உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, August 01, 2012

புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

புதியவாக்காளர்புகைப்படஅடையாளஅட்டைபெறவிரும்புபவர்கள்மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும்மாநகராட்சி மண்டலஅலுவலகங்களிலும் விண்ணப்பித்துஇரண்டு வாரங்களில்பெற்றுக்கொள்ளலாம்.  இதற்கான விண்ணப்பத்தை படிவம் 6 ல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர் குறைந்த பட்சம் ஆறுமாதம் அவ்விடத்தில் உண்டு உறங்குபவராயும் 18 வயது பூர்த்தி அடைந்தவராயும் இருத்தல் வேண்டும். விசாரணையின் போது விண்ணப்பித்தவர் உள்ளூரில் வசிக்கவில்லை என்பது தெரியவந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். வாக்காளர் புகைப்பட  அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வசிக்கும் நிரந்தர முகவரிக்கான ஆதாரத்தையும் வயது சான்றையும் இணைத்தல் வேண்டும். விண்ணப்பம் முழுவதுமாய் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.  முழுவதுமாய் பூர்த்தி செய்யப்படாத மற்றும் கையொப்பமிடாத, தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வயதுக்கான ஆதாரமாக பிறப்பு சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பிடத்திற்கான சான்றாக குடும்ப அட்டை, பாஸ்போட், ஓட்டுநர் உரிமம், வீட்டு வரி ரசீது, மின்சார கட்டண அட்டை, கேஸ் வாங்கும் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, சமீபத்திய டெலிபோன் பில் , வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பதராருக்கு வந்த கடிதம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப் படிவம் கீழ் உள்ள அரசு வலைதளத்தில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.


Thanks to http://tk.makkalsanthai.com/2012/07/blog-post_9763.html
Related Posts Plugin for WordPress, Blogger...