உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, October 11, 2012

இன்று தமிழகம் மின்வெட்டில் மூழ்கி கிடக்கிறது. எதனால்?


மரணப் படுக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம்,இருளில் தமிழகம்

இன்று தமிழகம் மின்வெட்டில் மூழ்கி கிடக்கிறது. எதனால் இந்த மின்வெட்டு என்ற காரணம் தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்களின் தவறாலும்,கவனக்குறைவாலும் இன்று மின்வாரியம் மிகப்பெரிய நட்டத்தில் உள்ளது. இவர்களின் தவறை மறைக்க அணு உலைகளை திறந்தாள் மின்சாரம் என்ற பொய் பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.

மின் உற்பத்தியும் தேவை
யும் :
இன்றளவில் இந்தியாவின் மின் உற்பத்தி 1,24,311 MW .இன்னும்1,00,000 தேவை என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அனல் மின்சாரம்-66 %,புனல்(நீர்)-26 %,அணு மின்சாரம் 2 .7 %(3300 mw ),மறுசுழற்சி சக்தி 4 .97 %(6158 mw). மின் கடத்தலில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணாமாக 40 % மின் இழப்பு ஏற்படுகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய மின் உற்பத்தி 8000 mw இன்னும் 3000முதல் 4000mw மின்சார தேவை .மொத்தம் 11,000mwமுதல்12,000mw வரை மின்சாரம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது.


தமிழ்நாட்டில் கடந்த கால மின் பற்றாக்குறை :
1970க்கு முன்பு மின்சாரம் ஒரு அறிதான பொருளாகவே இருந்து வந்தது.1970-1971இல் மின்சாரம் அனைத்து மக்களையும் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.அன்றைய மின் உற்பத்தி1965mw மட்டுமே.இது மின்வெட்டை ஏற்படுத்தியது.பின்பு 1982-1983 ஆண்டில் மின்வெட்டு அதிகமானது.இதன் உச்சக்கட்டம் oct1982இல் மூன்று நாட்களுக்கு 100% மின் வெட்டு ஏற்பட்டது. பின்பு மின்வாரியத்தின் முயற்சியால் 1983இல் ஏழு முறை மின்வெட்டு குறைக்கப்பட்டது.எண்ணூரில் செக்கொசுலோவியா உதவியுடன் தொடங்கப்பட்ட 450mw திறனுள்ள மின் நிலையம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த மின் நிலையம் "நோய்வாய்ப்பட்ட யானை" என்று அன்றைய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனால் அழைக்கப்பட்டது .இதுவும் அன்றைய மின் வெட்டுக்கு காரணமாக அமைந்தது.

மின்வாரியத்தின் விடா முயற்சி:
1983-1990ஆண்டுகள் தமிழ்நாடு மின்வாரியத்தின் பொற்காலம் என்றே அழைக்கலாம்.இந்த இடைப்பட்ட காலங்களில் தனது தீவிர முயற்சியால் அதிகப்படியான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் உற்பத்தி செய்தது.1990இல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையற்ற நிலை உருவானது.1992இல் முழு மின்சார தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது.பின்பு 1998இல் குறைவான மின் பற்றாக்குறை ஏற்பட்டது(மூன்று மாதங்கள் மட்டும் ). பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2008இல் மின் வெட்டு ஏற்பட்டது.அது இன்று40 % மின் வெட்டில் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளது.

