உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, August 02, 2012

ஜிமெயில்: பயனுள்ள குறிப்புகள்

ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் அடங்கியிருக்கின்றன. அவற்றுள் எளிமையான, அதே சமயம் பயனுள்ள ஒரு சில தகவல்களைப் பார்ப்போம். முதலில் லேபிள் என்பதைப் பார்ப்போம்.


லேபிளின் பயன் என்ன?(Uses of label)

ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் நம்முடைய Inbox-ல் அடைந்து கிடைக்கும். இவற்றிலிருந்து முக்கியமான மின்னஞ்சல்களை வகை வாரியாகப் பிரித்து பயன்படுத்த உதவுபவைதான் லேபிள்கள்.

அதாவது நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள்(friends emails), அலுவலக தொடர்பான மின்னஞ்சல்கள்(office emails), சமூகத்தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல், மற்றவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்(others emails),  சொந்த மின்னஞ்சல்கள் (Personal emails) இப்படி இருக்கும் மின்னஞ்சல்களை ஒவ்வொரு வகைக்கும் குறிப்பிட்ட பெயருடன் லேபிளை நாம் உருவாக்கலாம்.  உருவாக்கிய அந்த லேபிள்களில் முன்னரே நமக்கு வந்த மின்னஞ்சல்களையும், இனி வரப்போகிற மின்னஞ்சல்களையும் உரிய லேபிளுக்கு நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். (move to label).

மீண்டும் தேவையானபோது அந்த லேபிளைக் கிளிக் செய்து வேண்டிய மின்னஞ்சல்களை எளிதாக பெறலாம். அதாவது நண்பர்களிடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல்களை மட்டும் பார்க்க விரும்பினால் Friends என்ற லேபிளைக் கிளிக் செய்து பார்த்துக்கொள்ள முடியும். அலுவலகத் தொடர்பான மின்னஞ்சல்களைக் காண Office என்ற லேபிளை கிளிக் செய்து பார்வையிடலாம். லேபிளின் முக்கியப் பயனே இதுதான்.  

ஜிமெயிலில் லேபிள் எப்படி உருவாக்குவது?(How to create label in gmail)


இது மிக எளிதான ஒன்றுதான். உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழைந்தவுடன், செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்து அதில் விரியும் dropdown மெனுவில் settings என்பதை கிளிக் செய்யுங்கள். தோன்றும் பக்கத்தில் இரண்டாவதாக labels என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

இப்போது தோன்றும் பக்கத்தில் System labels,  Circles,  என்ற வரிசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்றாவதாக Labels என்பது இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.  அதற்கு கீழே Create label என்ற பட்டனைச் சொடுக்குங்கள். இப்போது தோன்றும் பெட்டியில் Please enter a new label name: என்ற பெட்டியில் நீங்கள் உருவாக்க விரும்பும் லேபிளின் பெயரைக் கொடுத்து Create என்ற பட்டனைச் சொடுக்கவும்.  இப்போது உங்களுக்கான புதிய லேபிள் உருவாக்கப்பட்டுவிட்டது. நான் office document எனக் கொடுத்து புதிய லேபிளை உருவாக்கியுள்ளேன்.  இதுதான் லேபிள் உருவாக்கும் முறை.

இங்கு ஒரு கேள்வி எழலாம். Nest label under: என்பது என்ன?

இதனுடைய பயன்  நாம் ஏற்கனவே உருவாக்கிய லேபிளினுள் (இணைந்து) வரச்செய்யவேண்டும் என்றால் இதிலுள்ள பெட்டியில் டிக் செய்து எந்த லேபிளின் கீழ் வரவேண்டுமோ, அதாவது Parent label நாம் செலக்ட் செய்து கிரியேட் என்பதை அழுத்தி புதிய லேபிளை, தொடர்புடைய லேபிளோடு இணைத்துக்கொள்ளலாம்.



உதாணரமான Office Document என்ற லேபிளின் உள்ளே office account என்ற லேபிள் வரவைக்க மேற்சொன்ன  Nest label under: என்ற முறையைப் பயன்படுத்தி, Parent Label ஆக Office Document என்பதை தேர்வு செய்து கிரியேட்(Create) என்ற பட்டனைச் சொடுக்குவதன்மூலம் உங்கள் லேபிளில் தொடர்புடைய லேபிளையும் உள்இணைத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு கோப்புறையில் (Folder) மற்றொரு கோப்புறை (Folder)அமைப்பது போலதான் இதுவும்.

இப்போது ஜிமெயிலின் முகப்புப் பக்கத்தில் office document என்ற லேபிளை கிளிக் செய்யும்போது அதனுடைய பேரண்ட் லேபிளான Office account என்ற லேபிள்தோன்றும். அதை கிளிக் செய்யும்போது அதிலுள்ள மின்னஞ்சல்களை படிக்க முடியும்.

மின்னஞ்சல்களை குறிப்பிட்ட லேபிளுக்கு எப்படி நகர்த்துவது? (How to Move E-mails specific label)

இதுவும் மிக சுலபமான ஒன்றுதான். Office தொடர்பான மின்னஞ்சல்கள் உங்களுக்கு தினம்தோறும் வந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.. ஒவ்வொரு முறையும் அவ்வாறு வரும் மின்னஞ்சல்களனைத்தையும் முதலில் செலக்ட்செய்துகொள்ளுங்கள்.

