உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, July 31, 2012

டிரைவிங் லைசென்ஸ்---உபயோகமான தகவல்கள்,

அ முதல் ஃ வரை... லைசென்ஸ்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து பயந்து ஓட்டினார்கள்!

இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, லைசென்ஸ§க்கே விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று தவறான நினைப்பில் இருப்பவர்களும் நிறைய!

‘லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பல விதங்களில் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்’ என்கிறார், சென்னை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

லைசென்ஸ் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார் இங்கே...

பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?

Tuesday, July 24, 2012

"AMWAY " நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்...

    Face Book ல் சதீஸ்குமார் சுந்தரேசன் அவர்களின் பதிவு


"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல். 

Sunday, July 22, 2012

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.


இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்
 
 


நன்றி

Employment News for this week - Job Highlights (21 Jul - 27 Jul 2012)

Job Highlights (21 Jul - 27 Jul 2012)


Sashastra Seema Bal requires 1524 Constable (Tradesmen). 
Last Date : 09.08.2012.

Sashastra Seema Bal requires 244 Sub- Inspector (Pioneer), Head Constable (Electrician) and Head Constable (Workshop).
Last Date: 31.08.2012

Sashatra Seema Bal invites applications for recruitment of 158 Para-Medical Staff.
Last Date: 31.08.2012

Intelligence Bureau requires 750 Assistant Central Intelligence Officer Grade II/Executive.
Last Date : 30 days after publication.


Union Bank of India requires 598 Specialist Officer.
Last Date of online Application : 31.07.2012

Western Railway requires 111 Commercial Clerk, Goods Guard, Junior Clerk-cum-Typist, Stenographer,
Technician, Ticket Examiner etc.
Last Date: 23.07.2012.

Eastern Railway requires 223 Technician Grade-III, TR Trains Clerk, Commercial Clerk and Chief Law Assistant.
Last Date : 06.08.2012.

Ordnance Clothing Factory, Avadi requires 216 Tailor, Fitter, Electrician Carpenter etc.
Last Date : 21 days after publication.

Integrated Headquarter of Ministry of Defence (Navy) requires 116 Draftsman Grade-III Group C.
Last Date : 30 days after publication.

Indian Oil requires 101 non-executive personnel.
Last Date : 27.08.2012. 

this is a test message

Thursday, July 19, 2012

coco cola தொடர்ந்து குடிக்கின்றீர்களா....ஆபத்து
நீங்கள் coco cola வை சாப்பாட்டுக்கு முன்..அல்லது சாப்பாட்டுக்கு பின் என தொடர்ந்து குடிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.coco cola வில் 3.5 % கஃபயின் சித்தரேற்,சித்திர்க் அசிட்,ஃபொஸ்ஃபோரிக் அசிட் போன்ற அமிலங்கள் இருக்கின்றன.ஒரு பரிசோதனையில் ஒரு முட்டையை coco cola வில் அமிழ்த்தி ஒரு வருடம் முடிந்தபின்னர் அவதானித்த போது அம்முட்டையின் கோது காணாமல் போய்விட்டது.எனவே இதில் இருக்கும் அமிலங்கள் நமது இரப்பை,வயிறு போன்றவற்றை இதேபோல் பாதிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...அந்தப்பரிசோதனை கீழே...ஆனால் coco cola வில் இருக்கும் அமிலத்தின் அளவைவிட நமது இரைப்பையில் இருக்கும் அமிலம் வலிமையானது அத்துடன் பாதுகாப்பிற்காக ஒரு படலமும் இருக்கின்றது...ஆனாலும்....நமது உடல்னிலை பற்றிய கவனம் அவசியம் ...coco cola வை குடிக்காமல் நிறுத்துவது கடினமாயினும்...குடிப்பதை சற்றுக்குறைத்துக்கொள்ளலாம்

coco cola யாரால் எப்படி உருவானது


நீயா நானா : விஜய் டிவி இப்படிச் செய்யலாமா?


மோகன்குமார் தமிழ் பேப்பர் வலைதலத்தில் இருந்து.........  

சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா?


சுவிட்சர்லாந்து! ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையின் சரிவில் இருக்கும் ஒருசின்னக் குட்டி நாடுஅங்கே அழகு அழகான ஏரிகள்.  சாக்லெட்டுகள்,கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்றவை அங்கே மிக மிகப் பிரபலம்அதை எல்லாம் தாண்டி நிற்பவை சுவிஸ் வங்கிகள்.

உலகிலேயே நம்பர் ஓன் ரகசிய வங்கிகளின் தாயகம் என்று சொல்லலாம்தப்பே இல்லை. நேர்மையான காரணங்களில் தொடங்கி, அடாவடித்தனமாகச் சேர்த்தபணம் வரை அங்கே கொட்டிக் குவிந்து கிடக்கின்றன. கழுத்தை வெட்டினாலும்காட்டிக் கொடுக்காத நேர்மை சுவிஸ் வங்கிகளிடம் இருக்கிறது. அங்கு மட்டும்தான் இது நடக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை.

உலகில் பல்வேறு குட்டித் தீவுகள்பிரிட்டிஷ் காலனிகள்அமெரிக்க அரசின்ஆதரவு பெற்ற பசிபிக் பவளத் தீவுகள் போன்ற பல இடங்களில் இந்த மாதிரியானதொலைகடல் வங்கித் தொழில்கள் (Offshore Banking) பிரசித்தி பெற்றவை.இருந்தாலும்ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில் சுவிட்சர்லாந்து நாடுதான் நம்பர் ஓன்.

பன்னாட்டு கம்பெனியின் சோடாவுக்கு சொல்லுங்க போடா...கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டா இல்லைன்னா கொஞ்சம் வயிறு சரியில்லைனா உடனே எடுடா சோடாதான் சில பேருக்கு. சில பேருக்கு சோடா குடிக்கலைன்னா துக்கமே வராது. சரக்கடிக்கறதே கெடுதல் தான் ஆனாலும் கொஞ்சம் பேருக்கு சரக்கோட சோடா கலந்து குடிச்சாதான் குடிச்ச மாதிரியே இருக்கும். ஆனால் ஏதோ கொஞ்சமா குடிச்சா பிரச்சனை இல்லை சோடாவை,சுத்தமா குடிக்காமையே இருந்தா நல்லது தான் சாராயத்தை. சரி சோடாவை அதிகமா குடிச்சா என்ன ஆகும்? பாத்துடலாம்....

1. சோடாவில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எனும் அமிலத்தால்...உங்கள் எலும்புகள் மற்றும் பல் ஈறுகள் வலுவிழந்து போகும்.


2. சோடாவில் இருக்கும் அதிகமான செயற்கை இனிப்புகள் மேலும் மேலும் உங்களை குடிக்க சொல்லும், சோடா மற்றும் சரக்கு ரெண்டையும்தான்.


3. கலருக்காக சோடாவில் சேர்க்கப் படும் கராமெல் எனும் வேதிப்பொருள்  சில பக்க விளைவுகளை தரக் கூடியது. மேலும் இந்த வேதிப்பொருள் அழகு சாதனா பூச்சுகளுக்கு பயன்படுத்தப் படுவது.

4. பார்மால்டிஹைட்  எனும் கேடு தரும் வேதிப்பொருள் சோடாவில் சேர்க்கப் படுவதில்லை..ஆனால் சோடா உங்க வயித்துக்குள்ள போனதுக்கு பின்ன கலக்குர கலக்கலில் உடனடியா பார்மிக் ஆசிட் & பார்மால்டிஹைட் உருவாகும் இது உங்க வயித்துக்கு கேடு விளைவிக்க கூடியது.

5. இதில் சேர்க்கப்படும் சக்கரை கரைசல் கொழுப்பை உருவாக்க கூடியது. இது மேலும் மேலும் பசியை தூண்டி விடுவதால் தேவை இல்லாமல் அதிகமா சாப்பிட்டு உடல் எடை கூடும்.