1991 தாராளமயமாதல்:
இன்று தமிழகம் இருளில் மூழ்கி இருப்பதற்கு காரணம் 1991இல் காங்கிரஸ் அரசு தாராளமயமாதல் கொள்கை ஏற்படுத்தியதுதான் .இதற்கு பின் தமிழ்நாடு மின்வாரிய மூலதனங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது . இந்த 1991 தாராளமயமாதல் மின்சார உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிட்டது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் சுயமாக மின் உற்பத்தி செய்வதை மத்திய அரசு தடை செய்தது.நடுவண் அரசின் அழுத்தத்தின் காரணத்தால் பல மின் உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டது.இதன் மூலம் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் மின் உற்பத்திக்கான அனுமதியை வழங்கியது.இது தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு வழிவகுத்தது. அத்துடன் ஒப்பந்தங்களின் படி உற்பத்தி செய்யவேண்டிய மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் செய்யாமல் ஏமாற்றியது.தனியாருக்கு மின்சார துறையை திறந்துவிட்டதற்கு நடுவண் அரசு சொன்ன காரணம் குறைந்த விலையில் சந்தையில் மின்சாரம் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் மாநில மின்வாரியங்களிடம் போதிய நிதி இல்லை. ஆனால் நடுவண் அரசின் காரணங்களுக்கு மாறாக இன்று நமது தமிழ்நாடு மின்சார வாரியம் 4முதல் 14ரூபாய்க்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகிறது. சுயமாக யூனிட் ஒன்றிற்கு 1முதல் 2ரூபாய்க்கு மின் உற்பத்தி செய்து வந்த மின்வாரியம் இந்த தவறான கொள்கையால் ஒரு யூனிட் 14 ரூபாய் வரை தனியாரிடம் வாங்கும் நிலை உருவானது. தமிழ்நாடு மின் வாரியத்தால் வாங்க இயலாத அளவிற்கு அதிக விலை தனியாரால் நிர்ணயிக்கப்பட்டது . அதுமட்டுமல்லாமல் 1992-97 எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மின் உற்பத்திக்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த தாராளமயமாதல் கொள்கையை மின் உற்பத்தியில் முதலில் அமல் படுத்தியது ஒரிசா மாநிலம். அது உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பணிகளை தொடங்கியது.இறுதியில் 2000 கோடி நட்டத்துடன் தோல்வியில் முடிந்தது.ஒரிசா மக்கள் வரிப்பணத்தில் உலக வங்கி பாடம் கற்றுக்கொண்டது. இதை உலக வங்கியின் தலைவராக இருந்த wolfensohn தெரிவித்தார்.

1991 சந்தை பொருளாதாரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அனுமதித்ததும்,வீட்டு மின்சாதன பொருட்களை அறிமுகபடுத்தியது ,வாகன தொழிற்சாலைகளை அனுமதித்ததும் மின் தேவைகளை அதிகப்படுத்தியது.


கிடப்பில் போடப்பட்ட மின் திட்டங்கள் :
1991 தாராளமயமாதல் கொள்கையால் மின்வாரியம் சுய மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டு தனியாரை எதிர்பார்த்திருக்கும் நிலை உருவானது. புதிய மின் நிலையங்கள் தொடங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியம் 2007 ஆண்டு 16000 கோடி ரூபாயை rural electric corporation என்ற நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியது. ஆனால் அந்த நிதியை புதிய மின் நிலையங்கள் தொடங்க பயன்படுத்தாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது. எனவே கீழ்க்கண்ட மின் உற்பத்தி திட்டங்கள் நிலுவையில் உள்ளது .

வட சென்னை 2வது திட்டம்-2*600mw(aug2010உற்பத்தி தொடங்கியிருக்கவேண்டும்)
மேட்டூர் வது 2திட்டம் -1*600mw(2011 உற்பத்தி தொடங்கியிருக்கவேண்டும் )
தூத்துக்குடி 3வது திட்டம் -1*600mw
மொத்தம் 2400mw
இதுமட்டுமல்லாமல் வள்ளூர் 2*500mw (2011 உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது )
1*500mw(2010உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது )
இவற்றில் எதுவுமே இதுவரை மின் உற்பத்தி செய்வில்லை.


தனியார் பிடியில் தமிழ்நாடு மின்சார வாரியம் :
1996 இல் ஆறு தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது .தமிழ்நாட்டில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள்
1.G.M.R.VASAVI POWER CORPORATION
31/12/1998-15/2/1999 காலகட்டத்தில் 196MW(4*49) தொடங்கியது. இது SOUTH KORIA HUNDAI நிறுவனத்திடமிருந்து பழைய கருவிகளை வாங்கி மின் உற்பத்தி செய்வதாக புகார் எழுப்பட்டது.

2.சாம்பல் பட்டி பவர் CORP.
11/1/2001 இல் 105.66MW தர்மபுரியில்

3.P.P.N POWER CORPORATION(பிள்ளை பெருமாள் நல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் )
இது சென்னை APPOLO HOSPITAL நிறுவனத்திற்கு சொந்தமானது.
330.5MW-26/4/2001 இல் துவக்கம்.

