உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, October 05, 2012

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 ):


கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது


உங்கள் கண்களுக்குக் கொஞ்சம் விளையாட்டு காட்டுவோமா?  • கீழ்காணும் படத்தில் தெரியும் பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பு புள்ளியை தொடர்ந்து 30 - 40 வினாடிகள் உற்று நோக்குங்கள்.
  • கண்களை வேகமாக வெற்றிடம் நோக்கித் திருப்புங்கள் (சுவர் / வெள்ளைத் தாள் / புது தத்தல்)
  • கண்களை வேகமாக இமையுங்கள்.
 

இப்ப என்ன தெரிகிறது?அந்தப் பெண் உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா?சரி, இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?நீங்கள் கண்ட தோற்ற மயக்கம் ஒரு ஒளியியற்கண்மாயம் (Optical Illusion)  ஆகும்.  இதற்கு 'எதிர்மறை பின் தோற்றம்' (Negative After Image) என்று பெயர்.கண்களில் உள்ள ஒளி உணர்விகளின் (Photoreceptors) துணைக் கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன (இவற்றைப் பற்றி பிறிதொரு நாள் பேசுவோம்.) 
மேற்கண்ட படத்தைப் பார்த்த போது என்ன செய்தோம்? தொடர்ந்து ஒரே நிறத்தின் மீது கவனம் செலுத்தினோம் !!


ஒரே நிறத்தை  (அலை நீளத்தை) அதிக நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தால், கூடுதல் வெளிப்பாடு (Exposure) காரணமாக, குறிப்பிட்ட ஒளி உணர்விகள் சிறிது நேரம் தங்கள் உணர்திறனை (Sensitivity) இழந்து விடும். 
உடனடியாக வெற்றிடத்தைப் பார்க்கும் போது, தங்கள் செயல் திறனை (தற்காலிகமாக) இழந்த உணர்விகள் மிகவும் மங்கி செயல்படுகிறன. பிற உணர்விகள் வழக்கம் போல செயல்படுகிறன.
 பிற உணர்விகளின் உணர்திறன் அதிகமாகத் தெரிவதால், மூளை அவற்றைக் கொண்ட உருவத்தை நமக்குக் காட்டுகிறது. நாம் முன்பு பார்த்த படம் நேர்மாறான நிறங்களுடன் (inverted Colours) நமக்குத் தெரிகிறது.


தெரிந்த படம் இது தானே?இன்னொரு விளையாட்டு:
இந்த கருப்பு பல்பை 20 - 30 வினாடிகள் உற்றுப் பாருங்க.. அப்புறமா, சுவற்றைப் பாருங்க!


என்ன? சுவற்றில் பல்பு எரியுதா?கொசுறு:

என்ன ஆனாலும், நம்ம மூளை ரொம்ப கில்லாடி.. 'ஏதோ பிரச்சனை' என்று சில நுண்நொடிகளில் (Micro Second) கண்டறிந்து, சரி செய்து விடுகிறது... (இல்லையெனில், ஆயுள் முழுக்க அந்த செல் (Cell) அவுட் ஆக வேண்டியது!! )நன்றி: விக்கிபீடியா, யாஹூ கேம்ஸ், Worqx, Omnivision, Patrick ,ஹாரி 2G, ப்ளாக்கர் நண்பன்பதிவு எழுத கருவைத் தேற்றிக் கொடுத்த ஹாரிபாட்டர் அவர்களுக்கும்,  ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!!
நம்ம கண்களுக்கு முதன்முதலில் சவால் விட்டு கண்கட்டு வித்தை காட்டியவர் மந்திரவாதி தான்!! இது போன்ற படங்களை நீங்களும் உருவாக்க வழி சொல்கிறார் நம்ம நண்பன்!!  (

செயல் முறை விளக்கமும் உண்டு!)
டிஸ்கி:சிலருக்கு இந்த வித்தை சரிவர வேலை செய்யாமல் போகலாம். அவர்களுக்காக: http://youtu.be/Pt3wGMcTG2Eகண்ணா... இது வெறும் டிரைலர் தான்..மெயின் பிச்சர் நீ இன்னும் பாக்கல... அது இனி தான்!!அவிழ்மடல்

THANKS TO http://www.aalunga.in/2012/09/illusion-girl-photo.html

Related Posts Plugin for WordPress, Blogger...