6. சோடா கெட்டு போகாம இருக்க இதில் சேர்க்கப்படும் ப்ரசர்வேட்டிவ் பொட்டாசியம் பென்சொட் எனும் வேதிப்பொருள்...உங்க வயித்துக்குள்ள போனதும் பென்சினாக மாறிடும். இதுவும் உங்க வயித்துக்கு கெடுதல்தான்.

7. இதுல சேர்க்கப்படும் உணவு சாயங்கள் மூலம்...உங்கள் மூளை நாளடைவில் சுறுசுறுப்பை இழந்திடும், நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உங்கள் இதய துடிப்புகள் கண்ட்ரோல் இல்லாம அதிகமாகும்.

அதனால குடிக்காதிங்க...குடிக்க வேண்டிய தேவை இருந்தாலும் கொஞ்சமா உள்ளூர் சோடாவை மட்டுமே குடிங்க....      

ரூ.25 ஆயிரத்திற்கு உட்பட்ட சொத்துகளுக்கு இன்று முதல் முத்திரைத்தீர்வை, பதிவுக்கட்டணம் கிடையாது


சென்னை, ஜூலை.5- விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.  புதிய வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளர் சுனீல் பாலிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வழிகாட்டி மதிப்பின் உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, July 15, 2012

தமிழ்நாடு அரசு வெப்சைட்ஸ்

http://www.tnreginet.net/  தமிழ்நாடு பதிவுத்துறை


http://www.tn.gov.in/  தமிழ்நாடு அரசு

http://www.tnvat.gov.in/   தமிழ்நாடு வணிகவரித் துறை

http://trb.tn.nic.in/  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணயம்

http://elections.tn.nic.in/  தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

http://www.tnpsc.gov.in/  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்

http://www.tn.nic.in/tnhome/tngov.html  அனைத்து தமிழ்நாடு அரசு வெப்சைட் லிங்ஸ் ஒரே இடத்தில்

மொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற


மொபைல் போன் பயன்பாட்டில் எண்கள் நமக்கு மாறா அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதனால், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கும் சேவை மோசமாக இருந்தாலும், பலரும் அதனைச் சகித்துக் கொண்டு அதே நிறுவனத்திடமிருந்து மொபைல் சேவை பெற்று வருகின்றனர்.

இந்த சிக்கலைத் தீர்க்கவே, அரசு மொபைல் எண்ணை மாற்றாமல், சேவை தரும் இன்னொரு நிறுவனத்தில் இணைந்து கொள்ளும் வசதியை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்து அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்தியது.

சென்ற ஏப்ரலில் மட்டும் எண்ணை மாற்றாமல் நிறுவனத்திற்கு மாறக் கூடிய வசதியைக் கேட்டு 40 லட்சத்து 14 ஆயிரத்து 26 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுடன் இதுவரை இவ்வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்து 900 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டதாக கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில், 26 லட்சத்து 39 ஆயிரத்து 679 விண்ணப்பங்களுடன் உள்ளது.


Read more: http://therinjikko.blogspot.com/2012/07/blog-post_13.html#ixzz20gzAWOIc

Friday, July 13, 2012

நிதித்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் பணிவாய்ப்புகள்


நிதித்துறைப் படிப்புகளுக்கு, வேலை வாய்ப்பு சந்தையில் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. எனவே, அப்படிப்புகள் மற்றும் அதுசார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் முறைகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

நிதி மேலாண்மை
நிதி மேலாண்மைத் துறையைப் பொறுத்தவரை, பலவிதமான படிப்புகள் உள்ளன. Chartered Financial Analysis, Chartered Accountancy, Cost & Management Accountancy, Certified Treasury Manager course, Certified Public Accountant course, Certified Investment Banker course and Certified Risk and Insurance management course போன்ற பலவிதமான படிப்புகள் அவற்றில் அடங்கும். இவற்றில் ஏதாவது ஒரு படிப்பில் சேர வேண்டுமானால், காமர்ஸ் அல்லது எகனாமிக் படிப்பில் நீங்கள் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ., பைனான்ஸ்
ஒரு மாணவர் எந்தப் பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும்,
இந்தப் படிப்பில் சேரும் தகுதியை அவர் பெறுகிறார். எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பணி அனுபவம் உள்ள நபர்களுக்கு, சில கல்வி நிறுவனங்கள், எக்சிகியூடிவ் எம்.பி.ஏ படிப்பை வழங்குகின்றன.

