உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 18, 2013

அமெரிக்காவில் உள்ள மின்நிலையத்தில் “வைரஸ்” தாக்குதல்:::

அமெரிக்காவில் உள்ள மின்நிலையத்தில் “வைரஸ்” தாக்குதல்:::

கம்ப்யூட்டர் வைரஸ் எனப்படும் கணினி நச்சு நிரல் தாக்குதல் காரணமாக, அமெரிக்காவில் உள்ள இரு மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலைய கணினிகளில், கோப்புகளைச் சேமிக்கப் பயன்படும் Pen Drive-ஐ பயன்படுத்தியபோது, அவை நச்சு நிரல்களால் பாதிக்கப்பட்டதாக அரசு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் எவை என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, நச்சு நிரல்கள் மூலம் மின்னுற்பத்தி நிலையங்களை செயல்பட விடாமல் முடக்குவது அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் Stuxnet என்ற நச்சு நிரலின் பாதிப்பால், ஈரானில் பல மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கின.
Related Posts Plugin for WordPress, Blogger...