உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, August 31, 2012

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் (http://www.facebook.com/MotorVikatan) வெளியிடப்பட்ட பயனுள்ள குறிப்பு இது.

Wednesday, August 29, 2012

TANGEDCO NEWS: புதியமின் இணைப்பு சேவைக் கட்டணங்களை உயர்த்தமின் வா...

TANGEDCO NEWS: புதியமின் இணைப்பு சேவைக் கட்டணங்களை உயர்த்தமின் வா...: மின் கட்டணத்தைத் தொடர்ந்து, மின் இணைப்புக்கான டெபாசிட் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் உயர்த்த, மின் பகிர்மானக் கழகம் முடிவு செய்துள்ளது. ...

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க் கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு,

Saturday, August 25, 2012

மின்நுகவோருக்கு கிடைக்க கூடிய உரிமைகள்

Friday, August 24, 2012

கல்பாக்கம், ராமகுண்டம் மின் நிலையங்களில் கோளாறாம்.. தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிப்பு

கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் ராமகுண்டம் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள மின்தடை நேரம் அதிகரித்துள்ளது.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு 330 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டுள்ளது. அந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய 2 நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

TIRUPPUR NEWS: குழந்தைகளுக்கு ஆபத்து வதந்தி பரவல் ;முச்சந்தியில் ...

TIRUPPUR NEWS: குழந்தைகளுக்கு ஆபத்து வதந்தி பரவல் ;முச்சந்தியில் ...: திருப்பூர்: பிறந்த குழந்தை பேசியதாகவும், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதாலும் தமிழகத்தில் பலரும் தங்களுடைய குழந்தைக்கு தலையை ...

Thursday, August 23, 2012

டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை

எல்எல்ஆர் விண்ணப்பித்து 30நாட்கள் ஆகிவிட்டதா.  தன்னம்பிக்கையுடன், சாலை விதிமுறைகளை அனுசரித்து வாகனம் ஓட்ட பழகிவிட்டீர்களா? இப்போது நீங்கள் தாரளமாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவராகிவிட்டீர்கள்.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் படிவம் 4ஐ பெற்று பூர்த்தி செய்து அதனுடன் பழகுனர் உரிமத்தின்(எல்எல்ஆர்) நகல், ஓட்டி காட்டப் போகும் வாகனத்தின் ஆவணங்கள், வேறு ஒருவரின் வாகனமாக இருந்தால் அவரிடமிருந்து அத்தாட்சி கடிதம் ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பழகுனர் உரிமத்துக்கு (எல்எல்ஆர்) விண்ணப்பிப்பது எப்படி?

டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் சிம்பிளான வேலைதான். ஆனால், அதை எப்படி பெறுவது என்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயம் மிக எளிதான விஷயமாகவே அமையும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பூதாகரமான விஷயமாக்கி ஏராளமான ஏமாற்று வித்தகர்கள் பணத்தை பறித்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்குகிறோம்.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான். எல்எல்ஆர் எடுப்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம். எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 16 முதல் 18 வயதுடையோர் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

Saturday, August 18, 2012

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல்மருத்துவம்உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ் என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

Friday, August 17, 2012

அனில் அம்பானிக்கு ஆதரவான மின்துறையின் முடிவால் நாட்டுக்கு நஷ்டம் ரூ. 29,033 கோடி!

டெல்லி: மின்துறையின் தவறான செயலால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு ரூ. 29,033 கோடி லாபமும் மத்திய அரசுக்கு அதே அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

Wednesday, August 15, 2012

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...: மின்வாரிய சேவைத்துறையை சந்தைக் காடாக்குவதா? (தீக்கதிரில் எஸ்.யஸ்.சுப்பிரமணியன்) தமிழக மின் வாரியத்தை பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வ...

Tuesday, August 14, 2012

TIRUPPUR NEWS: மின்னுற்பத்தி குறைவால் மீண்டும் மின்வெட்டு அவதி : ...

