உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, September 02, 2012

கருத்து கேட்பு பணி முடிந்தது புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ள புதிய மின்இணைப்பு கட்டணத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின்கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரி யம் சமீபத்தில் கடுமையாக உயர்த்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள் ளது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பி உள்ளது. இந்த பரிந்துரை மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதன்பின், புதிய கட்ட ணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த புதிய கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தின் இணையதளம் மற்றும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை வரை கருத்து தெரிவிக்க கடைசி நாளாகும். இதுகுறித்து ஆணையத்தின் உயரதிகாரிகள் கூறுகையில், ''இதுவரையில் 20க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளது. 

பெரும்பாலானோர் புதிய மின்இணைப்பு கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இந்த கட்டணம் உயர்வு தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளனர். சிலர், வாரியம் பரிந்துரை செய்துள்ள புதிய கட்டணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடாது, சில பிரிவுகளில் மாற்றியமைக்க வேண்டும். மின் உற்பத்தியில் தன்னிறைவை பெற தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்களிடம் நேரிடையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...