உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 13, 2012

ஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி ?

இது காலம் தளத்தில் நான் படித்தது


'pishing' என்று சொல்வார்கள். பொதுவாக இது பேங்க் கிரிடிட்கார்டு எண்களை திருடுவதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பம்(?). ஆன்லைன் பேங்கிங் என்பது இப்பொழுதெல்லாம் உலகமெல்லாம் வழக்காகிவிட்டது. எனவே பணமாற்று நடவடிக்கை முதல் அனைத்து வங்கி நடவடிக்கைகளும் இணையம் வழியாகவே நடைபெறுகிறது.


இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல், அந்தந்த வங்கிகளின் இணைய பக்கங்களைப் போல் போலியாக இணைய பக்கங்களை திறந்து வைத்து, ஸ்பேம் மெயில் நிறுவணங்களிடமிருந்து இமெயில் முகவரிகளை பெற்றுக் கொண்டு பேங்க் வழியாக மெயில் அனுப்புவது போன்று அனுப்புவார்கள். "உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் " என்று வரும். அந்த மெயில் கிடைக்கும் நபர் அதிகம் கணனி வழி திருட்டுக்களை அறியதவராக இருந்து, போலி பேங்கின் பெயரில் இருக்கும் உண்மையான பேங்கில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் உடனே அவசரப்பட்டு பாஸ்வேர்டை மாற்ற முயல்வார், முதலில் கணக்கு பெயரையும், ஒரிஜினல் பாஸ்வேர்டு கேட்கும், அதன் பிறகு புதிய பாஸ்வேர்டை அடிக்கச் சொல்லும். ஒரினினல் பாஸ்வேர்ட் முதலில் அடித்தவுடனே அதனை தனியாக கணக்கு எண்ணுடன் போலி இணையபக்கத்தின் டேட்டா பேஸில் சேமித்துவிடும்.

ஏமாளி கணக்கர் புதிய பாஸ்வேர்டு மாற்றியதும், "உங்கள் பாஸ்வேடு மாற்றப்பட்டுவிட்டது" என்று சொல்லிவிட்டு இணைய பக்கம் தன்னால் மூடிக் கொள்ளும். வெற்றிகரமாக போலி திருட்டு கும்பல் பாஸ்வேர்டை டேட்டா பேஸில் இருந்து எடுத்து ஒரிஜினல் பேங்கில் உள்ளே நுழைந்து அதிகபட்ச பணப் பரிவர்தனையை உடனே செய்துவிடுவர்.

இந்த திருட்டு 2002 ஆண்டு அதிகம் நடைபெற்றது, இண்டெர் நெட் குற்ற தடுப்புக்குப் பிறகு இணைய திருட்டு கும்பல்கள் கைவரிசை குறைந்திருக்கிறது.. ஏனென்றால் உலக அளவில் காவல் துறைகள் எச்சரிக்கை செய்து கடுமையான தண்டனையை அறிவித்திருக்கிறார்கள்.

அதே தொழில் நுட்பம் தான் தற்போது கூகுள் ஆர்குட்டை வைத்து ஜிமெயில் கணக்கையும், கடவு சொல்லையும் திருடுகிறார்கள். உள்ளே நுழையும் முன் அது ஆர்குட்டா வலைத்தளாமா ? என்று முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். http://www.orkut.com இதுதான் உண்மையான ஆர்குட் ஆனால் போலி ஆர்குட்டில் orkut.00bp.com என்று இருக்கும், அதாவது வேறு திருட்டு Server அது. இதனை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறந்துவிடக் கூடாது, தளத்தை லாகின் பண்ணாமல் லாகின் பக்கத்தை மட்டும் பார்வை இட்டால் உங்கள் கடவு சொல் களவு போகாது, அந்த தளத்திற்குள் சென்று லாகின் செய்தால் அவ்வளவுதான்..உடனே ஆட்டோமெடிக் மெயில் திருட்டு கும்பலுக்கு சென்றுவிடும். உடனே ஜிமெயில் பாஸ்வேர்டட மாற்றிவிடுவார்கள் அம்பேல் ... ஜிமெயில் பாஸ்வேர்டு, ப்ளாக்கர் பாஸ்வேர்டு எல்லாம் ஒன்று தான், அதன் பிறகு உங்களால் திறக்க முடியாது.

உங்கள் ஜிமெயிலில் இருந்து அந்த மெயிலை திறந்து பார்பதால் அவர்களால் திருட முடியாது, அதிலுள்ள லிங்கை சொடுக்கு ... அந்த தளத்திற்கு சென்று அதற்குள் நுழைய முற்பட்டு கடவு சொல்லை பயன்படுத்தினால் மட்டுமே கடவு சொல் திருட்டு கும்பல் கைகளில் போய்விடும். இப்படித்தான் இட்லிவடை மற்றும் தமிழச்சி ப்ளாக்கர் பாஸ்வேர்டு களவு போய் இருக்கிறது.

இதை எதற்கு செய்கிறார்கள் ?

ஜிமெயில் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அதில் பேங்க் அக்வண்ட் எண்களையும் பாஸ்வேர்டையும் சேமித்து வைத்திருப்பார்கள், அதை கைப்பற்றி திருடலாம் என்பதற்குத்தான். மற்றபடி இதை திருடி வலைப்பூக்களை அழிப்பார்கள் என்று நினைப்பது சந்தேகம் தான்.

பிஸ்ஸிங்(pishing) என்பது ஹை டெக்னாலஜி... ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். கம்பிக்கு பின்னால் களிதிங்கும் அளவுக்கு நிறைய ரிஸ்க் இருக்கிறது.


நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))

orkut.00bp.com - இது போலி ஆர்குட் வெப்சைட் orkut க்கும் .com க்கும் இடையில் எதாவது சொல் இருந்தால் அதாவது 00bp போன்று அல்லது வேறு எதோ ஒன்று இருந்தால் அது போலி வெப்சைட், அந்த பக்கதில் சென்று ஜிமெயில் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தாதீர்கள்

orkut.00bp.com - இதை சிலர் நண்பர்கள் இணைப்பாக (link) இணைத்திருக்கிறார்கள். அது தவறு ஏனென்றால் கவனம் தேவை, அதை சொடுக்கினால் அந்த போலி ஆர்குட் பக்கத்துக்கு சென்ரு விடும். கவனக்குறைவால் பாஸ்வேர்டுடன் நுழைந்து பார்த்துவிடாதீர்கள்.

ஜிமெயில் வழியாக கடவு சொல்லை திருட முடியாது. அந்த போலி ஆர்குட் பக்கத்தில் பாஸ்வேர்டுடன் நுழைந்தால் மட்டுமே ஆபத்து ! எனவே மெயில் வந்திருந்தால் பதட்டம் தேவை இல்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...