TIRUPPUR NEWS: மின்னுற்பத்தி குறைவால் மீண்டும் மின்வெட்டு அவதி : ...: திருப்பூர் : காற்றாலை மின்னுற்பத்தி, மூன்றில் இரண்டு பங்கு குறைந்ததால், திருப்பூர்  மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கியுள்ளது. மின்வெ...

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்-மத்திய அரசு கட்டுப்பாடு

தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

இரட்டை பட்டம் செல்லாது. உயர் நீதி மன்றம்

இரட்டை பட்டம் செல்லாது என்று . உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.வழக்கு விசாரனை முடிந்த நிலையில் நீதியரசர் மதிப்புமிகு இராமசுப்பிரமணியன் இன்று தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக ஒருங்கிணைப்பு குழுவைச்சார்ந்த திரு;ஆரோக்கியராஜ் கூறினார்.

Sunday, August 12, 2012

டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை 40 சதவீதமாக குறைக்க திட்டம்- தினமலர் செய்தி

                டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. 

    கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.

காரணமே இல்லாமல் கைவிடப்பட்ட ஈரோடு - பழநி ரயில் திட்டம்

ஈரோடு:நீண்ட போராட்டங்களுக்குப் பின் அறிவிக்கப்பட்ட, ஈரோடு - பழநி ரயில் பாதைத் திட்டம், சர்வே பணிகள் முடிவதற்குள், எந்தக் காரணத்தையும் கூறாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்களின் நூறாண்டு கனவு கலைந்துள்ளது.கடந்த 1913 ல், ஈரோடு- தாராபுரம்- பழநி ரயில்பாதைத் திட்டத்துக்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவரை இந்த திட்டம் கோரிக்கை அளவிலேயே இருந்து வந்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை மாநாடு என பல கட்டப் போராட்டங்களை, ரயில்வே மக்கள் பணி சங்கம் சார்பில் நடத்தி வந்தனர்.இப்பகுதியில் உற்பத்தியாகும் வேளாண்மைப் பொருள்களை வெளி சந்தைக்குக் கொண்டு செல்லுதல், இந்திய அளவில் பிரசித்தி பெற்ற சென்னிமலை ஜமக்காளம், பருத்தி நூல், வெண்ணெய், நெய், விசைத்தறிகளில் உற்பத்தியாகும் துண்டு, லுங்கி ஆகியவற்றை வெளியூர் சந்தைகளுக்கு கொண்டுசெல்ல லாரி போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

7000கோடி தண்ட செலவு(நல்லது) செய்யும் மத்திய அரசு...FREE MOBILE PHONE( தலபோலவருமா பதிவு )

சுதந்திர தினம் அன்று 7000கோடி ருபாய் செலவில் இந்தியாவில் உள்ள வறுமை கோட்டுக்கு கிழே உள்ள குடும்பங்களுக்கு இலவசமாய் மொபைல் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்தாய் உள்ளது தெரியும்மா "ஒவ்வொருவர் கையிலும் ஒரு மொபைல் போன்"  என்ன ஒரு அருமையான பெயர்.
மொபைல் போன் கொடுத்தால் மட்டும் போதுமா என யாரும் கேட்க்க கூடாது என்பதற்காக 200 உள்ளூர் அழைப்புகள் ஒவ்வொரு மாதமும் இலவசமாய் அழைத்து கொள்ளும் சிறப்பு வசதியை தருவதாய் உள்ளார்கள்.

வறுமை கோட்டுக்கு கிழே வசிபவர்களின் லிஸ்ட் எடுத்தால் 60 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.அவர்களுக்கு எல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம் நாம ஒரே ஒரு மொபைல் போன் கொடுத்தால் போதும் அவர்களின் பசி எல்லாம் தீர்ந்து போய் விடும்.அந்த பணத்தை வைத்து இந்தியாவிற்கு வேறு ஏதாவது நல்லது செய்யலாம் மொபைல் போன் கொடுகுரானுவோ கருமம் புடுச்சவணுக.நம்ம ஆளுங்களும் இலவசம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போகின்றனர்.

TIRUPPUR NEWS: திருப்பூர் :ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார்?திணற...

