உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, October 31, 2012

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.

அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2011-12ஆம் கல்வியாண்டில் 7-ம் வகுப்பு பயின்று முழுஆண்டுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

Monday, October 29, 2012

எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?

மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! - அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்


சென்னை: பொதுவெளியில் சாதித் துவேஷ கருத்துக்களைப் பரப்பிய பாடகி சின்மயி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு.
சின்மயி தனது ப்ளாக், ட்விட்டர் போன்றவற்றில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு குறித்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பெரும்பான்மையோர் சின்மயிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
ambedkar pasarai complaints against chinmayi

எழுத்தாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது கட்டுரையொன்றில், "நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை அமைப்பைச் சார்ந்த நீலமேகம், வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் சென்னை மாநகர கமிஷனரிடம் சின்மயி மீது தலித்துக்கள், மீனவர்கள், இஸ்லாமியர்களை இழிவாகப் பேசியதற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய செய்யக் கோரி மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சின்மயி விவகாரம் வேறு கோணத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சின்மயி கைதாவாரா? அல்லது பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் சைடு வாங்கியதைப் போல இதிலும் நடந்து கொள்ளுமா போலீஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது.

"சூரிய மின்சாரம் சரியான தீர்வா" - நற்றமிழன்.ப கீற்று இணையத்தின் பதிவு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21803%3A2012-10-29-06-23-22&catid=1%3Aarticles&Itemid=264&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
'மின்வெட்டுக்கு தீர்வாகுமா சூரிய ஒளி மின்சாரம்' என்ற தலைப்பில் சென்ற‌ வார (24.10.2012) ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதன் இறுதி பத்தி பின்வருமாறு உள்ளது.
"சூரிய மின்சாரம் சரியான தீர்வா"
சூரிய சக்தி மின்சாரம்தான் இருப்பதிலேயே சாத்தியமானது என்று பலரும் கை காட்டினாலும், சூரிய மின்சாரத்தை மட்டுமே முழுமையான தீர்வாகக் கருதிவிட முடியாது. உதாரணமாக, இதை ஒரு தனி நபர் அமைக்க குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் பணமும், சொந்த வீடு இட வசதியும் வேண்டும். மூன்று வேளை உணவுக்கே வழியற்ற ஏழை மக்கள் இவ்வளவு பணத்துக்கும், இடத்துக்கும் எங்கே செல்வார்கள்? ஆகையால் நடுத்தர வர்க்க மக்களுக்கும், உயர் வர்க்க மக்களுக்கும் இது ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

Photo: மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது. 
600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. 
இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும். 
ஆனால் உண்மை நிலை இதுதானா?
இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.  
வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது. 
2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது. 
101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?
இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.
வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?
தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 
ஏன் இந்த அவலம்? 
மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது. 
ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும். 
இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது. 
ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது. 
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?
இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம். 
மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.
ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Dong Fang Electricals நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.
அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 
வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.
ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை. 
அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:
 • பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும். 
 • குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
 • ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.
 • குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை.                                சா.காந்தி, 
19 அக்டோபர் 2012         தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111எல்லாம் சிவா மாயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே!
நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல  படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி யாரும் தப்பா நினைக்காதீங்க நண்பர்களே ஏன்னா கருத்து சொல்ல பயமாய் இருக்கு அதான் 
அந்த பதிவ அப்படியே கீழ படியுங்கள் அவர் சொல்வது முழுக்க உண்மை 
------------------------------------------------------------------------------------------------
மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்த

க் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

Wednesday, October 24, 2012

மின்சாரம் கேட்டு ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கேட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரம் வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், தமிழகத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதிலும், பல்வேறு சிக்கல்கள் காரணமாக தமிழகத்துக்கு வெறும் 78 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிட்டுகிறது.

