உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, August 05, 2012

உங்கள் பேஸ்புக் நண்பர்களின் முழுவிவரமும் ஒரே இடத்தில் அறிய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.
பயன்கள்:
 • இந்த தளம் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியல்.
 • உங்கள் நண்பர்கள் போஸ்ட் செய்த தகவல்கள் படத்துடன்.
 • உங்கள் பேஸ்புக் லிஸ்டில் உள்ள அனைத்து நண்பர்களின் பிறந்த நாள் தேதிகள் ஒவ்வொரு மாதமாக.
 • உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இடம் கூகுள் மேப் மூலமாக.
 • உங்கள் பேஸ்புக் நண்பர்களில் அதிக ஆல்பம் வைத்துள்ளவர்களின் முதல் பத்து நபர்கள். இதே போன்று அதிக போட்டோக்கள் வைத்திருப்பவர்களின் முதல் பத்து பேர் லிஸ்ட்.
 • உங்களின் பேஸ்புக் நண்பர்களில் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு என்ற பட்டியல்(சதவீத கணக்கில்).
 • பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களின் activity இது  போன்ற இன்னும் சில தகவல்களோடு நமக்கு தருகிறது. 

செயல்படுத்தும் முறை:
 • முதலில் இந்த லிங்கில் Facebook Spectrum க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும்.
 • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Login பட்டனை அழுத்தவும்.
 • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்தவும்.
 • அடுத்து உங்கள் விவரங்கள் லோடிங் ஆகும். அதுவரை காத்திருக்கவும் சரியாக லோட் ஆகவில்லை என்றால் refresh செய்யவும். • சரியாக லோட் ஆகி முடிந்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களின் விண்டோ வந்தால் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் இடத்தில் உள்ள ஒவ்வொரு லிங்காக க்ளிக் செய்து அந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Friends
இந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள அனைத்து நண்பர்களின் பட்டியல் வரும்.


Timeline
இந்த லிங்கை க்ளிக் செய்தால் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தகவல்கள் மற்றும் எப்பொழுது அதை பகிர்ந்தார்கள் என்ற விவரங்கள் வரும். இதில் ஒவ்வொரு நண்பர்களாக தேர்வு செய்து அந்த விவரங்களை காண வேண்டும்.

Birthday
இதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். இதை க்ளிக் செய்தால் நம் நண்பர்களின் பிறந்த நாள் தேதிகள் மாதவாரியாக வரும் உதாரணமாக அடுத்த மாதத்தில் எத்தனை பிறந்தார்கள் என்று கீழே பாருங்கள். இதுபோல் ஒவ்வொரு மாதத்திற்கும் வரும்.


மேலே பார்த்தீர்கள் என்றால் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் மே மாதத்தில் 29 பேர் பிறந்துள்ளார்கள். பெயருக்கு அருகில் உள்ளது அவர்கள் பிறந்த தேதியாகும்.

Location
இந்த லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடம் பற்றிய விவரங்கள் வரும்.


அடுத்து Albums, Other, Mutuals, Activity, Search, More, போன்ற லிங்குகளையும் அழுத்தி அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். நேரமின்மையால் ஒவ்வொன்றையும் தனி தனியாக விளக்க முடியவில்லை.

Albums

Gender


இது போன்று மற்றும் பல விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...