உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, August 02, 2012

வட மாநிலங்களில் மின்தடை-காரணம் என்ன?
இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த இரண்டு தினங்களாக நிலவி வரும் மின்தடை காரணமாக ஏறத்தாள 60 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாள பாதி இந்தியாவே இருளில் மூழ்கிப் போயுள்ளது. வட மாநிலங்களின் போக்குவரத்துத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரயில் போக்குவரத்து முற்றாகச் செயலிழந்துள்ளது. 300 இற்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயங்க முடியாத நிலையில் நிறுத்தப்பட்டன. ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் அனைவரும் பஸ், ஓட்டோ போன்ற மாற்று போக்குவரத்து வழிகளை நாடியதனால் வீதிகளில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. அரசு வைத்தியசாலைகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன.

பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டும் மின்சாரத்தை பிரித்து அனுப்பும் பணியை செய்வதற்காக, வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய மின் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தெற்கு மின் தொகுப்பைத் தவிர, மற்ற மின் தொகுப்புகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை (30 ஆம் திகதி) அதிகாலை 2-30 மணியளவில் வட மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்கும், வடக்கு மின் தொகுப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி உள்ளிட்ட ஏழு வட மாநிலங்கள் இருளில் மூழ்கின.

 இதையடுத்து மாற்று ஏற்பாடாக பூடானில் இருந்து சுமார் 8,000 மெகா வாட் மின்சாரத்தை முன்னுரிமை அடிப்படையில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் மின் தடை ஏற்பட்ட மாநிலங்களில் அவசரத் தேவைக்கு மின் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து மாலை 4.30 மணியளவில் வடக்கு மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு சீர் செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலே அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை (31 ஆம் திகதி) பகல் 1.30 மணியளவில் மீண்டும் வடக்கு மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட்டது.
இம்முறை இதன் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் வடகிழக்கு மின்தொகுப்பும் பாதிக்கப்பட்ட நிலையில், கிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், சிக்கிம், ஒடிசா, சத்தீஸ்கரிலும், வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயம், திரிபுரா உள்ளிட்ட 20 மாநிலங்களிலும் மின் தடை ஏற்பட்டது.

பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குறித்த மின்தடைப் பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில் மின்தடை ஏற்பட்டதற்கு என்ன காரணம் கூறுகிறார்கள்?
வட இந்திய மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மின்சாரத்தை கூடுதலாக எடுத்ததால்தான் மின் கிரிடு பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுக் கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் பருவ மழை குறைந்து போய் விட்ட காரணத்தால் நீர் மின்சார உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலும் தொடர்ந்து கொளுத்தி வருவதால் மக்களின் மின்சாரப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரத்தின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் கூடுதலாக எடுக்கப் போய் சப்ளை கிரிடு டிரிப் ஆகி செயலிழந்து போய் விட்டது. இதனால்தான் மின்தடை ஏற்பட்டு அவை இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறப்படுகின்றது.

வட மாநிலங்களைப் பொருத்தவரை உ.பிதான் இந்த கூடுதல் மின் எடுப்பில் முன்னணியில் உள்ளது. அடுத்த இடத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. இதில் உ.பிதான் தொடர்ந்து பெருமளவிலான மின்சாரத்தை எடுத்து வருகிறது. இதையடுத்து இந்த மாநில மின் வாரிய தலைமை பொறியாளருக்கு மத்திய மின்சார முறைமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி டெல்லிக்கு அழைத்துள்ளது. அதேபோல ஹரியானாவும், பஞ்சாபும் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட மிகப் பெரிய அளவில் மின்சாரத்தைத் திருடுகின்றனவாம். இவற்றுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உ.பியில், மாயாவதி முதல்வராக இருந்தவரை இந்த அளவுக்கு மின்சாரத்தை திருடவில்லை. காரணம், அவர் தனது மாநிலத்திற்குத் தேவையான மின்சாரத்தை சட்டிஸ்கர், குஜராத், மேற்கு கிரிடிலிருந்து பெற்று விநியோகித்துள்ளார். ஆனால் முலாயம் சிங்கின் கட்சி வெற்றி பெற்று அங்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் பதவிக்கு வந்தது முதலே வடக்கு கிரிடில் பெருமளவில் கை வைத்து வருகிறார்கள். இதை மத்திய அரசோ, மத்திய மின்துறை அமைச்சரோ தட்டிக் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால்தான் தற்போது கிரிடே அடிபட்டுப் போகும் அளவுக்கு கரண்ட்டை உறிஞ்சிக் எடுத்துள்ளனர் உ.பி. மாநிலத்தவர்.
உ.பி. மாநில மின்வாரியம் கூடுதலாக எடுத்துள்ள மின்சாரத்தின் அளவு என்ன தெரியுமா...? டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு திருடி வந்துள்ளனராம்.....
படங்களுக்கு நன்றி:விறுவிறுப்பு.கொம்


Thanks to http://www.venkkayam.com/2012/08/blog-post_7592.html
Related Posts Plugin for WordPress, Blogger...