அவசர அவசிய கைத்தொலைபேசி அழைப்பு

இன்றைய தொழிநுட்ப்ப வளர்ச்சிக்  காலத்தில் மனிதனுக்கு தனது அன்றாட தேவைக்கு பணம் இருக்குதோ இல்லையோ ஆனால் கட்டாயம் ஒரு கைத்தொலைபேசி இருக்கும் அந்தளவுக்கு அதன் தேவையும் மனிதனுக்கு  முக்கியமாகவுள்ளது.
அந்தவகையில் இப்பதிவில் நாம் பார்க்கபோவது ஒரு முக்கியமான கைத்தொலைபேசி அழைப்பு இலக்கத்தைப் பற்றி  இத்தகவலை சிலபேர் அறிந்திருக்கலாம் ஆனால் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்பது சந்தேகமே!


நீங்கள்  எங்கேயாவது சிக்னல்(coverage) குறைவான அல்லது சுத்தமாக சிக்னல்  கிடைக்காத இடத்துக்கு செல்ல நேரிட்டால் அங்கிருந்து அவிசரமாக அழைப்பொன்றை ஏற்படுத்த தவியாய் தவித்துக்கொண்டிருப்பீர்கள்  அந்த சமயத்தில் உங்களுக்கு  கை கொடுக்கிறது இந்த அவிசர அழைப்பு  இலக்கம்  112 . உடனே உங்கள் கைத்தொலைபேசியை எடுத்து இலக்கம் 112 யை   டயல் செய்ததும் அருகில் உள்ள தொலைத்தொடர்பு வலையமைப்போடு தொடர்பை ஏற்படுத்திவிடும் பிறகு தொடர்பில் உள்ள ஆபெரட்டருடன் விசியத்தை கூறியதும் அவர்  உங்கள் உறவுகளோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவார்.

இதில் சுவராசியம் என்னவென்றால் கைத்தொலைபேசி பூட்டப்படிருந்தால் கூட அதை திறக்காமலே டயல் செய்யமுடியும் (lock to unlock) மற்றும் அனைத்து வகையான கைத்தொலைபேசிகளுக்கும் இது பொருந்தும் . இதைவிட முக்கியம் என்னவென்றால் உலகத்தில்  எல்லா நாட்டுக்குள்ளும் இந்த அழைப்பு முற்றிலும் இலவசமே .

என்ன உறவுகளே சந்தேகமாக உள்ளதா ? இப்பவே உங்கள் கைத்தொலைபேசியை எடுத்து unlock பண்ணாமல் இலக்கம் 112 யை  டயல் பண்ணிப்பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.மற்றும் இப்பதிவு எல்லோரையும் சென்றடைய உங்கள் அன்பான  வாக்கும் அவசியம்.

நன்றி.

Wednesday, July 11, 2012

தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்... குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும் ?

தாம்பத்யம் இயற்கையாக நடக்கிறது என்றால்... குழந்தை பிறப்பும் இயற்கையாகத் தானே நடக்க வேண்டும் ?:
பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி.
ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இத்தகைய மரணம் பல மடங்கு குறைவு. இருப்பினும்கூட, தொடர்ந்த முயற்சிகள் காரணமாக 2009-ம் ஆண்டு 79 கர்ப்பிணிகள் மரணம் எனக் குறைந்துள்ளது.

 பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில்தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. ஆனால் அண்மையில், ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்த கருத்து ஒரு மாற்றுச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. 

