உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 06, 2012

ரயில்வேயில் இலவச பயிற்சியுடன் வேலை

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் Special Class Railway Apprentices Examination – 2013 தேர்வெழுத தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 17 வயது நிரம்பியர்களாகவும் 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 வில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) போன்ற பாடப்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ100 வரைவோலை எடுக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மெக்கானிக்கல் பயிற்சியளிக்கப்படும். பயிற்சின் போது முதல் 2 வருடங்களுக்கு ரூ.9100 உதவித்தொகையும், மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் ரூ.9400ம், கடைசி ஆறு மாதங்கள் 9700ம் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://upsconline.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...