உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, July 19, 2012

பன்னாட்டு கம்பெனியின் சோடாவுக்கு சொல்லுங்க போடா...கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டா இல்லைன்னா கொஞ்சம் வயிறு சரியில்லைனா உடனே எடுடா சோடாதான் சில பேருக்கு. சில பேருக்கு சோடா குடிக்கலைன்னா துக்கமே வராது. சரக்கடிக்கறதே கெடுதல் தான் ஆனாலும் கொஞ்சம் பேருக்கு சரக்கோட சோடா கலந்து குடிச்சாதான் குடிச்ச மாதிரியே இருக்கும். ஆனால் ஏதோ கொஞ்சமா குடிச்சா பிரச்சனை இல்லை சோடாவை,சுத்தமா குடிக்காமையே இருந்தா நல்லது தான் சாராயத்தை. சரி சோடாவை அதிகமா குடிச்சா என்ன ஆகும்? பாத்துடலாம்....

1. சோடாவில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எனும் அமிலத்தால்...உங்கள் எலும்புகள் மற்றும் பல் ஈறுகள் வலுவிழந்து போகும்.


2. சோடாவில் இருக்கும் அதிகமான செயற்கை இனிப்புகள் மேலும் மேலும் உங்களை குடிக்க சொல்லும், சோடா மற்றும் சரக்கு ரெண்டையும்தான்.


3. கலருக்காக சோடாவில் சேர்க்கப் படும் கராமெல் எனும் வேதிப்பொருள்  சில பக்க விளைவுகளை தரக் கூடியது. மேலும் இந்த வேதிப்பொருள் அழகு சாதனா பூச்சுகளுக்கு பயன்படுத்தப் படுவது.

4. பார்மால்டிஹைட்  எனும் கேடு தரும் வேதிப்பொருள் சோடாவில் சேர்க்கப் படுவதில்லை..ஆனால் சோடா உங்க வயித்துக்குள்ள போனதுக்கு பின்ன கலக்குர கலக்கலில் உடனடியா பார்மிக் ஆசிட் & பார்மால்டிஹைட் உருவாகும் இது உங்க வயித்துக்கு கேடு விளைவிக்க கூடியது.

5. இதில் சேர்க்கப்படும் சக்கரை கரைசல் கொழுப்பை உருவாக்க கூடியது. இது மேலும் மேலும் பசியை தூண்டி விடுவதால் தேவை இல்லாமல் அதிகமா சாப்பிட்டு உடல் எடை கூடும்.

6. சோடா கெட்டு போகாம இருக்க இதில் சேர்க்கப்படும் ப்ரசர்வேட்டிவ் பொட்டாசியம் பென்சொட் எனும் வேதிப்பொருள்...உங்க வயித்துக்குள்ள போனதும் பென்சினாக மாறிடும். இதுவும் உங்க வயித்துக்கு கெடுதல்தான்.

7. இதுல சேர்க்கப்படும் உணவு சாயங்கள் மூலம்...உங்கள் மூளை நாளடைவில் சுறுசுறுப்பை இழந்திடும், நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உங்கள் இதய துடிப்புகள் கண்ட்ரோல் இல்லாம அதிகமாகும்.

அதனால குடிக்காதிங்க...குடிக்க வேண்டிய தேவை இருந்தாலும் கொஞ்சமா உள்ளூர் சோடாவை மட்டுமே குடிங்க....      

Related Posts Plugin for WordPress, Blogger...