உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, August 12, 2012

வரவேற்பு இல்லாத கோவை-சேலம் பாசஞ்சர் ரயில்

ஈரோடு: காலை மற்றும் மாலை நேரம் இல்லாமல், மதிய நேரத்தில் இயக்கப்படுவதால் கோவை- சேலம் பாசஞ்சருக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை.
ஈரோடு- கோவை பாசஞ்சர் ரயில் கடந்தாண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் காலை, 7.05க்கு புறப்பட்டு, திருப்பூர் வழியாக, 9.35க்கு கோவை சென்றடைகிறது. அங்கிருந்து காலை, 9.50க்கு புறப்பட்டு மதியம், 12.15க்கு ஈரோட்டை வந்தடைகிறது. மீண்டும் மாலை, 3 மணிக்கு புறப்பட்டு, 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை, 6.25க்கு புறப்பட்டு இரவு, 8.55க்கு ஈரோடு வந்தடைகிறது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் இருந்து சேலம் செல்ல சாதாரண பஸ்களில், 30, எக்ஸ்பிரஸ் பஸ்களில், 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்களை பொறுத்த வரையில் பாசஞ்சர் ரயில்களில் ஈரோடு- சேலத்துக்கு, 10 ரூபாய், எக்ஸ்பிரஸ் ரயில்களில், 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுமானால், பத்து ரூபாயில் சேலம்- ஈரோடு பயணிக்க முடியும். அதனால், சேலம் - ஈரோடு இடையே மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்தாண்டு மார்ச் மாதம் தாக்கலான ரயில்வே பட்ஜெட்டில், கோவை- ஈரோடு பாசஞ்சர் ரயில், சேலம் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.கோவையில் இருந்து மதியம், 12.15க்கு ஈரோடு வந்து, ரயில்வே ஷெட்டில் மாலை, 3 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரத்தில், இந்த ரயில் சேலம் வரை இயக்கப்படுகிறது. இதற்காக கோவையில் இருந்து ஈரோட்டுக்கு, 15 நிமிடம் முன்னதாக வந்து, சேலம் சென்று ஈரோட்டுக்கு மாலை, 3 மணிக்கு வந்து, திரும்பவும் கோவை செல்கிறது. மதிய நேரத்தில் இயக்கப்படுவதால், ரயிலில் பயணிகள் கூட்டமின்றி ஓடிக் கொண்டுள்ளது.பயணிகள் கூறியதாவது:
"பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த ரயில் இயக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாக இல்லாத மதிய நேரத்தில் இயக்கப்படுவதால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. சும்மா நிற்கும் நேரத்தில் ரயிலை இயக்கி, ரயில்வே துறை வருவாயை வீணடிக்கிறது. ஒரு முறை மட்டுமே சேலம் வரை இயக்காமல், காலை மற்றும் இரவு நேரத்தில் இயக்க வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நன்மையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...