""மகப்பேறு தொடர்பான பாரம்பரிய அறிவை நாம் தக்க வைத்துக்கொள்ளவில்லை. அதை வளர்க்கத் தவறிவிட்டோம். இன்று மருத்துவமனையை நம்பி இருக்கிறோம். பாதுகாப்பான பிள்ளைப்பேறு என்ற கருத்தில், சிசேரியன் மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால்தான் தாய் சேய் நலம் என்ற எண்ணம் உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை?

Tuesday, July 10, 2012

காங்கிரசை தோற்கடிக்க திமுக புது வியூகம்????

காங்கிரசை தோற்கடிக்க திமுக புது வியூகம்????:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு நெருக்கமாய் இருப்பது போன்று இருந்து திமுக விற்கு தோல்வியை பெற்றுத் தந்த காங்கிரஸ் தற்போது குடியரசு தலைவர் பதவிக்கு திமுக வின் ஆதரவை தேடி வந்திருக்கின்றது. திமுக உறுதுணையாய் இருக்குமா? அல்லது கடைசி நேரத்தில் 63 சீட்டுக்கள் கேட்டு பேரம் பேசி மகத்தான தோல்வியை பெற்றுத் தந்த காங்கிரசிற்கு பதிலடி கொடுக்குமா? கனிமொழி , ஆ.ராசா, தயாநிதி வேண்டுமா? என்று செக் பாயின்ட் வைத்து 63 சீட்டுக்களை பெற்றதனால் கடைசி நேரத்தினில் பாமக, விசிக கட்சிகளின் ஆதரவை இழந்து தமிழ் நாட்டினில் படு தோல்வியடைந்தது.  
மகளை பார்க்க டெல்லி சென்று விட்டு அன்னை சோனியாவை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்து பார்த்து திரும்பிய கலைஞரை காண இன்று பிரணாப், ஆசாத் என்று சென்னை வந்து ஆதரவு திரட்டுகின்றார்கள். எதற்குமே கலங்காத கலைஞர் இறுதியில் கலக்கத்தில் தடுமாற்றம் கொண்டு "கூடா நட்பு கேடாய் முடிந்தது" என்று சூசகமாய் பேசி பின்னர் தான் காங்கிரசை சொல்லவில்லை, உங்களைத்தான் சொன்னேன் என்று பத்திரிகை நிருபர்களை காட்டியதையும் மறக்க முடியாது.

Sunday, July 08, 2012

Employment news of this week from 7th July to 13th July 2012


Job Highlights  (07 Jul – 13 Jul 2012)

1.Indian Overseas Bank invites applications for recruitment of 1500 Clerks.
Closing date for online Registration : 14.07.2012.

2.Indian Bank requires 1201 Clerks.
Last Dated for online Registration : 13.07.2012

3.Ordnance Factory, Bhandara requires 668 Store keeper, Fireman, Durwan, Boiler Attendant, Danger Building Worker, Fitter, Labourer etc.

4.South Eastern Railway needs 363 Jr. Stenographer, Commercial Clerk, Jr. Clerk, Jr. Accountant Clerk, Ticket Examiner etc.
Last date : 06.08.2012

5.North Central Railway, Allahabad requires 140 JE, Technical-II, Tech-III, Traffic Apprentices, ASM, Goods Guards, Ticket Examiner, Jr. Clerk-cum-Typist etc.
Last Date 30.07.2011.

6.East Central Railway, Hazipur requires 30 Jr. Clerk, Accounts Clerk, Commercial Clerk and Stenographer.
Last Date 19.07.2012.

7.North Eastern Railway Gorakhpur requires 65 Junior Engineer, Goods Guard, Assistant Station Master, Commercial Clerk, Ticket Collector, Junior Clerk, Accounts Clerks etc.
Last Date: 06.08.2012.

8.Sashastra Seema Bal requires 326 Assistant Sub-Inspector (Tele) and Head Constable (Tele).
Last Date : 31.07.2012

9.Airports Authority of India, Kolkata requires 72 Junior Assistant (Fire Service).
Last Date : 30.07.2012.