தமிழக அரசு பஸ்களில் கூரியர் சேவை! 40%-50% கட்டணம் குறைவு!! viruvirupu.com NEWS

கூரியர் கவர்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்படுமா?
தமிழக அரசு பஸ்களில், தனியார் மூலம் கூரியர் சேவை தொடங்கவுள்ளது. தமிழக விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகருக்கு அனுப்படும் கவர்களுக்கு, டிரைவர், கண்டக்டர்களே குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றனர். அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பூக்கள் உள்ளிட்ட, பார்சலுக்கும் லக்கேஜ் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக அரசு பஸ்களில், கூரியர் தபால் அனுப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமை, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரு.சகாயம், இ.ஆ.ப. அவர்கள்... [Mr.Sahayam, IAS]அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயி
ரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் என்ன தகராறு

ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் என்ன தகராறு என்பதை பலரும் பலவாறாய் திரித்து வருகின்றனர்..டுவிட்டரில் பல ஆண்டுகளாய் இருந்து பார்த்ததால் நானறிந்ததை தெரிவிக்க வேண்டியது கடமையாகிறது..

பொதிகை செல்வன்

http://www.twitlonger.com/show/jobjp7

Tuesday, October 23, 2012

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை

mettur_power_plant
தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும் கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணையதளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.
மேட்டூர் மின்நிலையம்
600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மேட்டுர் அனல்மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின்நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிறபாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

Saturday, October 20, 2012

பவர்கட் பிரச்னையா...சோலாருக்கு மாறுங்க !


'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால், அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.

மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த  விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.

சில்லறை வர்த்தக அந்நிய முதலீடும்; சில்லரைத்தனமான விளக்கங்களும்


மத்திய அய்.மு.கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை விசு வாசத்துடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. வெள்ளியன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவை எடுத்த முடிவுகளைக் கண்டு பாரக் ஒபாமா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். இனி அவர் மிக தைரிய மாக இரண்டாம் முறையாக அதிபர் ஆவதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வார்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனங் களும் மன்மோகன்சிங் அரசின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. படுபாதாளத்தில் இருக்கும் அமெரிக்க பொருளா தாரத்தை தூக்கிநிறுத்த படாதபாடு பட்டு வரும் ஒபாமா சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு செயல்படும் விதம் போது மானதாக இல்லை.

நமக்கு நாமே மின்சாரம் வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய்

Sunday, October 14, 2012

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே
 THANKS TO 'தலைவர்கள் - முன்னோடிகள்'

தியாகச்சுடர் காமராசர்

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

Friday, October 12, 2012

மின் வெட்டு ஏன்..? தீர்வு தான் என்ன..?

1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா?

தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2. யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்?
* பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்)
* ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்)
* மதுரை பவர் (106 மெகாவாட்)
* சாமல்பட்டி (105.6 மெகாவாட்)
மொத்தம் 737.6 மெகாவாட்.

மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ?

மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ? 

ஓய்வு பெற்ற மின் பொறியாளர் திரு சா . காந்தி அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மின் வெட்டுக்கான காரணத்தை மற்றும் தீர்வு திட்டத்தை பற்றி விளக்குகிறார் . கேள
்வி பதிலாக தொகுக்கப் பட்டுள்ளது.


1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? 

Thursday, October 11, 2012

இன்று தமிழகம் மின்வெட்டில் மூழ்கி கிடக்கிறது. எதனால்?


மரணப் படுக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம்,இருளில் தமிழகம்

இன்று தமிழகம் மின்வெட்டில் மூழ்கி கிடக்கிறது. எதனால் இந்த மின்வெட்டு என்ற காரணம் தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்களின் தவறாலும்,கவனக்குறைவாலும் இன்று மின்வாரியம் மிகப்பெரிய நட்டத்தில் உள்ளது. இவர்களின் தவறை மறைக்க அணு உலைகளை திறந்தாள் மின்சாரம் என்ற பொய் பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.

மின் உற்பத்தியும் தேவை
யும் :
இன்றளவில் இந்தியாவின் மின் உற்பத்தி 1,24,311 MW .இன்னும்1,00,000 தேவை என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அனல் மின்சாரம்-66 %,புனல்(நீர்)-26 %,அணு மின்சாரம் 2 .7 %(3300 mw ),மறுசுழற்சி சக்தி 4 .97 %(6158 mw). மின் கடத்தலில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணாமாக 40 % மின் இழப்பு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய மின் உற்பத்தி 8000 mw இன்னும் 3000முதல் 4000mw மின்சார தேவை .மொத்தம் 11,000mwமுதல்12,000mw வரை மின்சாரம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது.

