உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, August 11, 2012

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்

இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
 சென்னை, ஆக. 10: 2012ம் ஆண்டிற்கான 13320 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இப்போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரையில் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதபட்சத்தில், உரிய அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டிய தேதியினை இணையதளத்தில் அறிந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதல் அவரவருக்கென தெரிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு மையத்திற்கு காலை 8.00 மணிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. 

மேலும் விவிவான தகவல்களுக்கு http://www.tnusrb.tn.gov.in/GR2PC_JW_Firemen_2012/venue_PMT_PET.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...