உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, November 04, 2012

தமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்கான அனிமேஷன் பாடங்கள், கதைகள், பாடல்கள்

இன்று இணையத்தில் உலவி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது இந்த இணையதளம்.Tamilvu.org என்ற இணையதளம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் முக்கிய பயன் என்னவென்றால் இணையத்திலேயே தமிழ் மொழியை கற்கலாம். மற்றும் அதற்க்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். தமிழில் Diplomo, Degree போன்றவைகளை இணையத்திலேயே கற்க முடியும். தேவையானவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதில் உள்ள இன்னொரு வசதி மழலைக் கல்வி சிறு குழந்தைகளுக்கு பாடங்கள், பாடல்கள், சிறுகதைகள், எழுத்து பயிற்சி போன்ற அனைத்தையும் எளிதாக புரியும் படி அனிமேஷன் வடிவில் அமைத்து இருக்கிறார்கள்.


இந்த லிங்கை மழலைக் கல்வி கிளிக் செய்தால் மேலே உள்ள படி பக்கம் வரும் அதில் ஏழு தலைப்புகளில் பாடங்கள் இருக்கும். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அதற்க்கான பாடங்கள் குழந்தைகளுக்கு புரியும் படி அனிமேஷன் வடிவில் வரும்.

உதாரணமாக பாடல்கள் பகுதியை தேர்வு செய்தால் கீழே இருப்பதை போல வரும் அதில் உங்களுக்கு தேவையான பாடல்களை தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு கற்பிக்கலாம். குழந்தைகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த பாடங்களை எளிதாக விருப்பமுடன் கற்று கொள்ளும்.


இது போன்று உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பகுதியாக போட்டு பாடங்களை சொல்லி தரலாம். உங்கள் குழந்தையும் ஆர்வமாக கற்று கொண்டு பள்ளியில் சிறந்து விளங்கும். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து அனைவரும் பயன்பெற உதவுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...