TIRUPPUR NEWS: திருப்பூர் :ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார்?திணற...:  ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார் என்று தெரியாத சூழலில், விசாரணை நடத்துவதற்கு, சென்னையில் பின்பற்றுவதுபோல், திருப்பூரில் தனிக்குழு ஏற்பட...

வரவேற்பு இல்லாத கோவை-சேலம் பாசஞ்சர் ரயில்

ஈரோடு: காலை மற்றும் மாலை நேரம் இல்லாமல், மதிய நேரத்தில் இயக்கப்படுவதால் கோவை- சேலம் பாசஞ்சருக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை.
ஈரோடு- கோவை பாசஞ்சர் ரயில் கடந்தாண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் காலை, 7.05க்கு புறப்பட்டு, திருப்பூர் வழியாக, 9.35க்கு கோவை சென்றடைகிறது. அங்கிருந்து காலை, 9.50க்கு புறப்பட்டு மதியம், 12.15க்கு ஈரோட்டை வந்தடைகிறது. மீண்டும் மாலை, 3 மணிக்கு புறப்பட்டு, 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை, 6.25க்கு புறப்பட்டு இரவு, 8.55க்கு ஈரோடு வந்தடைகிறது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் இருந்து சேலம் செல்ல சாதாரண பஸ்களில், 30, எக்ஸ்பிரஸ் பஸ்களில், 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்களை பொறுத்த வரையில் பாசஞ்சர் ரயில்களில் ஈரோடு- சேலத்துக்கு, 10 ரூபாய், எக்ஸ்பிரஸ் ரயில்களில், 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுமானால், பத்து ரூபாயில் சேலம்- ஈரோடு பயணிக்க முடியும். அதனால், சேலம் - ஈரோடு இடையே மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்தாண்டு மார்ச் மாதம் தாக்கலான ரயில்வே பட்ஜெட்டில், கோவை- ஈரோடு பாசஞ்சர் ரயில், சேலம் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.கோவையில் இருந்து மதியம், 12.15க்கு ஈரோடு வந்து, ரயில்வே ஷெட்டில் மாலை, 3 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரத்தில், இந்த ரயில் சேலம் வரை இயக்கப்படுகிறது. இதற்காக கோவையில் இருந்து ஈரோட்டுக்கு, 15 நிமிடம் முன்னதாக வந்து, சேலம் சென்று ஈரோட்டுக்கு மாலை, 3 மணிக்கு வந்து, திரும்பவும் கோவை செல்கிறது. மதிய நேரத்தில் இயக்கப்படுவதால், ரயிலில் பயணிகள் கூட்டமின்றி ஓடிக் கொண்டுள்ளது.பயணிகள் கூறியதாவது:
"பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த ரயில் இயக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாக இல்லாத மதிய நேரத்தில் இயக்கப்படுவதால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. சும்மா நிற்கும் நேரத்தில் ரயிலை இயக்கி, ரயில்வே துறை வருவாயை வீணடிக்கிறது. ஒரு முறை மட்டுமே சேலம் வரை இயக்காமல், காலை மற்றும் இரவு நேரத்தில் இயக்க வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நன்மையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, August 11, 2012

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
 சென்னை, ஆக. 10: 2012ம் ஆண்டிற்கான 13320 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இப்போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரையில் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதபட்சத்தில், உரிய அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேதியினை இணையதளத்தில் அறிந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதல் அவரவருக்கென தெரிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு மையத்திற்கு காலை 8.00 மணிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவிவான தகவல்களுக்கு http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2012/venue_PMT_PET.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.

Friday, August 10, 2012

குரூப்2 தேர்வு : நுழைவுச் சீட்டுக்கு மாற்று ஏற்பாடு

சென்னை, ஆக., 9 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3,600 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 4.80 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexam.net என்ற இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களைப் பெறcondacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டறிந்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத சென்னை தேர்வு மைய விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய அலுவலகத்தையும், இதர தேர்வு மைய விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அணுகி நுழைவுச் சீட்டுப் பெறலாம் என்று தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தாங்கள் விண்ணப்பித்ததற்கான சான்றின் நகலை சமர்ப்பித்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசுசென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Thursday, August 09, 2012

முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !!

முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !!: முகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில்  ஒன்றை பற்றியதே இந்த பதிவு.


முக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க  யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன்

TIRUPPUR NEWS: கோவையில் சீருடையில் சென்று கைவரிசை காட்டினார்: சி....

TIRUPPUR NEWS: கோவையில் சீருடையில் சென்று கைவரிசை காட்டினார்: சி....: கோவையில் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி மி...

TIRUPPUR NEWS: கேஸ் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்...

TIRUPPUR NEWS: கேஸ் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்...: பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டத்தை, விவசாய நிலங்கள் தவிர்த்து, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார...

TIRUPPUR NEWS: 2013ம் ஆண்டுக்கான பட்டியல் தயாராகிறது வாக்காளர் பட...

TIRUPPUR NEWS: 2013ம் ஆண்டுக்கான பட்டியல் தயாராகிறது வாக்காளர் பட...: திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ந...

TIRUPPUR NEWS: ஊத்துக்குளியில் மாவட்ட கவுன்சிலர் காரை திருடியவர் ...

TIRUPPUR NEWS: ஊத்துக்குளியில் மாவட்ட கவுன்சிலர் காரை திருடியவர் ...: திருப்பூர், : ஊத்துக்குளி திம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. திருப்பூர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் சம்பவத்தன்று இர...

TIRUPPUR NEWS: திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகு...

TIRUPPUR NEWS: திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகு...: திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் சோதனை முடிந்து விட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி பகு...

Wednesday, August 08, 2012

விழியே பேசு...: ரம்ஜான் பண்டிகை: பி.எஸ்.என்.எல்.-ன் 786 ஆஃபர்!


ரம்ஜான் பண்டிகையையொட்டி 

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு(ப்ரீபெய்டு பிளான்) ரூ.786க்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 
பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.786க்கு ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் 1,572 நிமிடங்களுக்கு கட்டணமின்றி பேசலாம். இதில் 786 நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். உள்ளூர்,எஸ்.டி.டி. எண்களுக்கும்மீதமுள்ள 786 நிமிடங்கள் தனியார் நிறுவன உள்ளூர்,எஸ்.டி.டி. எண்களுக்கும் பேசலாம்.

மேலும் 786 எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்786 எம்.பி.க்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை 2ஜி3ஜி சேவை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.

ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.

இது தவிர ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஈ-ரீசார்ஜ் மற்றும் கார்டு மூலம் ரூ.110ரூ.220,ரூ.440 மற்றும் ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் முழு தொகைக்கு பேசலாம். இந்த சலுகை வரும் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும்.

பான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?ன்லைன் மூலமும் விண்ணப்பித்து பான்கார்டை பெறலாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லதுhttps://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Monday, August 06, 2012

ஸ்டேட் பேங்க் கிளர்க் பணியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது உறுப்பு வங்கிகளுக்கான கிளர்க் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்: கிளர்க்.
பணியிடங்கள்: 1000கும் மேற்பட்டவை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2012.
எழுத்து தேர்வுக்கான நாள்: 07.10.2012 மற்றும் 14.10.2012.

கல்வித் தகுதி: +2 அல்லது அதற்கிணையான படிப்பில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பு.

விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த தேர்வு குறித்து முழு விவரமும் அறிந்துக் கொண்டு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும். மேலும் தகவலுக்கு http://www.sbi.co.in/ பார்வையிடவும்.