10.Vikram Sarabhai Space Centre requires 62 Technician ‘B’ and Catering Attendant ‘A’.
Last Date : 23.07.2012
this is a test message

Friday, July 06, 2012

உங்க பிள்ளைகளை நாமக்கல் பள்ளிகளில் சேர்க்க போறீங்களா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.

1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல் கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும் ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே? என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.

ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள்  என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

இந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது  இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)

புத்தகச் சுமை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
முப்பருவ கல்வித்திட்டம்: இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு, புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும்; ஒட்டுமொத்த கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையிலும், முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்படும்.
இதில் தமிழ், ஆங்கிலம் பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் புத்தகச்சுமை குறைந்துள்ளது. இந்தப் புத்தகங்கள் சராசரியாக 600 கிராம் எடையளவே உள்ளன. இதுவரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறன் பார்க்கப்பட்டதால் மாணவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை யும் நிலவி வந்தது. இந்நிலையை மாற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்படுவது போல் கிரேடு முறை

Thursday, July 05, 2012

Employment News weekly updates

fromEmployment News weekly updates  30.6.2012 to 6.7.2012

Employment News weekly updates from 30.6.2012 to 6.7.2012


Job Highlights  (30 Jun - 06 Jul 2012)


Union Bank of India requires 1636 Single Window Operator ‘A’/Clerk.
Last Date for online application : 03.07.2012


Corporation Bank requires 317 Probationary Assistant Managers.
Last Date for online Registration : 11.07.2012.


Sashastra Seema Bal requires 824 Constables (Driver)
Last date : 01.08.2012.


Ordnance Factory, Chanda requires 219 Electrician Fitter, Machinist, Painter, Turner etc.
Last Date : 21 days from the date of publication.


South Western Railway requires 91 Commercial Clerk, Trains Clerk, Ticket Examiner/ Ticket Collector, Jr. Clerk-cum-Typist etc. against Persons with Disabilities Quota.
Closing Date: 30.07.2012.


Northern Railway requires 73 Traffic Apprentice, Goods Guard, ASM. JE, Jr. Clerk-cum-Typist, Commercial Clerk etc. against Physically Handicapped Quota.
Closing Date: 30.07.2012


Western Railway requires 64 Group ‘C’ Posts against Sports Quota.
Closing Date: 30.07.2012


The Indian Navy invites applications for Grant of Short Service Commission (SSC) in Technical/Executive Branches.
Last Date for online Registration: 16.07.2012.


HQ Maintenance Command, IAF, invites applications for 154 Group ‘C’ Posts.
Last Date : 21 days after publication.


Surguja Vishwavidyalaya, Ambikapur requires 65 Principal, Professor Associate Professors and Assistant Professor.


Diesel Locomotive Works, Varanasi requires 10 Jr. Clerk, Tech. III/Painter, Tech.III/Car Painter, Stenographer (Hindi) etc.
Last Date: 28.07.2012. 

Employment News : Government Job Highlights for this week

Employment News : Government Job Highlights for this week

Some important Central Government Job vacancy details are being released in the Employment News/Rozgar Samachar dated 23rd June, 2012. The Job Highlights for the week from 23rd June to 29th June 2012.

Last week Railway Recruitment Board had invited applications for the posts of various technician grades in all over India. More than twelve thousand vacancies was announced by the Railways. The last date for the posts 16.7.2012.

This week, nearly one thousand constables are required in the Border security force as Radio operators.

Job Highlights  (23 Jun - 29 Jun 2012)


Border Security Force requires 959 Head Constable (Radio Operator) and Assistant Sub-Inspector (Radio Mechanic).

Last Date: 27.07.2012.

Chandigarh Administration requires 409 Staff Nurses.

Last Date of online application : 16.07.2012

Ordnance Parachute Factory, Kanpur requires 120 Group ‘C’ Industrial Establishment (IE) Posts.

Last Date: 21 days after publication.

The Indian Army invites applications from Unmarried/Married Male and Unmarried Female (Including wards of battle casualties of Army Personnel) for grant of Short Service Commission. Vacancy- 58,

Last Date: 19.07.2012.

