உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, September 16, 2012

செக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறும் வங்கிகளுக்கு

உங்களின் ஒவ்வொரு ரூபாயும் வங்கிகள் எப்படியாவது ஒரு நாளாவது காலம் கடத்தி கொடுக்க வேண்டும் என நினைக்கிறது. இது தனியார், அரசு, உள்ளூர் வெளி நாட்டு அனைத்து வங்கிகளும் செய்யும் காரணம் அவர்களின் தின நிலுவை வைப்பு தொகை ரிஸர்வ் வங்கியில் வைப்பதின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வட்டியாகும்.

சரி இதனை ரிஸர்வ் வங்கி ஒரு புது சட்டத்தை ஏற்றி உள்ளது. அதாவது செக்ஷன் 18 - பேமென்ட் அன்ட் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் 20
07 சட்டபடி (ஆக்ட் 51 - 2007) இனிமேல் வங்கிகள் குறித்த காலத்தில் உங்களுடைய உள்ளூர் வெளியூர் செக்குகளின் அமவுன்டை உங்கள் அக்கவுன்ட்டில் பற்றூ வைக்க வேண்டும். அது போக அவுட்ஸ்டேஷன் செக்குகளுக்கு டெபாஸிட் செய்யும் போதே உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதில் தாமதம் ஏதும் செய்தால் சேவிங்க்ஸ் பேங்கில் கொடுக்கும் வட்டியை அபராதமாக தர வேண்டும். இதை தர மறுக்கும் வங்கிகளை ரிஸர்வ் பேங்க் அல்லது அந்த வங்கியின் நோடல் ஆஃபிஸருக்கு தெரியபடுத்தினால் அபராதம் வேறு உண்டு.

இன்னொரு முக்கிய செய்தி - ஏடி எம் மில் பணம் எடுக்க நேரமானல் உங்கள் பணத்தை திரும்பவும் முழுங்கும் பழக்கம் இனிமேல் இருக்காது, அதனால் உங்கள் பணம் அப்படியே இருக்கும். இதனால் வயாதனார்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் மற்றூம் ஏடிஎம்மை அதிகம் உபயோகிக்காதவர்கள் பணம் கண்டிப்பாக எடுத்து கொன்டு திரும்புங்கள். ஏன் என்றால் முன்பு அப்படி எடுக்காத பணத்தை உள்ளே தள்ளூம் போது அந்த் பணம் திரும்ப கிடைக்க 15 நாட்கள் வரை ஆகும் உங்களுக்கு லக் இருந்தால் இல்லயென்றால் கிடைக்கவே கிடைக்காது.

இந்த செக் கிளியரிங் விஷயத்தை எனக்கு தெரியாது என்று கூறும் வங்கிகளுக்கு இந்த ஆர்டடரை கையில் கொடுங்கள்.http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/CE1C130812FS.pdf
 

Thanks to Ravi Nag
Related Posts Plugin for WordPress, Blogger...