உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, September 02, 2012

செப்டம்பர் 25: தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என தகவல்?




தமிழகத்தில் அதிமுக அரசின் போக்குவரத்துக் கழக விரோத   செயல்பாட்டிணை கண்டித்து வரும் 25.09.2012 அன்று அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் அன்று தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து மைய சங்கங்களின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (01.09.2012) நடைபெற்றது. தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

அப்போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எதிராக அரசும், நிர்வாகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பது, பென்சன் பிரச்சனை, கடுமையான வேலை பளு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10, 11, 12, 13, 20, 21 ஆகிய தேதிகளில் போக்குவரத்துக் கழக 7 கோட்டை தலைமை அலுவலங்கள் முன்பு வேலைநிறுத்த விளக்க கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் 25ஆம் தேதி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அன்று தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓடாது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...