உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, November 29, 2012

எல்.ஐ.சி.,யில் வேலைவாய்ப்புக்கள்


எல்.ஐ.சி., நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் கோட்ட வாரியாக பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் அப்ரென்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் 01.11.2012 அடிப்படையிலானவை. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வில் 2 பகுதிகள் இருக்கும். முதல் பிரிவில் டெஸ்ட் ஆப் ரீசனிங் மற்றும் நியூமரிகல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்தும், 2ம் பிரிவில் பொது அறிவு, கரண்ட் அபெயர்ஸ், இங்கிலீஷ் லாங்வேஜ் பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வு 02.02.2013 மற்றும் 03.02.2013 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எல்.ஐ.சி., நிறுவனத்தில் முகவராக இருப்பவர்களின் துணைவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆன்-லைன் முறையிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் மூன்று வேலை நாட்களுக்குள் ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ.500/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானில் பதிவு எண் மற்றும் இதர விபரங்களை பத்திரமாக வைக்கவும். பின்னர் இந்த சலானை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. கல்வித் தகுதி மற்றும் ஏனைய முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறியவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...