உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, August 12, 2012

7000கோடி தண்ட செலவு(நல்லது) செய்யும் மத்திய அரசு...FREE MOBILE PHONE( தலபோலவருமா பதிவு )

சுதந்திர தினம் அன்று 7000கோடி ருபாய் செலவில் இந்தியாவில் உள்ள வறுமை கோட்டுக்கு கிழே உள்ள குடும்பங்களுக்கு இலவசமாய் மொபைல் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்தாய் உள்ளது தெரியும்மா "ஒவ்வொருவர் கையிலும் ஒரு மொபைல் போன்"  என்ன ஒரு அருமையான பெயர்.
மொபைல் போன் கொடுத்தால் மட்டும் போதுமா என யாரும் கேட்க்க கூடாது என்பதற்காக 200 உள்ளூர் அழைப்புகள் ஒவ்வொரு மாதமும் இலவசமாய் அழைத்து கொள்ளும் சிறப்பு வசதியை தருவதாய் உள்ளார்கள்.

வறுமை கோட்டுக்கு கிழே வசிபவர்களின் லிஸ்ட் எடுத்தால் 60 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.அவர்களுக்கு எல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம் நாம ஒரே ஒரு மொபைல் போன் கொடுத்தால் போதும் அவர்களின் பசி எல்லாம் தீர்ந்து போய் விடும்.அந்த பணத்தை வைத்து இந்தியாவிற்கு வேறு ஏதாவது நல்லது செய்யலாம் மொபைல் போன் கொடுகுரானுவோ கருமம் புடுச்சவணுக.நம்ம ஆளுங்களும் இலவசம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போகின்றனர்.


தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றோம் அதற்கு ஏதாவது செய்யலாம்.அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தலாம்.சுகாதார வசதி இல்லாமல் நாட்டில் பலர் உள்ளனர்.இதை எல்லாம் செய்வதை விட்டு யாரவது மொபைல் கேட்டார்களா என்ன கொடுமை இது.

இன்னும் இந்த திட்டம் முடிவுக்கு வரவில்லை.இதற்கு அனைவரும் எதிர்ப்பினை தான் காட்டுகின்றனர் இதற்கு தினமலர் வந்த சில எதிர்ப்பு கமெண்ட்...


7000 கோடிக்கு உருப்படியா மருத்துவ வசதியையும் கல்விக்கூடங்களின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்துங்கள். அறிவியல் ஆராய்ச்சிக்கும், infrastructure மேம்படுத்தவும் உபோகப்படுத்திங்கள். இளைஞர்களின் திறமையையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்க பயன்படட்டும். 1.3 பில்லியன் டாலரை வீணாக்க வேண்டாம். இதுதான் சீனாவிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் உருப்பட முயற்சிக்கிறார்கள். நம் அரசாங்கங்கள் மக்களை கையேந்தவைக்கவே முயற்சிக்கின்றன

ஜயாவை முந்திவிட்டார் சோனியா. நூறு கோடி மக்களை கேவலமாக காண்பதால்தான் இலவசங்களை அள்ளி வீசுகின்றனர்.இந்தியா நாட்டிற்கு சரியான தலைவர் இல்லாததால் சுரண்டல் நல்ல முறையில் நடக்கின்றது.

மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வேலையில்லை. இதற்கு காரணம் கல்வி இல்லை. எனவே உண்ண உணவு இல்லை. பாரதத்தை 40 ஆண்ட ஊழல் பெருச்சாலி காங்கிரஸின் சாதனை ரூபாய் 27 சம்பாதிப்பவர்களை வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று கூறி இந்த ஏழைகளைக் கேலி செய்த பொய்யர்கள். இப்போது தான் புரிகிறது. 2014 தோற்கப் போகிறோம் என பயம். அதற்கு இந்த செல் போன் லஞ்சம் . கடவுளே இந்த சண்டாளர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்று

