உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, September 30, 2012

தமிழகத்தில் மின் பற்றாக்குறை: மத்தியஅரசு வஞ்சிக்கிறது

 1/1 
திருச்சி, செப். - 30 - தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவை தொகுதி அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது, காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் கருணாநிதிதான். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி தடுக்கிறார். தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா அல்ல. இது தற்காலிக பின்னடைவுதான். ஆனால் இந்த பின்னடைவை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டும் மத்திய அரசு வழங்கவில்லை. அத்துடன் நமக்கு ஒப்பந்தப்படி உரிமைப்படி வழங்க வேண்டிய 2950 மெகாவாட் மின்சாரத்திலும் ஆயிரத்து 1100 மெகாவாட் மின்சாரத்தை வழங்காமல் குறைத்து விட்டது. மேலும் மாநில அரசின் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து சுமார் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கான திட்டத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திடடத்தில் இருந்து சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுத்து இரு மாநிலங்களுக்குமாவது பகிர்ந்து வழங்குங்கள் என்று கூறினாலும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அந்த அரசை இங்குள்ள தி.மு.க தாங்கி பிடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த மத்திய அரசை இயக்குகிறார் கருணாநிதி. அ.தி.மு.க ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார்கள் என்றார்.

Friday, September 28, 2012

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! வினவில் வந்த பதிவு

நன்றி  வினவு http://www.vinavu.com/2011/12/04/wal-mart/
முன்னுரை:
சில்லறை வர்த்தகத்தில்  தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில்  அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின்  பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
வினவு

Thursday, September 27, 2012

உலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள்

உலகில் நாம் எங்கு சென்றாலும் அவசர உதவிக்கு உங்களுக்கு உடனே நியபகதிர்க்கு வர வேண்டிய எண்கள் !!!!!

எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டு
ம் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது

இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.

இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்


1Like ·  · 

TIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வார ம...

TIRUPPUR NEWS: திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வார ம...: திருப்பூர் :தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை; "பீக் ஹவர்ஸில்' மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்...

Wednesday, September 26, 2012

மின்திருட்டை விட மோசமானது...

மின்திருட்டை விட மோசமான திருட்டு, புரட்டு - உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்தேறி வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக கருதி கொண்டு - அரசியல்வாதிகள் செய்கிற ஒரு ஈனத்தனமான செயலாக உள்ளது - அதிகப்படியான மின்தடை நிலவும் இந்த காலத்தில், வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் அந்த மின் தடையில் இருந்து முழுவதுமாக விலக்களித்து - தடை இல்லா மின்சாரம் வழங்கும் அயோக்கியத்தனமான செயலையே - மின்திருட்டை விட மோசமான திருட்டு என்கிறோம்.

Saturday, September 22, 2012

அக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும் எழுத ஐகோர்ட்டு அனுமதி

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்தி நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசும், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அதன்பின் நடக்கும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டோ, பதிவு மூப்பு அடிப்படையிலோ நியமனம் பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

Wednesday, September 19, 2012

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக நாட்டிய விழா

Monday, September 17, 2012

On Emu farms in Erode and Coimbatore Districts


சிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்டது


வயர்லெஸ் நெட்புக், டேப்ளட் பிசிக்கள் பெருகி வருவதால், சிடி, டிவிடி மற்றும் ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை, அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் மூடிவிட ஜப்பான் சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மார்ச், 2013 முதல் இவை இயங்காது.

இவற்றின் இடத்தில் ஸ்மார்ட் போன், டேப்ளட் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கும் பணியில் சோனி ஈடுபடும். இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் 420 தொழிலாளர்கள், வேறு பிரிவிற்கு மாற்றப்படுவார்கள்.

சோனி ஆப்டியார்க் என்ற தனிப் பிரிவு நிறுவனம் மூலம், சோனி இவற்றை இதுவரை தயாரித்து விற்பனை செய்து வந்தது. அண்மைக் காலங்களில், ட்ரைவ் எதுவும் இல்லாத ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், சிடி, டிவிடி மற்றும் இவற்றிற்கான ட்ரைவ்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வந்தது.

மேலும் சிறிய நிறுவனங்கள் கூட இந்த ட்ரைவ்களைத் தயாரித்து விற்பனை செய்திடலாம் என்ற நிலை வந்ததனால், சோனி இந்த முடிவினை எடுத்துள்ளது.

கர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி?

