உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, August 23, 2012

டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை

எல்எல்ஆர் விண்ணப்பித்து 30நாட்கள் ஆகிவிட்டதா.  தன்னம்பிக்கையுடன், சாலை விதிமுறைகளை அனுசரித்து வாகனம் ஓட்ட பழகிவிட்டீர்களா? இப்போது நீங்கள் தாரளமாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவராகிவிட்டீர்கள்.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் படிவம் 4ஐ பெற்று பூர்த்தி செய்து அதனுடன் பழகுனர் உரிமத்தின்(எல்எல்ஆர்) நகல், ஓட்டி காட்டப் போகும் வாகனத்தின் ஆவணங்கள், வேறு ஒருவரின் வாகனமாக இருந்தால் அவரிடமிருந்து அத்தாட்சி கடிதம் ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

டிரைவிங் பயிற்சி பள்ளி மூலம் செல்பவர்கள் படிவம் 5 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இலகு ரக வாகனத்துக்கு மட்டும் ரூ.350ம் இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து விண்ணப்பித்தால் ரூ.400ம் கட்டணமாக செலுத்த வேண்டும். 

இதன்பின், நடைபெறும் ஓட்டுனர் தேர்வில் நீங்கள் வாகனத்தை சரியாக இயக்கத் தெரிகிறதா மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறீர்களா என்பதை பார்த்து உங்களக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவிங் லைசென்ஸ் வழங்க பரிந்துரைப்பார்.

இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பித்து இதேபோன்று வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வீட்டிற்கே அனுப்பப்ட்டு விடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...