உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, July 19, 2012

ரூ.25 ஆயிரத்திற்கு உட்பட்ட சொத்துகளுக்கு இன்று முதல் முத்திரைத்தீர்வை, பதிவுக்கட்டணம் கிடையாது


சென்னை, ஜூலை.5- விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் இன்று (வியாழக்கிழமை) முதல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.  புதிய வழிகாட்டி மதிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளர் சுனீல் பாலிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வழிகாட்டி மதிப்பின் உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணம் விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, விற்பனை ஆவணங்களை பதிவு செய்யும்போது சொத்தின் மதிப்பு ரூ.25 ஆயிரம் வரை இருந்தால் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...