உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, July 10, 2012

காங்கிரசை தோற்கடிக்க திமுக புது வியூகம்????

காங்கிரசை தோற்கடிக்க திமுக புது வியூகம்????:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு நெருக்கமாய் இருப்பது போன்று இருந்து திமுக விற்கு தோல்வியை பெற்றுத் தந்த காங்கிரஸ் தற்போது குடியரசு தலைவர் பதவிக்கு திமுக வின் ஆதரவை தேடி வந்திருக்கின்றது. திமுக உறுதுணையாய் இருக்குமா? அல்லது கடைசி நேரத்தில் 63 சீட்டுக்கள் கேட்டு பேரம் பேசி மகத்தான தோல்வியை பெற்றுத் தந்த காங்கிரசிற்கு பதிலடி கொடுக்குமா? கனிமொழி , ஆ.ராசா, தயாநிதி வேண்டுமா? என்று செக் பாயின்ட் வைத்து 63 சீட்டுக்களை பெற்றதனால் கடைசி நேரத்தினில் பாமக, விசிக கட்சிகளின் ஆதரவை இழந்து தமிழ் நாட்டினில் படு தோல்வியடைந்தது.  
மகளை பார்க்க டெல்லி சென்று விட்டு அன்னை சோனியாவை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்து பார்த்து திரும்பிய கலைஞரை காண இன்று பிரணாப், ஆசாத் என்று சென்னை வந்து ஆதரவு திரட்டுகின்றார்கள். எதற்குமே கலங்காத கலைஞர் இறுதியில் கலக்கத்தில் தடுமாற்றம் கொண்டு "கூடா நட்பு கேடாய் முடிந்தது" என்று சூசகமாய் பேசி பின்னர் தான் காங்கிரசை சொல்லவில்லை, உங்களைத்தான் சொன்னேன் என்று பத்திரிகை நிருபர்களை காட்டியதையும் மறக்க முடியாது.


தானும் ஒரு பத்திரிகை ஆசிரியர்தான் என்பதை மறந்து தனக்கும் ஒரு தொலைகாட்சி நிறுவனம் இருக்கின்றது என்பதை மறந்து பத்திரிக்கைகளைத்தான் அப்படி சொன்னேன் என்று தடுமாற வைத்தது காங்கிரஸ். இலங்கையில் தமிழீழம் செத்து ஒழிந்தாலும் காங்கிரசை விட்டு வெளியே வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களை காயப்படுத்த செய்தது காங்கிரஸ். இன்று அதே காங்கிரஸ் தனது கட்சி அமைச்சரையே குடியரசுத் தலைவராக நிறுத்தி அதற்க்கு எந்த திமுக விற்கு எதிராக செயல்பட்டார்களோ அதே கட்சியின் உதவியை நாடி வந்திருக்கின்றது.


இப்போது திமுகவின் கையினில் காங்கிரசின் கௌரவம் அடங்கி இருக்கின்றது. மேற்கு வங்கத்தில் ஒரு பெண் அசாத்தியமாய் குரல் கொடுக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடு, இல்லை எனில் ஆதரவு வாபஸ் என்று பகீரங்கமாய் குரல் எழுப்பும்போது, நம் கலைஞரால் அந்த அளவிற்கு கண்டனம் கூட தெரிவிக்க முடியாததன் ரகசிய பின்னணி என்ன? என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

தமிழர்களுக்கு வாழ்வுரிமை வழங்கு, பெட்ரோல் விலையை திரும்ப பெறு என்று நேற்று தொடங்கிய கட்சிகள் எல்லாம் குரல், போராட்டத்தில் இறங்கும் போது இவர்களால் ஏன் அந்த அளவிற்கு ஆணித்தரமாய் பேச முடியவில்லை. இப்போதும் கூட குடியரசுத் தலைவர் பதவிக்கு நான் ஆதரவு அளிக்கின்றேன் அதற்க்கு பதில் என் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மையை செய் என்று ஏன் குரல் கொடுக்காமல் மௌனம் சாதிக்கின்றார் என்று அவரது கட்சியினரே முணுமுணுக்கின்றார்கள்.

தலைவர் நிச்சயம் குடியரசுத் தலைவர் போட்டியில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார் என்று திமுக அடிமட்டத் தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். வழக்கம் போல் முடிவு தலைமை கைகளிலே இருக்கின்றது. 


எந்த ஒரு குரூர மனம் கொண்டவனுக்கும் இலங்கை  போர்க் குற்றங்களை கண்டால் இரக்கம் வரும், தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு அது வராமல் போனது ஏனோ? பதவியா? பணமா? நாற்காலி யா? 
Related Posts Plugin for WordPress, Blogger...