பிறகு மேலே தோன்றும் போல்டர் ஐகானில் கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்த மின்னஞ்சல்களை எந்த லேபிளுக்கு நகர்த்த நினைக்கிறீர்களோ அந்த லேபிளை செலக்ட் செய்வதன் மூலம் தேர்ந்தெடுத்த மின்னஞ்சல்களை நகர்த்தலாம்.

அந்த குறிப்பிட்ட லேபிளைக் கிளிக் செய்து பார்த்தீர்களேயானால் அங்கு நீங்கள் நகர்த்திய மின்னஞ்சல்கள் அனைத்தும் இருக்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட மின்னஞ்சல்களை, ஒரு குறிப்பிட்ட லேபிளுக்கு எளிதாக நகர்த்த முடியும்.

மேலும் சில பயனுள்ள குறிப்புகள்: 

ஜிமெயில் நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ஒரு சிலதை மட்டுமே படிப்போம். முக்கியமான மின்னஞ்சல்களைப் படித்துவிட்டு மற்றதை திறக்காமலேயே விட்டிருப்போம்.

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை பெரும்பாலும் படிக்காமல் விட்டிருப்போம். அல்லது தேவையில்லை என கருதும் மின்னஞ்சல்களை திறக்காமலேயே விட்டிருப்போம். என்றாவது ஒருநாள் திறந்து படிக்காத மின்னஞ்சல்களை ஒரு பார்வையிடுவோம் என் நினைக்கும்போது படிக்காத மின்னஞ்சல்களை தேடிப்பெறுவது கொஞ்சம் சிரமம்.
  • இந்த மாதிரியான தருணங்களில் நீங்கள் Gmail-ல் உள்ள சர்ச் பாக்சில் Lable:unread என கொடுத்தால் போதும். இதுவரைக்கும் திறந்து படிக்காத அத்தனை மின்னஞ்சல்களும் உங்கள் பார்வைக்குக் கிடைக்கும்.
  • நீங்கள் அழித்த அத்தனை மின்னஞ்சல்களையும் இதேமுறையில் நீங்கள் பார்க்க search box-ல் lable:Trash தட்டச்சிட்டு செய்து பார்க்க முடியும்.
  • இதேபோல் முக்கியமான மின்னஞ்சல்களை நாம் Star குறியீடு செய்து வைத்திருப்போம். இத்தகைய மின்னஞ்சல்களை அனைத்தையும் காண label: starred என சர்ச் பாக்சில் உள்ளிட்டு search கொடுக்கவும். அல்லது என்டர் தட்டுங்கள். இப்போது star செய்யப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் வரிசைப்படுத்தப்பட்டு உங்களுக்கு கிடைக்கும்.
  • அதேபோல Label: Important என்ன தட்டச்சிடும்போது முக்கியமானது என குறியீடு செய்யப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் தொகுக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்கும்.
  • இதே முறையில் label: Chats என கொடுக்கும்போது சமீபத்தில் நீங்கள் சாட் செய்த chating History -யைப் பெற முடியும். அதாவது முந்தின நிமிடம் நாம் செய்த சாட்களனைத்தும் தொகுக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டு கிடைக்கும். இதன் மூலம் நாம் எளிதாக பிறருடன் சாட் செய்த உரையாடல்களைப் பெற முடியும்.
  • அவ்வாறே lable: Sent Mail என சர்ச் பாக்சில் தட்டச்சிடும்போது சமீபத்தில் நாம் அனுப்பிய மின்னஞ்சல்களனைத்தும் நம்முடைய பார்வைக்கு கிடைக்கும்.
  • இவ்வாறே lable: Drafts என கொடுத்து தேடினால் இதற்கு முன்பு நாம் தட்டச்சிட்டு டிராப்டில் வைத்த அனைத்து மின்னஞ்சல்களும் நம்முடைய பார்வைக்கு கிடைக்கும்.
இதே முறையைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய லேபிள்களுக்கும் பயன்படுத்தலாம். உதாரணமாக நீங்கள் Office என்ற லேபிள் உருவாக்கி உங்களுடைய அலுவலக தொடர்பான மின்னஞ்சல்களை அதில் சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சர்ச்பாக்கில் label:Office எனக் கொடுத்து உங்கள் அலுவலக தொடர்பான மின்னஞ்சல்களை மட்டும் பெறமுடியும்.

இறுதிக் குறிப்பு: நீங்கள் உருவாக்கிய லேபிள்கள் அனைத்தும் உங்கள் ஜிமெயில் பக்கத்தின் இடதுபுறம் இருக்கும். (அம்புக்குறியிட்டு காட்டப்பட்டவைகளனைத்தும் நான் என்னுடைய மின்னஞ்சலில் உருவாக்கிய லேபிள்கள்.)


மேலும் பல எண்ணற்ற ஜிமெயில் வசதிகளைப் பற்றி தொடர்ந்து வரும் பல்வேறுபட்ட பதிவுகளினிடையே பகிர முனைகிறேன். நன்றி நண்பர்களே..! 
Related Posts Plugin for WordPress, Blogger...