உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, August 01, 2012

பிறப்புச் சான்று பெறுவது எப்படி?

      இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)குடும்ப அட்டை,ஓட்டுநர் உரிமம்வாக்களிக்கும் உரிமை முதலான வசதிகளைப் பெற பிறப்பு சான்று முக்கியமான ஆவணமாகும். அதேபோன்று,  பள்ளிகள் முதல் அரசு பணிகளின் வரை சேர்க்கைகளுக்கும், திருமணம் செய்ய திருமண வயதை அடைந்ததை சட்டரீதியாக கோருவதற்கும்அரசு சலுகைகள் பெற என பல்வேறு விடயங்களுக்கு பிறப்பு சான்று அத்தியாவசியமான முக்கிய ஆவணமாகிறது.
இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படிபிறந்த ஒவ்வொருகுழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காககிராம மற்றும் நகர பதிவுத்துறைமாவட்டப் பதிவுத்துறைமாநில பதிவுத்துறைமத்தியபதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

   
ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெறபிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட  பிறப்பு பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாககுழந்தை பிறந்த 21 தினங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்தமருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்பு சான்று வழங்கப்படும்.

 
குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் குழந்தையின் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் குழந்தை பிறந்திருந்தாலோ சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்டதும்  பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்று வழங்கப்படுகிறது.
            விண்ணப்படிவங்கள் கீழ்காணும் அரசு வலைதளத்தில் உள்ளது. 
http://www.tn.gov.in/forms.html#Corporation


நன்றி http://tk.makkalsanthai.com/2012/07/blog-post_7857.html
Related Posts Plugin for WordPress, Blogger...