உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, August 12, 2012

காரணமே இல்லாமல் கைவிடப்பட்ட ஈரோடு - பழநி ரயில் திட்டம்

ஈரோடு:நீண்ட போராட்டங்களுக்குப் பின் அறிவிக்கப்பட்ட, ஈரோடு - பழநி ரயில் பாதைத் திட்டம், சர்வே பணிகள் முடிவதற்குள், எந்தக் காரணத்தையும் கூறாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்களின் நூறாண்டு கனவு கலைந்துள்ளது.கடந்த 1913 ல், ஈரோடு- தாராபுரம்- பழநி ரயில்பாதைத் திட்டத்துக்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவரை இந்த திட்டம் கோரிக்கை அளவிலேயே இருந்து வந்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை மாநாடு என பல கட்டப் போராட்டங்களை, ரயில்வே மக்கள் பணி சங்கம் சார்பில் நடத்தி வந்தனர்.இப்பகுதியில் உற்பத்தியாகும் வேளாண்மைப் பொருள்களை வெளி சந்தைக்குக் கொண்டு செல்லுதல், இந்திய அளவில் பிரசித்தி பெற்ற சென்னிமலை ஜமக்காளம், பருத்தி நூல், வெண்ணெய், நெய், விசைத்தறிகளில் உற்பத்தியாகும் துண்டு, லுங்கி ஆகியவற்றை வெளியூர் சந்தைகளுக்கு கொண்டுசெல்ல லாரி போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

டீசல் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், ரயில்கள் மூலம் உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வதே, உற்பத்தியாளர்களுக்கு குறைந்த செலவுக்குக் கைகொடுக்கும். மேலும், "இப்பகுதி மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்ல ஈரோடு- தாராபுரம்- பழநி ரயில்பாதைத் திட்டம் மிகவும் அவசியமாக உள்ளது' என, ரயில்வே மக்கள் பணி சங்கத்தினர் கூறுகின்றனர்.இந்நிலையில், 2004 பிப்ரவரியில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 2005, 2010, 2011 ரயில்வே பட்ஜெட்டில், முறையே இரண்டு கோடி, 40 லட்சம், 33 லட்சம் என, 2.73 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டது.இந்த ஒதுக்கீட்டைக் கொண்டு சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இத் திட்டத்தை நிறுத்தி வைக்கும்படி ரயில்வே வாரியம் பரிந்துரையின்படி, சேலம் ரயில்வே கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் சர்வே பணிகளை கைவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு, கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டு உள்ளது. 

இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ரயில்வே மக்கள் பணிகள் சங்கத்தின் பொதுச் செயலர் லிங்கம் சின்னசாமி கூறும்போது, ""நூறாண்டு கனவு திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கலைத்துவிட்டனர். பல போராட்டங்களுக்குப் பின் திட்டத்துக்கான அறிவிப்பை ரயில்வே பட்ஜெட்டில் பெற்றோம். எவ்விதக் காரணத்தையும் கூறாமல் தற்போது திட்டத்தை நிறுத்திவைத்துள்ளனர். இதனால், தாராபுரம், காங்கேயம், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளின் வளர்ச்சி தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

ரயில் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக, ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி எழுத்துப்பூர்வமான பதிலை ரயில்வே துறையிடம் பெற்றுள்ளார். 
அவர் கூறியதாவது:ஈரோடு- பழநி ரயில் திட்டத்துக்கு கடந்த ஆண்டு 1.2 கோடி ரூபாயும், நடப்பாண்டில் 2 கோடி ரூபாயம் ஒதுக்கியுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று மட்டும் தெரிவித்துள்ளனர்; காரணத்தைக் கூறவில்லை.ரயில்வே துறையின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை. ஒரு திட்டத்துக்கான சாதக, பாதகங்களை பெற்றபின்பே, சர்வே செய்யத் தொடங்குவர். தற்போது, திட்டத்துக்கான நிலத்தை அடையாளம் கண்டு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தெற்கு ரயில்வே எம்.பி.,கள் கூட்டத்துக்கு அடுத்த மாதம் அழைப்பு விடுத்துள்ளனர். அதில், இப்பிரச்னையை எழுப்புவேன், என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...