உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, December 26, 2012

மானியமா? பிச்சையா? ( இது சிந்திக்கலாம் தளத்தின் பதிவு)

மக்களுக்கு நேரடி மானியம் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது யாரை செழிமைபடுத்துவதற்கு என்று தெரியவில்லை. அடித் தட்டு மக்களை வளப்படுத்தவா இல்லை அரசிடம் பணம் கொழுத்திருப்பதை காட்டவா? மானியம் கொடுப்பதனால் இந்தியாவில் உள்ள வறுமை அடியோடு ஒழிந்து விடுமா? போன்ற பல கேள்விகள் பலரது தலையை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.மானியம் நேரடியாக வங்கி கணக்கில் ஆதார் அட்டை அடிப்படையில் செலுத்தப்படும் எனக் கூறும் அரசுக்கு ஏன் தெரியவில்லை அந்த ஆதார் அட்டையை ஒரு அடையாள அட்டையாக வங்கிகள் கருத்தில் கொள்ளவதே இல்லை என்று. இதில் வேறு ஆதார் அட்டை தேசிய அடையாள அட்டையாம்.

நீங்கள் தரும் பணம் யார் தந்தது. நாங்கள் செலுத்திய வரிப் பணமா? உலக வங்கியின் பணமா? இல்லை வால் மார்ட் அள்ளிக் கொடுத்தப் பணமா? மக்கள் செலுத்திய வரிப் பணம் எனில் ஏன் நீங்கள் அதை எங்களுக்கே திருப்பித் தர வேண்டும். அதற்கு பதில் பல்வேறு வரிகளைக் குறைதிக்கலாமே! உலக வங்கி அல்லது வால் மார்ட் தந்த பணம் எனில் உலக வங்கியும் வால் மார்டும் என்ன நம்ப மச்சானா... சும்மா தர்றதுக்கு அதுவும் ஆதாயம் இல்லாமலா... நம்ப முடியாது.

மானியம் – இது மானியம் ஆல்ல மக்களுக்கு அரசியல் வாதிகள் மத்திய அரசு என்றப் போர்வையில் போடும் பிச்சை. அதற்கு கௌரமான பேர் தான் மானியம். இதை பிச்சை என்றும் எடுத்துக் கொள்ளலாம் ஓட்டளித்து அரியணை ஏறியதற்காகவும் அடுத்த தேர்தலில் வெற்றியைத் தரவும் அவர்கள் அளிக்கும் லஞ்சம் எனவும் எண்ணிக் கொள்ளலாம். யார் கேட்டது மானியம்?

இந்தியர்கள் என்ன பிழைக்கத் தெரியாதவர்களா? அப்படியே பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் மக்கள் அப்படி இருக்க காரணம் என்ன என்று ஆராய்ந்து அதற்கேற்றார் போல் மக்களை நல்ல முறையில் பண்படுத்துவது தானே அரசின் கடமை. மக்களுக்கு வேண்டியதெல்லாம் மானியம் இல்லை. ஊழல் இல்லாத இந்தியாவும் உழைக்க தயாராக இருக்கும் மக்களுக்கு அவர்கள் பட்டறிவு மற்றும்  படிப்பறிவுக்கு ஏற்ற ஒரு வேலை மட்டுமே!

நன்றி  சிந்திக்கலாம்  

http://www.sindhikkalam.com/2012/12/blog-post_26.html#more
Related Posts Plugin for WordPress, Blogger...