The Indian Army invites applications for recruitment of 36 Religion Teachers.

Last Date : 19.07.2012

Chennai Petroleum Corporation Limited invites applications for 50 Non-Supervisory Positions.

Last Date for online submission: 30.06.2012

United Bank of India requires 44 Specialist Officers.

Last Date for online Registration: 29.06.2012

North-Central Railway, Railway Recruitment Cell, Allahabad requires 31 Group ‘C’ posts against Sports Quota.

Last Date : 23.07.2012

Archaeological Survey of India, Lucknow requires 16 Monument Attendant (Group ‘D’ Staff).

Last Date : 15 days after publication.

Air India Ltd. requires Captains and First Officers.

Last Date: 23.07.2012. 

this is a test message

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?


மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும். 

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

Wednesday, July 04, 2012

விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன் (Windows 8 - Installation)
1. முதல் படி: முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும்.

இதற்கான தளங்களின் முகவரிகள் :
மற்றும்

உங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன்.

இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள்,
http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம்.

வேறுபாடுகளும் புரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.


2. இரண்டாம் படி:

பூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும்.

இப்போது தரவிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்கியவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும்.

இச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.


3.மூன்றாம் படி:

விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.

இதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆனவுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்படவும்:

* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)
* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.

* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.

இந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.

ஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.

உங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள்.

மீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.

Sunday, July 01, 2012

kolappalur festival 2009 part02

பைத்தியம் பிடித்த பிரனாப்: புதிய சேவை வரி அறிமுகம்.


வெளிநாட்டு பணம் அதிக அளவில் நம் நாட்டிற்கு வந்தால் தான்  குழிக்குள் சென்று கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆனால் தனிமனிதர் எவரேனும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் அதற்கு 12.36 % புதிய சேவை வரி விதிக்க அலோசனை சொல்லி விட்டு பின்  பதவி விலகியுள்ளார் நமது புதிய ரப்பர் ஸ்தாம்ப்.

அயல்நாடு வாழ் இந்தியர் மற்றும் தமிழர் ஆண்டிற்கு 65 பில்லியன் டாலர் அளவிற்கு பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். இந்தப் பணம் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களுக்கு தான் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
என் சொந்தக்காரன் எவனும் எனக்கு தனிப்பட்ட முறையில் பணம் அனுப்புவதில்லை. ஆனால் பல நாடுகளில் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்ற பணம் அனுப்புவோரிடம் அரசாங்கம் பணத்தை அடித்துப் பிடுங்குகிறது.  இந்த வரி எந்த வளரும் வளர்ந்த நாடுகளிலும் இல்லை.
பைத்தியம் பிடித்த இந்த அரசு வட்டிக் கடைக்காரன் போல் வரி வசூல் செய்கிறது. நாமெல்லாம் பயந்து பயந்து வரி கட்ட வேண்டும். ஆனால் அந்தப் பணமெல்லாம் அரசு அலுவலக கக்கூஸ் கழுவ லட்ச லட்சமாக போகும்.
வருடத்திற்கு 2 லட்சம் (மாதம் Rs. 16600) அதிகமாக சம்பாதிக்கும் அனைவரும் திருடர் போல் பார்க்கப் படுகின்றனர்.
வீடு வாடகை : Rs. 5000
வராத கரண்ட் : Rs. 400
மளிகை:      : Rs. 2500
காய்கறி      : Rs.   800
பால்         :  Rs. 950
காஸ்        : Rs.   500
பெட்ரோல் எழவு: Rs. 800
மொபைல் போன்: Rs. 300
குழந்தை (குழந்தைகள்) இருந்தால் +2500
இதுவெல்லாம் போக,