4.MADURAI POWER CORPORATION.
இது சென்னை SATHIYAM CINEMAS நிருவனதிற்கு சொந்தமானது.
இது தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான் நிலத்தில் உள்ளது.
106MW-22/9/2001 இல் துவங்கியது.

5.STCMS (NEIVELI ZERO UNIT )
250MW-16/12/2002. நெய்வேலியில் உள்ள நிலக்கரியை எடுக்க தமிழ்நாடு மின்வாரியதிற்கே அனுமதியளிக்காத நடுவண் அரசு இந்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த நடுவண் அரசு செயபடுவது வெளிப்படையாக தெரிகிறது.

6.வீடியோகான் நிறுவனம்.
இந்த நிறுவனம் 2000ஆம் ஆண்டு வரை எந்த பணியையும் தொடங்காமல் இருந்தது.எனவே மின் வாரியம் இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அனால் இந்து ஒப்பந்த ரத்து மூலம் தனக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்தது.அந்த வழக்கிலும் அந்நிறுவனம் வெற்றியடைந்து 150 கோடி ரூபாய் பெற்றது.இந்த பொய் வழக்கிற்காக வீடியோகான் ஆதரவாக வழக்காடி150 கோடி மக்கள் பணத்தை தமிழ்நாடு மின்வாரியத்திடமிருந்து பறித்து கொடுத்தது ப.சிதம்பரம்.

2007-2008 இல் தொடங்கப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்.
7.Aban POWER CO LTD
8.penna ELECTRICITY LTD

தனியாரின் மின்சார விலை:

1.GMR-Rs.6.58/unit
2.B.B.N-RS.17.78/UNIT
3.MADURAI POWER CORP-RS.8.63/UNIT
4.SAMBALPATTI-RS 8.74/UNIT
5.STCMS-RS3.52/UNIT
6.ABAN-RS 2.31/UNIT
7.PENNA-2.58/UNIT

மின்சார வழங்கல் சட்டம் 1948 பிரிவு 43Aதனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை பற்றி கூறுகிறது.

தனியார் மின் நிறுவனங்களுக்கான சலுகைகளும்,தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்புகளும்:

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலதனங்களை,கட்டமைப்புகளை (infrastructure) பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு.மின் நிலையம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு வரிச்சலுகை.பின்னர் நான்கு சதவிதம் வரி செலுத்தினால் போதுமானது.இந்த சலுகைகளை பெற ஒரு நிறுவனம் ஆண்டிற்கு 6000 மணி நேரம்(68.49%) மின் உற்பத்தி செய்யவேண்டும்.உற்பத்தியில்ஈடுபடும்போது அந்த மின் நிலையத்திற்கு தேவைப்படும் மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரமாகவே கணக்கிடப்படுகிறது. உற்பத்தி நிலையங்கள் தொடங்க தேவைப்படும் மொத்த மூலதனத்தில் 30% கை முதலீடாக செலுத்தவேண்டும். இந்நிறுவனம் இந்த தொகையை நான்கு ஆண்டுகளாக பிரித்து வருடத்திற்கு 7.5% என்ற முறையில் முதலீடு செய்கிறது.ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் முதலீடு செய்ய பணம் இல்லை என்று நடுவண் அரசால் வருணிக்கப்பட்ட தமிழ்நாடு மின்வாரியம் வருடத்திற்கு 24.7%விலை கொடுத்து வாங்குகிறது. இதிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் நிதி இல்லை எனவே தான் தனியாரிடம் மின்சாரத்தை ஒப்படைத்தோம் என்று நடுவண் அரசு சொன்ன காரணம் பொய் என்று அம்பலமாகியுள்ளது.இப்படியாகமேற்கண்ட ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு ஓவொரு ஆண்டும் மூலதன கட்டணமாக 1006 கோடி செலுத்துகிறது தமிழ்நாடு மின்வாரியம். இந்த1006 கோடியை கைமூலதனமாக வாரியம் முதலீடு செய்திருந்தால் ஆண்டுக்கு சுமார் 750mw திறனுள்ள சொந்த மின் நிலையமே அமைத்திருக்கலாம்.

