உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 02, 2012

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நவம்பர் 20ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம்

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண்.652 நாள்.31.10.2012


வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மேலும் 20 நாட்கள் அவகாசம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 1-1-2013 நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்த்தல், நிக்கல் உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பம் அளிப்பதற்கு இன்று (31-10-2012) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பெறுவதற்கான அவகாசத்தை 20-11-2012 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. இந்த காலகட்டங்களில் எந்த சிறப்பு முகாமும் நடைபெறாது.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, திருத்தங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாகவும் (elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...