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம் சுகாதாரத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் மகப்பேறு உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 7 மாத கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறந்த 3 மாதம் வரை இந்த உதவி தொகை பெற முடியும். 
குழந்தை பிறக்கும் முன் முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய், மகப்பேறு காலத்தில் 4 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையில் 4 ஆயிரம் ரூபாய் என உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை எப்படி பெறுவது, யார், யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் மனோகரன் கூறியதாவது; 
அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சார்பு மருத்துவமனைகளில் (நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள்) சிகிச்சை பெறுபவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்படும். 
முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு உதவி திட்டத்தில் உதவி பெற முடியும். 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை பெற்றால், தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி கிடையாது. சிலர், குழந்தை பெற்ற பின்னரே உதவி தொகை கேட்டு விண்ணப்பம் தருகிறார்கள். 
முன்கூட்டியே விண்ணப்பித்தால், கர்ப்பிணிகள் உதவி தொகை பெற்று பயன்பெற முடியும். விண்ணப்பதாரர்கள் எங்கே குழந்தை பிறக்கிறதோ அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளில்விண்ணப்பிக்கலாம். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விட்டால் அங்கேயுள்ள முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு தடையின்றி உதவி தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு மனோகரன் தெரிவித்தார்

Sunday, September 16, 2012

செக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறும் வங்கிகளுக்கு

உங்களின் ஒவ்வொரு ரூபாயும் வங்கிகள் எப்படியாவது ஒரு நாளாவது காலம் கடத்தி கொடுக்க வேண்டும் என நினைக்கிறது. இது தனியார், அரசு, உள்ளூர் வெளி நாட்டு அனைத்து வங்கிகளும் செய்யும் காரணம் அவர்களின் தின நிலுவை வைப்பு தொகை ரிஸர்வ் வங்கியில் வைப்பதின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வட்டியாகும்.

சரி இதனை ரிஸர்வ் வங்கி ஒரு புது சட்டத்தை ஏற்றி உள்ளது. அதாவது செக்ஷன் 18 - பேமென்ட் அன்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் 20
07 சட்டபடி (ஆக்ட் 51 - 2007) இனிமேல் வங்கிகள் குறித்த காலத்தில் உங்களுடைய உள்ளூர் வெளியூர் செக்குகளின் அமவுன்டை உங்கள் அக்கவுன்ட்டில் பற்றூ வைக்க வேண்டும். அது போக அவுட்ஸ்டேஷன் செக்குகளுக்கு டெபாஸிட் செய்யும் போதே உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதில் தாமதம் ஏதும் செய்தால் சேவிங்க்ஸ் பேங்கில் கொடுக்கும் வட்டியை அபராதமாக தர வேண்டும். இதை தர மறுக்கும் வங்கிகளை ரிஸர்வ் பேங்க் அல்லது அந்த வங்கியின் நோடல் ஆஃபிஸருக்கு தெரியபடுத்தினால் அபராதம் வேறு உண்டு.

இன்னொரு முக்கிய செய்தி - ஏடி எம் மில் பணம் எடுக்க நேரமானல் உங்கள் பணத்தை திரும்பவும் முழுங்கும் பழக்கம் இனிமேல் இருக்காது, அதனால் உங்கள் பணம் அப்படியே இருக்கும். இதனால் வயாதனார்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் மற்றூம் ஏடிஎம்மை அதிகம் உபயோகிக்காதவர்கள் பணம் கண்டிப்பாக எடுத்து கொன்டு திரும்புங்கள். ஏன் என்றால் முன்பு அப்படி எடுக்காத பணத்தை உள்ளே தள்ளூம் போது அந்த் பணம் திரும்ப கிடைக்க 15 நாட்கள் வரை ஆகும் உங்களுக்கு லக் இருந்தால் இல்லயென்றால் கிடைக்கவே கிடைக்காது.

இந்த செக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறும் வங்கிகளுக்கு இந்த ஆர்டடரை கையில் கொடுங்கள்.http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/CE1C130812FS.pdf
 

Thanks to Ravi Nag

Tuesday, September 11, 2012

மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...

TANGEDCO NEWS: மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...: திருப்பூர் :"மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்...

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓ
ப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

Saturday, September 08, 2012

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?

உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? 
அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - 

இதோ சிம்பிள் வழிகள்........


உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக இருக்கிறது / இருந்தது ஆனால் 
இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், 
பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்து
 கொள்ளுங்கள் இதொ
 அதன் லிங்க்.........https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do

புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே
உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய
 புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால்
15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.

1. NSDL - : https://tin.tin.nsdl.com/pan/form49A.html

2. UTITSL - : http://www.utitsl.co.in/pan

Application Form - :http://www.utiitsl.com/forms/Forms%2049A.pdf

அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய
புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.

https://tin.tin.nsdl.com/pan/changemode.html

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do

அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/pan/InstructionsCorr.html#instruct_corr