92mw திறனுள்ள ராமநாதபுரம் மாவட்டம் வலுதூரில் உள்ளது B.G.R என்ற தனியார் நிறுவனம்.இது ஒப்பந்த காலமான 2009 க்குள் தனது மின் உற்பத்தியை தொடங்கவில்லை. முடிவாக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கியது.ஆனால் தொடங்கிய நான்கு மாதத்திற்குள்ளாகவே பழுதடைந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மீண்டும் பழுது நீக்க ஒன்றரை ஆண்டுகள் பிடித்தன. மின் உற்பத்தி நடக்காத இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் GAIL உடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இயற்கை வாயுவிற்கான விலையில் 80%கட்டணத்தை மின் வாரியம் செலுத்தியது. ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறினால் மின்சாரம் வாங்காமலே மின் வாரியம் தண்டமாக பணம் கட்டியது வேடிக்கையான விடயம் தான்.இதனால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டம் 500 கோடி. இதே நிறுவனத்திடம் தான் மேட்டூரில் மின் நிறுவனம் தொடங்க ஒப்படைக்கப்பட்டது.இது 2011க்குள் தனது உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் தொடங்கவில்லை.

மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒரு புற்று நோய் :
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சாரவாரியதிற்கு ஒரு சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும். இது நடுவண் அரசால் அமைக்கப்பட்டது.1998 ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின்படி2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இது 2002முதல் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசிடமிருந்து பிடுங்கிக்கொண்டது .இது பொறுப்பேற்றுக்கொண்ட அதே ஆண்டிலேயே மின்சார வாரியத்திற்கு 4851 கோடி நட்டத்தை ஏற்படுத்தியது. இது ஒரு சர்வாதிகார் அமைப்பை போல் செயல்படுகிறது. மின்வாரிய நட்டத்திற்கு இது பொறுப்பேற்காது.தமிழ்நாடு அரசு இதன் மேல் அதிகாரம் செலுத்தமுடியாது. இந்த ஆணையம் மின் கட்டத்னத்தை உயர்த்தினால் அதை குறைக்கும் அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லை. அப்படி கட்டணத்தை குறைக்க வேண்டுமென்றால் அந்த மானியத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மின் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வந்த பிறகு பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்களை வணிக பட்டியலிலிருந்து தொழிற்துறை பட்டியலுக்கு மாற்றியது. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.இதனால் மின் வாரியத்திற்கு 250 கோடி இழப்பு ஏற்பட்டது.ஆனால் வீடுகளுக்கும்,விவசாயத்திற்கும் மின் கட்டணத்தை அதிகப்படுத்தியது.

PESOT(Power Engineer's Society of TamilNadu)தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பு தனியாருடனான மின் கொள்முதல் அதிக கட்டணத்தை குறைக்குமாறு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழக்கு தொடுத்தது. இதன் மூலம் தனியார் மின் வாரியங்களிடமிருது மின்வாரியத்திற்கு கிடைக்க இருந்த பாக்கி தொகை 1645 கோடி ரூபாய். ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் சட்டப்படி இந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒழுங்கு முறை ஆணையம் 1645 கோடி பெற்று மின்வாரியத்திற்கு கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒழுங்குமுறை ஆணையம் தனியாருக்கு சாதகமாக செயல்பட்டதன் விளைவு மின்வாரியத்திற்கு 1645 கோடி இழப்பு.

இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகளின் அலட்சியமும்,தனியாருக்கு சாதகமாக செயல்பட்டதும் தான் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் சாவின் விளிம்பில் இருக்கிறது. நமக்கு மின்சாரம் கிடைக்க முதலில் எதிர்க்க வேண்டிய எதிரி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான்.

53,298 கோடி நட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் :
கடந்த முறை உயர்த்தப்பட கட்டண உயர்வின் மூலமாக மின்வாரியத்திற்கு கிடைத்தது 9,741 கோடி தான். ஆனால் இன்னும் 53,298 கோடி நட்டத்தை ஈடு செய்ய வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயரும். இத்தனை கோடி நட்டமும் மக்கள் மீது தான் திணிக்கப்படும். அப்படியானால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இபொழுது இருக்கு மின்கட்டணத்தை விட ஐந்து மடங்காக உயரக்கூடும் என்பது தான் உண்மை. இது தற்போதைய நட்டம் மட்டுமே. இன்னும் வரும்காலங்களில் லாபம் வர வாய்ப்பிலை. மாறாக மேலும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நட்டம் தான் ஏற்பட போகிறது.