Friday, October 05, 2012

வழக்கின் முதல் வெற்றி..

வழக்கின் முதல் வெற்றி..:


 வழக்கின் முதல் வெற்றி..

 வெளிச்சம்
அமைப்பு கடந்த சிலவாரங்களுக்கு முன்
சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல்
தலை
முறை மாணவர்களின் உயர்கல்விக்காகவும்,
தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனும்
தமிழக அரசின் ஆணை எண் 6யை வலியுறுத்தியும், மேற்கண்ட இரண்டு பொதுநல வழக்குகளை
தொடுத்துள்ளதையும்,

இந்த
வழக்கில் எங்கள் அமைப்பின் தலைவர் திருமதி வெளிச்சம் செரின் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடியதையும்,..

எமது
வாதத்தை கேட்டுக்கொண்ட  தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் ஆகியோர் மனுக்கள் மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்
செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதையும்,  ,  இந்த
பதிவின் மூலம் தெரிவித்து இருந்தோம்… படிக்க கட்டுரை: ஏழைகளின்
உயர்கல்விக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடும் வெளிச்சம் செரின்.


இந்த
வழக்கில் தற்போது தமிழக ஆதிதிராவிட நலத்துறை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 24.08.2012
அன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் தங்கள்
கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மாணவர்களிடமிருந்து
வசூலிக்ககூடாது எனவும், அரசாணை எண் 6 மற்றும் இந்த சுற்றறிக்கைகளை மாணவர்களின் பார்வையில்
படும்படி அறிவிப்பு பழலகையில் வைக்கும்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால்
எந்த கல்லூரியும் இந்த ஆணையை மாணவர்களுக்கு தெரியும் படி வெளியிடவில்லை. அதனால் தங்களுக்கு
எமது வெற்றியை தெரிவித்துக்கொள்ளும் இதே நேரத்தில்..

உங்களுக்கு
தெரிந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களிடம்
சொல்லி
இந்த ஆணையை கல்லூரிகளிடம் கொடுத்து கட்டண விலக்கு கோரும்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்லி
அவர்களின் கல்விக்கு உதவுங்கள்…இன்னும்
வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.. அதிரடிகள் தொடரும்..

இந்த
வழக்கிழும்,முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கிழும் உங்கள் ஆதரவோடு, ஏழைகளின்
உயர்கல்விக்காக தொடர்ந்து போராடுகிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம்
மாணவர்கள்

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 ):


கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது


உங்கள் கண்களுக்குக் கொஞ்சம் விளையாட்டு காட்டுவோமா? • கீழ்காணும் படத்தில் தெரியும் பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பு புள்ளியை தொடர்ந்து 30 - 40 வினாடிகள் உற்று நோக்குங்கள்.
 • கண்களை வேகமாக வெற்றிடம் நோக்கித் திருப்புங்கள் (சுவர் / வெள்ளைத் தாள் / புது தத்தல்)
 • கண்களை வேகமாக இமையுங்கள்.
 


Wednesday, October 03, 2012

கல்விக் கடனும் தேசியமய வங்கிகளின் பித்தலாட்டமும் ( புதியதலைமுறையில் நான் படித்தது )

நன்றி பகலாநிதி http://puthiyathalaimurai.tv/new/?p=33736
ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதும், பிறகு உள்துறை அமைச்சராக ஆன பிறகும் தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் தவறாமல் கல்விக் கடன் பற்றிப் பேசியதைக் கேட்டிருப்போம்…
சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “மாணவர்களின் கல்விக் கடனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை 14 ஆயிரத்து 84 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது”(22.02.2009).

பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை

மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.இந்த வகையில், 20 ரூபாய்க்கும் கீழாக, "டாப்-அப்' செய்யும் பயனீட்டாளர்கள் பயன் அடைவர். தற்போது, 20 ரூபாய்க்கு மேல் வாங்கும், "டாப்- அப்' கூப்பன்களுக்கு நிர்வாகக் கட்டணமாக, மூன்று ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. "டிராய்' உத்தரவையடுத்து, 20 ரூபாய்க்கு, "டாப்-அப்' கார்டு வாங்கினால், இனிமேல் இரண்டு ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...