Sunday, August 05, 2012

உங்கள் தளத்தை ஒரே நிமிடத்தில் 100+ Search Engineல் இணைக்க


நாம் நம்முடைய பிளாக்கை பிரபல படுத்த பல எண்ணற்ற வழிகளை கையாள்கிறோம். அதில் முக்கியமானது இந்த SEO எனப்படும் தேடியதிரங்களில் நம் பதிவை இணைப்பது.  இணைய உலகில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தேடியந்திரங்கள் இருப்பது நாம் அறிந்ததே இவை அனைத்திலும் நாம் ஒவ்வொன்றாக தேடி தேடி நம் பிளாக்கை இணைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அதை தவிர்க்கவே இந்த பதிவு.
இந்த வேலையை சுலபமாக்க நமக்கு ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் முகவரி மற்றும் உங்கள் மெயில் ஐடி மட்டும் கொடுத்தால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்க பட்டு விடும்.  கீழே என் தளத்தை இனைததர்க்கான முடிவை கொடுத்துள்ளேன். இதில் சரியாக 106 தளங்கள் உள்ளன.

உங்கள் பேஸ்புக் நண்பர்களின் முழுவிவரமும் ஒரே இடத்தில் அறிய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.

Airtel Prepaid வாடிக்கையாளர்களுக்கும் இனி ஆன்லைன் வசதிகள் - புதிய சலுகை

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் கூட செல்போன்கள் பயன்படுத்தும் அளவுக்கும் செல்போன்கள் வளர்ச்சி பெற்று விட்டது. செல்போன் சேவையில் அதிக வாடிக்கையாளர்களைகொண்டு இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 5 இடத்திலும் இருக்கும் நிறுவனம் Airtel நிறுவனமாகும். இந்த Airtel நிறுவனம் இப்பொழுது ஒரு புதிய சலுகையை அறிவித்து உள்ளனர். அதன் படி இனி Pre-Paid வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் அக்கௌன்ட் ஓபன் செய்து கொண்டு ஆன்லைன் வசதிகளை உபயோகிக்கலாம்.  முன்பு Postpaid வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த வசதிகளை பயன்படுத்த முடியும் இனி Prepaid வாடிக்கையாளர்களுக்கும்.

மின் வாரிய பிரிப்பும்-அதனால் உள்ள பயனும்?

Friday, August 03, 2012

மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு இதுதான் - அனைவரும் ஒத்துழைத்தால்?

அன்பர்களுக்கு வணக்கம், ஏதோ கொஞ்ச நாள் காற்று நம் பக்கம் அடித்ததால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் மின் பற்றாக்குறையை மறந்திருந்தோம், அது தற்கால தீர்வுதான், நிரந்தர தீர்வல்ல, என்னை பொறுத்த வரை மின் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு சூரிய சக்தி மட்டுமே.


மேலும் படிக்க சுட்டி

கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்![Educational Loans Details]


ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான்.
ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம்.
இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இத்தொடர்...
மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது.

Thursday, August 02, 2012

ஜிமெயில்: பயனுள்ள குறிப்புகள்

ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் அடங்கியிருக்கின்றன. அவற்றுள் எளிமையான, அதே சமயம் பயனுள்ள ஒரு சில தகவல்களைப் பார்ப்போம். முதலில் லேபிள் என்பதைப் பார்ப்போம்.


லேபிளின் பயன் என்ன?(Uses of label)

ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் நம்முடைய Inbox-ல் அடைந்து கிடைக்கும். இவற்றிலிருந்து முக்கியமான மின்னஞ்சல்களை வகை வாரியாகப் பிரித்து பயன்படுத்த உதவுபவைதான் லேபிள்கள்.

அதாவது நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள்(friends emails), அலுவலக தொடர்பான மின்னஞ்சல்கள்(office emails), சமூகத்தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல், மற்றவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்(others emails),  சொந்த மின்னஞ்சல்கள் (Personal emails) இப்படி இருக்கும் மின்னஞ்சல்களை ஒவ்வொரு வகைக்கும் குறிப்பிட்ட பெயருடன் லேபிளை நாம் உருவாக்கலாம்.  உருவாக்கிய அந்த லேபிள்களில் முன்னரே நமக்கு வந்த மின்னஞ்சல்களையும், இனி வரப்போகிற மின்னஞ்சல்களையும் உரிய லேபிளுக்கு நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். (move to label).

