உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, August 17, 2012

அனில் அம்பானிக்கு ஆதரவான மின்துறையின் முடிவால் நாட்டுக்கு நஷ்டம் ரூ. 29,033 கோடி!

டெல்லி: மின்துறையின் தவறான செயலால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு ரூ. 29,033 கோடி லாபமும் மத்திய அரசுக்கு அதே அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் மின் உற்பத்தியை 1,00,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு தீட்டிய திட்டம் தான் Ultra Mega Power projects (UMPP). இத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தலா 4,000 மெகாவாட் திறன் கொண்ட, நிலக்கரியால் இயங்கும், 16 மெகா மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத் திட்டத்தை மத்திய மின்துறையின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் உதவியோடு தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்தியப் பிரதேசம் சசான் பகுதியில் ஒரு மின் நிலையத்தைக் கட்டி, இயக்கும் பணி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ள 3 சுரங்கங்களும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை எடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தராங்கி என்ற இடத்தில் உள்ள தனது மின் திட்டப் பணிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்தியுள்ளது.
உபரியாக இருந்த நிலக்கரியை ரிலையன்ஸ் தனது வேறு திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு விதியை, ஏலம் எல்லாம் முடிந்த பிறகு மின்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது. இதை வைத்து ரிலையன்ஸ் புகுந்து விளையாடியதில் நாட்டின் ரூ. 29,033 கோடி மதிப்புள்ள நிலக்கரி கொள்ளை போய்விட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...