சமீபத்தில் ஒரு புள்ளி விவரம் தெரிவித்த அதிர்ச்சி தகவல் " நம் நாட்டில் 30 கோடி மக்கள் சரியான சுகாதார வசதி இன்றி வாழ்கிறார்கள். சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் மிகவும் பின் தங்கிய நாடுகளான ஆப்ரிக்கா, பாகிஸ்தான், நமிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வரிசையில் இருக்கிறோம். இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக செல் போன் தருவது என்பது காங்கிரஸ் அரசின் நிர்வாக திறமைஇன்மையே காட்டுகிறது. கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை மக்களுக்கு இலவசமாக அளிப்பது அரசின் கொள்கை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இல் தெரிவித்த மத்திய அரசு இப்பொது எந்த கொள்கைஇன் கீழ் மக்களுக்கு இலவசமாக செல் போன் வழங்குகிறது? நாட்டில் 40 சதவீத மக்கள் கல்வி அறிவு இன்றி (தங்கள் தாய்மொழி கூட எழுத படிக்க தெரியாத நிலையில்) இருக்கும்பொழுது அவர்களால் எப்படி செல் போன் உபயோகிக்க முடியும்? அரசாங்கத்திடம் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தால் அதை பள்ளிகளில் இருக்கும் இளம் மாணவ விஞ்ஞானிகளிடம் கொடுத்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கலாம். தொழில் துவங்க உதவிகள் செய்யலாம். அனைவர்க்கும் கல்வி கட்டாயமாக்க சட்டம் கொண்டு வரலாம். அப்படி செய்தல் இந்தியா 2050 இல் வல்லரசாகும். அதை விடுத்து செல் போன், மிக்சி, டிவி போன்றவைகளை இலவசமாக கொடுத்துகொண்டிருந்தால் நிச்சயம் 2014 தேர்தலில் மக்கள் மூலம் தகுந்த பதிலடி கிடைக்கும்.

தற்போது உழைக்கும் மக்களிடம் உழைக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. கட்டிட வேலைக்கு வருபவர்கள் கூட பாதி நேரம் மொபைல் போனில் பேசி கொண்டு தான் வேலையை கவன குறைவாக செய்கிறார்கள். விபத்து ஏற்படுத்துகிறார்கள். பொருட்களை வீணடிக்கிறார்கள். அவர்களுடைய LABOUR PRODUCTIVITY குறைந்து வருகிறது. வேலையில் ஆர்வம் குறைந்து வருகிறது. இதில் இலவச மொபைல் போன் கொடுத்தால் இன்னமும் நிலைமை படுமோசமாக தான் போகும். இந்த 7000 கோடிகளை கொண்டு எவ்வளவு நல்ல விஷயங்களை செய்யலாம். விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செய்யலாம். நிபுணர்களை கொண்டு அவர்களுக்கு எது தேவையோ அந்த தேவைகளை நிறைவேற்றலாம். நாட்டில் எவ்வளவோ DEVELOPMENTAL ACTIVITIES மேற்கொள்ளலாம். அதை விட்டு மக்களை படு குழிக்குள் தள்ளும் இந்த மொபைல் போன் தற்போது தேவையா. இந்த திட்டத்தில் எவ்வளவு கொள்ளை பிளான் போட்டிருக்கிறார்களோ இந்த அரசியல் மகான்கள். நாம் கட்டும் வரி பணம் நம்முடைய அனுமதி இல்லாமலேயே வீணடிக்க படுகிறது. யார் இதை தட்டி கேட்பது. இவ்வளவு வரி கட்டும் நமக்கு இருப்பதற்கு சுத்தமான சுகாதாரமான வாழ்விடம் இவர்களால் தர முடியவில்லை. நல்ல சாலை வசதி இல்லை. INFRASTRUCTURE படு மோசம். ஆனால் தேவை இல்லாத திட்டங்களை பல்லாயிரகணக்கான ரூபாய்களில் தீட்டுகிறார்கள். இந்த திட்டமும் நாசமாக தான் போகும். எல்லாம் நமது தானை தலைவர் முன்னாள் முதல்வர் டெசோ நாயகன் கருணா ஆரம்பித்து வைத்து காட்டிய வழி.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச மொபைல் போன். ஆஹா என்ன அருமையான திட்டம். இவர்களுக்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு வழி செய்ய வக்கில்லை. பஞ்சாபில் டன் கணக்கில் சேமிக்க இடமில்லாமல் அழுகி மக்கியது கோதுமை - அவை வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சென்றடைந்திருந்தால் அரசுக்கு எவ்வளவு பெருமை. கோடி கணக்கில் ஆர்டர் வாங்கப்போகிறவர் யார்? வெளிநாட்டவரா உள்நாட்டவரா. மற்றுமொரு பணக்காரர் உருவாகிறார் கூடவே இன்னொரு ஊழலும் தொடரும். இவர்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக இவைகளை வாங்கவும் ஒருவர் தயாராக இருப்பார் - சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்கள் ரீசார்ஜ் எப்படி செய்வார்கள். ஒரு வேளை காங்கிரேசுக்கு அடுத்த எலெக்சனில் ஓட்டு சாவடிக்கு போகாமலே மொபைல் போனிலிருந்தே ஓட்டு போடும் வகையை ஏற்படுத்த எண்ணமோ என்னவோ யார் கண்டார்கள்.
THANKS TO http://thalapolvaruma.blogspot.com/2012/08/7000-free-mobile-phone.html..
Related Posts Plugin for WordPress, Blogger...