருக்கும் இருக்கை கிடைக்காது. பலநேரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவோம். அவ்வாறு வைக்கப்பட்ட தருணதில் நமக்கு இடம் கிடைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள இணையத்தை
நாடவேண்டும். இனி PNR status அறிந்துகொள்ள ஒவ்வொருமுறையும் இணையத்தை நாட வேண்டிய அவசியமில்லை.

PNR status இலவசமாக sms மூலம் அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள்:
இணையத்தின் மூலம் பதிவு :
1)      முதலில் www.mypnrstatus.com இணையதளத்திற்கு விரையுங்கள்.
2)      தளத்தில் உங்களது PNR எண் மற்றும் தகவல்பெற விரும்பும் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்.
3)      அவ்வளவு தான் உங்கள் பயணச்சீட்டில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இனி உங்கள் மொபைலில்  sms ஆக வந்து சேரும்.

இணையவசதி அற்றோர் தங்களது மொபைல் மூலமாக எப்படி இந்த வசதியைப் பெறுவது:
Ø  மொபைலில் MYPNR என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு பின் தங்களது பத்து இலக்க PNR Number ஐ டைப் செய்து இந்த குறுந்தகவலை
92200 92200 என்ற எண்ணிற்கு அணுப்பவும். 
எடுத்துக்காட்டு MYPNR0123456789 to 9220092200.
இனி டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு நீங்கள் அதனை பின்தொடர வேண்டாம் இனி நிலவரங்கள் உங்களை பின்தொடரும் நீங்கள் நிம்மதியாக இருங்கள்.
இந்த சேவை முற்றிலும் இலவசமானது .
Related Posts Plugin for WordPress, Blogger...