21/1/2011 அன்று மத்திய மின்துறை அமைச்சகம், மின்சார மேல்முறையீடு தீர்ப்பாயதிற்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 1,16,089 கோடி நட்டத்தை சந்திக்கபோவதாகவும் எனவே தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை உடனே வழங்க ஒழுங்குமுறை ஆணையம் ,மின்வாரியத்திற்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியம் இல்லாமல் போகும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கடன் சுமை 1,35,000 கோடி ரூபாய். இப்படியிருக்க மின்வாரியத்தின் 1,16,089 கோடி நட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுகொள்ள வாய்ப்பில்லை. இந்த 1,16,089 கோடி நட்டமும் தமிழக மக்கள் தலையில் தான் விழும். வரும் காலங்களில் மின்சாரம் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆடம்பர பொருளாக இருக்கும்.

தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்த 2003 மின்சார சட்டம்:
தனியார் மின் நிறுவனகள் தொடங்க அனுமதி தேவை இல்லை.
cross subsidy(பொருளாதார வலிமை பெற்றவர்களுக்கு அதிக கட்டணம்,ஏழை மக்களுக்கு குறைவான கட்டணம் ) நீக்கம் .
மின்சாரத்தை வணிக ரீதியில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மரணப்படுக்கையில் இருக்கும் மின்வாரியத்தை காக்கவும், மின்வெட்டிலிருந்து விடுதலை பெறவும் :

தற்போதைய மின் வெட்டை சமாளிக்கவும்,நிரந்தரமாக மின் வெட்டை போக்கவும் மின்வாரியத்தில் பணிபுரிந்த நேர்மையான அதிகாரிகள் கூறும் தீர்வுகள்.
ஒழுங்குமுறை ஆணையம் கலைக்கப்படவேண்டும் .
ஆந்திர மாநிலம் சிம்மதிரியில் உற்பத்தியாகும் 1000mw லிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 190mw கேட்டு பெறுவது.
கிடைக்கும் இயற்கை ஏறி வாயுக்களை தனியாருக்கு கொடுக்காமல் தமிழ்நாட்டு மின்வாரியத்திற்கு பெற்று தருதல் .
மின்சார சட்டம் 2003 அடியோடு மாற்றப்பட வேண்டும் அல்லது புதிய சட்டத்தின் மூலம் இது ரத்து செய்யப்பட வேண்டும்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களை தடை செய்து தமிழக மின்வாரியமே எடுத்து நடத்த வேண்டும்.
தூத்துக்குடியில் வர இருக்கும் மின் உற்பத்தியில் தமிழகத்திற்கு 387mw ஒப்பந்தத்திற்கு பதிலாக 1000mw கிடைக்க செய்தல்.

மின் பற்றாக்குறைக்கு இவ்வளவு காரணங்கள் இருக்க, தனியார் கொள்ளை லாபத்தினை மறைக்கவும், காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகளை மறைக்கவும், மனித இனத்தை அழிக்கும்அணுகுண்டுகளை தயாரிக்கவும் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின்சாரம் என்று சொல்லித்திரியும் காங்கிரஸ் அயோக்கியர்களின் பேச்சை நம்புவது வடிகட்டிய முட்டாள் தனம் .
இனிமேலும் தனியாரின் கொள்ளை லாபங்களை தடுத்து நிறுத்தாமலும்,ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்க்காமலும் இருந்தால் மின்சாரம் முழுவதும் தனியார் பிடியில் சென்று தமிழ்நாடு மின்வாரியம் சில வருடங்களில் இல்லாமல் போகும்.

THANKS TO 
சுசிந்திரன் பன்னீர்  
 https://www.facebook.com/photo.php?fbid=406913526045166&set=at.104148302988358.7453.100001795663510.100001930814096&type=1&theater
 -
Related Posts Plugin for WordPress, Blogger...