உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 06, 2012

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிவாய்ப்பு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னையில் உள்ள செம்மொழி தமிழய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள பணியிடங்கள்:
Web Designer (1), Personal Secretary (3), Assistant Librarian (1), Steno Grade II (2), UDC (2), LDC (2)
தேர்ந்தெடுக்கப்படும் முறை: திறனறிதல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 வரைவோலை எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cict.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், சாதி, வயது போன்ற சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.
நவம்பர் 10க்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு The Director, Central Institute of Classical Tamil, IRT Campus, 100 Feet Road, Taramani, Chennai – 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.cict.in/announcement_tamil.php  என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...