TNEB ITI Direct Recruitment from Employment Exchange News

வட மாநிலங்களில் மின்தடை-காரணம் என்ன?
இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு தினங்களாக நிலவி வரும் மின்தடை காரணமாக ஏறத்தாள 60 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாள பாதி இந்தியாவே இருளில் மூழ்கிப் போயுள்ளது. வட மாநிலங்களின் போக்குவரத்துத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரயில் போக்குவரத்து முற்றாகச் செயலிழந்துள்ளது. 300 இற்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயங்க முடியாத நிலையில் நிறுத்தப்பட்டன. ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் அனைவரும் பஸ், ஓட்டோ போன்ற மாற்று போக்குவரத்து வழிகளை நாடியதனால் வீதிகளில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. அரசு வைத்தியசாலைகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன.

Wednesday, August 01, 2012

பிறப்புச் சான்று பெறுவது எப்படி?

      இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)குடும்ப அட்டை,ஓட்டுநர் உரிமம்வாக்களிக்கும் உரிமை முதலான வசதிகளைப் பெற பிறப்பு சான்று முக்கியமான ஆவணமாகும். அதேபோன்று,  பள்ளிகள் முதல் அரசு பணிகளின் வரை சேர்க்கைகளுக்கும், திருமணம் செய்ய திருமண வயதை அடைந்ததை சட்டரீதியாக கோருவதற்கும்அரசு சலுகைகள் பெற என பல்வேறு விடயங்களுக்கு பிறப்பு சான்று அத்தியாவசியமான முக்கிய ஆவணமாகிறது.
இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படிபிறந்த ஒவ்வொருகுழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காககிராம மற்றும் நகர பதிவுத்துறைமாவட்டப் பதிவுத்துறைமாநில பதிவுத்துறைமத்தியபதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

   
ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெறபிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட  பிறப்பு பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாககுழந்தை பிறந்த 21 தினங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்தமருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்பு சான்று வழங்கப்படும்.

 
குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் குழந்தையின் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் குழந்தை பிறந்திருந்தாலோ சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்டதும்  பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்று வழங்கப்படுகிறது.
            விண்ணப்படிவங்கள் கீழ்காணும் அரசு வலைதளத்தில் உள்ளது. 
http://www.tn.gov.in/forms.html#Corporation


நன்றி http://tk.makkalsanthai.com/2012/07/blog-post_7857.html

புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

புதியவாக்காளர்புகைப்படஅடையாளஅட்டைபெறவிரும்புபவர்கள்மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும்மாநகராட்சி மண்டலஅலுவலகங்களிலும் விண்ணப்பித்துஇரண்டு வாரங்களில்பெற்றுக்கொள்ளலாம்.  இதற்கான விண்ணப்பத்தை படிவம் 6 ல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர் குறைந்த பட்சம் ஆறுமாதம் அவ்விடத்தில் உண்டு உறங்குபவராயும் 18 வயது பூர்த்தி அடைந்தவராயும் இருத்தல் வேண்டும். விசாரணையின் போது விண்ணப்பித்தவர் உள்ளூரில் வசிக்கவில்லை என்பது தெரியவந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். வாக்காளர் புகைப்பட  அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வசிக்கும் நிரந்தர முகவரிக்கான ஆதாரத்தையும் வயது சான்றையும் இணைத்தல் வேண்டும். விண்ணப்பம் முழுவதுமாய் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.  முழுவதுமாய் பூர்த்தி செய்யப்படாத மற்றும் கையொப்பமிடாத, தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வயதுக்கான ஆதாரமாக பிறப்பு சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பிடத்திற்கான சான்றாக குடும்ப அட்டை, பாஸ்போட், ஓட்டுநர் உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண அட்டை, கேஸ் வாங்கும் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில் , வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பதராருக்கு வந்த கடிதம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப் படிவம் கீழ் உள்ள அரசு வலைதளத்தில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.


Thanks to http://tk.makkalsanthai.com/2012/07/blog-post_9763.html
Related Posts Plugin for WordPress, Blogger...