Layout purchase


முதலீட்டிற்காகவும் மற்றும் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை

மனதில் கொண்டு நிலத்தில் முதலீடு செய்வோர் அதிகம். இவர்கள் முதலில்
தேர்ந்தெடுப்பது புற நகர்ப்பகுதியில் layout -ல் வீட்டு மனை வாங்குவது.
விற்பனையாளர்கள் கொடுக்கும் விளம்பரம் மற்றும் இலவச பரிசுகள் முதலியவற்றை
நம்பி, குறிப்பிட்ட காலத்தில் விலை பன்மடங்கு ஆகி விடும் என்ற
நம்பிக்கையில் பலபேர் முதலீடு செய்கிறார்கள். மற்ற வியாபாரங்களைப் போலவே
இந்த தொழிலிலும் பல இலவச அறிவிப்புகள் வெளியாகின்றன. அவர்களுடைய layout
-ல் வீட்டு மனை வாங்குபவர்களுக்குப் பத்திர பதிவு இலவசம், பட்டா இலவசம்,
கவர்ச்சிகரமான பொருட்கள் இலவசம், 3 வருட பராமரிப்பு இலவசம் போன்ற
இலவசங்களை நம்பியும் நிலம் வாங்குகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து
வீடுமனை வாங்குபவர்கள் அது அங்கீகரிக்கப்பட்ட layout-தானா எனப்
பார்ப்பதில்லை. மேலும் எப்படிப்பட்ட வீட்டுமனையை வாங்க வேண்டும் என்றும்
தெரிவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட layout-க்கும் அங்கீகரிக்கப்படாத layout
-ற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? என்று பலருக்கும் தெரிவதில்லை.
நீங்கள் வீடுமனை வாங்கியிருக்கும் layout அங்கீகரிக்கப்பட்ட (approved)
layout தானா என பலரிடம் கேட்கும் போது அவர்களிடமிருந்து வரும் பதில் ஆம்
என்பது தான். ஆனால் அதற்கு பின்னாலேயே இன்னொன்றையும் சேர்த்து
சொல்வார்கள். அது பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பது.

உயில்வாழ்க்கையின் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் உள்ள பொதுவான ஆசை, கனவு
சொந்த வீடு வாங்குவது தான். சொந்த வீட்டில் இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை
தானும் அனுபவித்துக் கொண்டு தம்முடைய சந்ததியினரும் அனுபவிக்க வேண்டும்
என்பது தான் நோக்கம். குடியிருப்பதற்கு சொந்த வீடு வாங்கிய பிறகும் மற்ற
இடங்களில் சொத்து வாங்குவது கண்டிப்பாக நாம் அனுபவிப்பதற்காக அல்ல.
நம்முடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்காகவும்
அல்லது தமக்குப் பிறகு அந்த சொத்து குழந்தைகளுக்குப் போய் சேர்ந்து
அவர்கள் வாழ்க்கைக்கு அது உதவ வேண்டும் என்பது தான். காரணம் எதுவாக
இருந்தாலும் நாம் குடியிருக்கும் வீடு உட்பட நமக்கு சொந்தமான எல்லா
சொத்துக்களும் நம்முடைய காலத்திற்குப் பிறகு நம்முடைய வாரிசுதாரர்களுக்கு
போய் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சேர வேண்டும் என்பது தான் எல்லோருடைய
நோக்கமாக இருக்கும்.
நாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் நம் காலத்திற்குப் பிறகு நம்முடைய
வாரிசுதாரர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் சேருவதற்கு நாம் செய்ய
வேண்டிய வழிமுறைகள் சிலவற்றில் முக்கிய பங்கு வகிப்பது "உயில்" என்பது
தான். நம்முடைய சொத்து, நம் காலத்திற்கு பிறகு நம் வாரிசுகளில் யார்
யாருக்கு எந்தெந்த சொத்து போக வேண்டுமென்று நாம் தெளிவாக முறைப்படி எழுதி
வைப்பது தான் உயில்.

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்


தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.
இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.

கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.

2.

பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.

Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி  
Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.

4.

பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும்
 Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி  
Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். 
OR Right click DOWN.ttf – Click Install

5.

பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை 
கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் 
விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக 
முழு விபரங்களும் கிடைக்கும்.

Download Astro

Related Posts Plugin for WordPress, Blogger...