உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, September 17, 2012

கர்ப்பிணிகள் ரூ12 ஆயிரம் பெறுவது எப்படி?

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம் சுகாதாரத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் மகப்பேறு உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 7 மாத கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறந்த 3 மாதம் வரை இந்த உதவி தொகை பெற முடியும். 
குழந்தை பிறக்கும் முன் முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய், மகப்பேறு காலத்தில் 4 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையில் 4 ஆயிரம் ரூபாய் என உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை எப்படி பெறுவது, யார், யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் மனோகரன் கூறியதாவது; 
அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சார்பு மருத்துவமனைகளில் (நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள்) சிகிச்சை பெறுபவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்படும். 
முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு உதவி திட்டத்தில் உதவி பெற முடியும். 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை பெற்றால், தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி கிடையாது. சிலர், குழந்தை பெற்ற பின்னரே உதவி தொகை கேட்டு விண்ணப்பம் தருகிறார்கள். 
முன்கூட்டியே விண்ணப்பித்தால், கர்ப்பிணிகள் உதவி தொகை பெற்று பயன்பெற முடியும். விண்ணப்பதாரர்கள் எங்கே குழந்தை பிறக்கிறதோ அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளில்விண்ணப்பிக்கலாம். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விட்டால் அங்கேயுள்ள முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு தடையின்றி உதவி தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு மனோகரன் தெரிவித்தார்
Related Posts Plugin for WordPress, Blogger...