Friday, September 07, 2012

பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமன்றம

பணியில் இருக்கும் மகன் உயிரிழக்க நேர்ந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்றுசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில்
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளராகப் பணியாற்றியவர் ரவிகுமார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந் நிலையில் அவர் கடந்த 2006-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறப்புக்குப் பின் வழங்க வேண்டிய பணப் பலன்கள் முழுவதையும் அவரது தாயார் மாரியம்மாளிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது.எனினும் குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்து விட்டது. தொழிலாளி ஒருவரின்மனைவியோ அல்லது அவரது மகன், மகள் மட்டுமே ஓய்வூதியம் பெறலாம். விதிகளின்படி தாயாருக்கு ஓய்வூதியம் வழங்க இயலாது என்று துறைமுகநிர்வாகம் கூறி விட்டது.இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மாரியம்மாள் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டி. ஹரி பரந்தாமன், திருமணமாகாத மகன் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்று தீர்ப்பளித்தார். குடும்ப ஓய்வூதியப் பலன்களை பெறும் உரிமை பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வழக்கைப் பொருத்தவரை, தனது மகனின் மாத ஊதியத்தை மட்டுமே சார்ந்து மனுதாரர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென மகன் உயிரிழக்க நேரிட்டதால் இனி குடும்ப ஓய்வூதியம் மட்டுமே அவரது ஒரே வாழ்வாதாரம் ஆகும். மேலும், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி, வயதான பெற்றோரை பத்திரமாகப் பராமரிக்க வேண்டிய கடமை அவர்களின் பிள்ளைகளுக்கு உள்ளது.இந்த வழக்கில் தனது தாயாரைப் பராமரித்து வந்த துறைமுகத் தொழிலாளியான மகன் உயிரிழந்து விட்டதால்,தாயாருக்கு துறைமுக நிர்வாகம் குடும்ப ஓய்வூதியம் வழங்கியாக வேண்டும். இதுவரை வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியப் பாக்கியை இன்னும் 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு துறைமுகப் பொறுப்புக் கழகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளர்

Wednesday, September 05, 2012

பிறப்பு சான்றிதழ் Online பெற

Online Birth and Death Certificate...

Good News to get Birth / Death Certificates in ONLINE (PDF Copy) and CORRECTIONS also Possible without spending your time and money. 

NRI can benefit more by this service.


இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

EB BILL NEW TF IA

Monday, September 03, 2012

Microsoft Word-யில் Text-ஐ Table-ஆக மாற்றுவது எப்படி ?

சில நேரங்களில் இது நமக்கு தேவைப்படும், உதாரணமாக நாம் PDF கோப்புவிலிருந்துWord கோப்புக்கு மாற்றும் பொழுது, table-கள் சில நேரம் table-ஆக வராமல் text-ஆக வரும், ஆனால் நமக்கோ அது table-ஆக இருந்தால் நலம் என்று தோன்றும், அப்படிப்பட்ட நேரங்களில் இந்த டெக்னிக் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Sunday, September 02, 2012

செப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என தகவல்?
தமிழகத்தில் அதிமுக அரசின் போக்குவரத்துக் கழக விரோத   செயல்பாட்டிணை கண்டித்து வரும் 25.09.2012 அன்று அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் அன்று தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ள புதிய மின்இணைப்பு கட்டணத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின்கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரி யம் சமீபத்தில் கடுமையாக உயர்த்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள் ளது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பி உள்ளது. இந்த பரிந்துரை மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதன்பின், புதிய கட்ட ணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த புதிய கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தின் இணையதளம் மற்றும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை வரை கருத்து தெரிவிக்க கடைசி நாளாகும். இதுகுறித்து ஆணையத்தின் உயரதிகாரிகள் கூறுகையில், ''இதுவரையில் 20க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளது. 

பெரும்பாலானோர் புதிய மின்இணைப்பு கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த கட்டணம் உயர்வு தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளனர். சிலர், வாரியம் பரிந்துரை செய்துள்ள புதிய கட்டணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடாது, சில பிரிவுகளில் மாற்றியமைக்க வேண்டும். மின் உற்பத்தியில் தன்னிறைவை பெற தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்களிடம் நேரிடையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.

TNPL விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5

தமிழ்நாடு செய்திதாள் நிறுவனமான TNPL தனது ஆட்கள் தேவைக்காக பொறியியல்
 மற்றும் இதர துறை சார்ந்த ஆட்களை வேலைக்காக எதிர்பார்க்கிறது ... விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் செப்டம்பர் 05
 செப்டம்பர் 5

மேலும் விவரங்களுக்கு click here

தபால் துறையில் 621 காலி பணியிடங்கள்


தமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு
மூலம் விண்ணப்பிக்க

 கடைசி நாள் அக்டோபர் 01 - 2012

12 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும்
தெரிந்திருக்க வேண்டும்...


மேலும் விவரங்களை காண ...

தபால் துறையில் 621 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Postal Assistant/ Sorting Assistant/ Postal Assistant (Returned Letter Office/ Postal Assistant (Mail Motor Service)/
Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)
விண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின்
 SPEED POST/REGISTERED POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012

தட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிளர்க் பணி

மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ்  இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர்: LDC (11இடங்கள்)

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் Lower Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடங்களுக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது: 2012 செப்டம்பர் மாதம் 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினர் ரூ.100, Secretary Tobacco Board. Guntur என்ற பெயரில் டிடியாக எடுக்க வேண்டும். (எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது).

விண்ணப்பிப்பவர்கள் ஏ4 அளவுத்தாளில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி விண்ணப்பித்து முழு விவரம் அடங்கிய சுயவிவரம், இத்துடன் நிரந்திர முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு எண் போன்றவை இணைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் அஞ்சல் உறையின் மீது Lower Division Clerk என்று குறிப்பிட வேண்டும்.

செப்டம்பர் 21ம் தேதிக்குள் Secretary, Tobacco Board, Post Box No.322, Srinibasarao Thota, G.T Toad. Guntur - 522 004, AP என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...