உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, June 09, 2012

MS-Word-ல் text to table வசதி

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலபேர் MS-word உபயோகித்துக் கொண்டிருப்போம். இதில் அடங்கியுள்ள வசதிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் TEXT TO TABLE வசதி..


இதில் உள்ள TEXT TO TABLE வசதியின் மூலம் உங்களுடைய டெக்ஸ்ட்டை டேபிளாக convert செய்துகொள்ள முடியும். 

text to table in ms-word
இதற்கு Insert மெனு சென்று table ஆப்சனை கிளிக் செய்து அதில் தோன்றும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு டாக்குமெண்ட்டில் 

ராமன் tamil 50 english 56 science 70
பவளம் tamil 50 english 56 science 70

என இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதை டேபிளாக மாற்ற வேண்டும் முதலில் டேபிளாக மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டை தேர்வு செய்துகொள்ளவும்.
பிறகு Insert=>table=>convert text to table என்பதை கிளிக் செய்யவும்.
தோன்றும் விண்டோவில் separate text at என்பதில் உள்ள ஆப்சன்களில் உங்களுக்கு டேபிள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுங்கள். 
உதாரணமாக ஒவ்வொரு வார்த்தையும் ஒரு coloum ஆக மாற்றப்பட வேண்டும் எனில் other என்பதில் கிளிக் செய்து அந்த கட்டத்தில் ஒரு Sapce மட்டும் தட்டுங்கள். நான் கீழிருக்கும் டெக்ஸ்ட்டை டேபிளாக மாற்ற அவ்வாறு செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு space இடைவெளி இருக்கும் என்பது பொதுவான விதி. அதன்படி நான் இதை டேபிளாக மாற்றியிருக்கிறேன். 

மாற்றப்பட்ட டெக்ஸ்ட் டேபிளாக கீழே..

ராமன்
tamil
50
english
56
science
70
பவளம்
tamil
50
english
56
science
70

மேலும் உங்களுக்கு எத்தனை column - எத்தனை row இருக்க வேண்டும் என்பதை Number of columns, Number of Rows என்பதில் எண்களை உள்ளிட்டு நீங்கள் தீர்மானிக்கலாம். இறுதியாக ok என்பதைச் சொடுக்கினால் நீங்கள் விரும்பியபடி உங்களுடைய டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்பட்டிருக்கும்.

இதில் tabs என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு டேப் இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

Paragraph என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Paragraph இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும். 

Commas என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Comma இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

இவ்வாறு உங்களுடைய டெக்ஸ்ட்டை நீங்கள் Ms-word ஐப் பயன்படுத்தி எளிதாக டேபிளாக மாற்றம் செய்துகொள்ள முடியும். பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..!

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!


Thanks to : http://www.thangampalani.com/2012/05/ms-word-text-to-table.html#ixzz1xJjxw328
Related Posts Plugin for WordPress, Blogger...