உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 21, 2013

மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை ! (தினமலர் செய்தி)

மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை !
மின் பற்றாக்குறையால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்துள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், உத்தர பிரதேச மாநில மின் தட்டுப்பாட்டை தீர்க்க முற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான, மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மின்வெட்டு :

தமிழகத்தில், சென்னையை தவிர, மற்ற பகுதிகளில், தினமும், 15 முதல், 16 மணி நேரம் வரை, மின் வெட்டு நிலவுகிறது. வரலாறு காணாத, இந்த மின் வெட்டால், தொழில் துறை கடும் பாதிப்படைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என, பொதுமக்களின் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட, அத்தனை விஷயங்களும், கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.இந்த பாதிப்புகளை சரிக்கட்ட,தமிழக அரசும், போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, அனல் மின் நிலையத்துடன், ஒப்பந்தம் செய்து, அங்கிருந்து மின்சாரத்தை எடுத்து வரும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.இந்த சூழ்நிலையில், தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான ஒரு விஷயம், அம்பலமாகி உள்ளது. தமிழக முதல்வராக காமராஜர் பதவி வகித்த காலத்தில், அவரின் தீவிர முயற்சி காரணமாக, நெய்வேலியில், பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்கப்பட்டது.


நெய்வேலி "தில்லாலங்கடி' வேலை :

தென் மாநிலங்களின் மின் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த நிறுவனம்தான், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களை காப்பாற்றி வருகிறது.தற்போது, இந்த மாநிலங்கள் எல்லாமே மின் தட்டுப்பாட்டால்திண்டாடி வந்தாலும், தமிழக நிலைமை மிக மோசமாக உள்ளது.லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தன்னிடம்இருக்கும் பெரும் பணத்தை வைத்து, தற்போது, உத்தரபிரதேசம் கான்பூரில், அம்மாநில அரசுடன் இணைந்து, புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.

அதன்படி, 2,000 முதல், 4,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட, புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

வங்கி உத்தரவாதம் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான செலவில், 51 சதவீதத்தை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. மீதமுள்ள, 49சதவீதத்தை, உத்திர பிரதேச மாநில அரசு ஏற்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தன் பங்களிப்பிற்கு செலுத்த வேண்டிய தொகையில், 30 சதவீதத்தை, அதாவது, 6,000 கோடி ரூபாயை வழங்கி விட்டது. மீதமுள்ள, 70 சதவீத தொகைக்கு வங்கி உத்தரவாதங்களை கொடுத்து உள்ளது.மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ள கான்பூர், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலின் சொந்த தொகுதி. நெய்வேலியிலிருந்து நிலக்கரி எடுத்துச் சென்று, கான்பூர் அனல் மின் நிலையத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

அமைச்சர் ஜெய்ஸ்வாலின், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவே, அவரது தொகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பழுப்பு நிலக்கரியை கையாளும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிறுவனம். ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் உள்ள அனல் மின் நிலையம், குஜராத்தில் உள்ள, மைனிபட் அனல் மின் நிலையம் போன்றவற்றுக்கு ஏற்கனவே தொழில்நுட்ப உதவி அளித்து உள்ளது.ஆனால், முதல் முறையாக, பணத்தை அதிக அளவில் கொட்டி, அனல் மின் நிலையத்தை அமைப்பது கான்பூரில் தான்.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன உதவியோடு, ஜெயங்கொண்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட, 1,500 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம், சீர்காழியில் துவங்க திட்டமிட்ட மின் உற்பத்தி நிலையம் ஆகியவை, அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளன. ஆனால், கான்பூரில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பமாகி விட்டன.

ஒப்பந்தம் :

கான்பூரில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும், உ.பி., மாநிலத்திற்கே வழங்கப்பட உள்ளது. வேறு எந்த மாநிலத்திற்கும், இந்த மின்சாரம் வழங்கப்படாது. அதற்கேற்ற வகையில், நெய்வேலி நிறுவனம் மற்றும் உ.பி., மாநில அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கூடங்குளத்தில் உற்பத்தியாக உள்ள மின்சாரத்தை, தமிழகத்துக்கு முழுமையாகத் தர வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூர் மின் உற்பத்தி நிலைய மின்சாரத்தில், எவருக்கும் பங்கில்லை என்பதில், மத்திய அரசு தெளிவாக உள்ளது.


எப்படி நடந்தது? :

உத்தர பிரசேத்தில், மிகக் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் அமைக்க ஒப்புக் கொண்டதாக, மின் பகிர்மான ஒப்பந்தத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தெரிவித்து உள்ளது.அதேநேரத்தில், இந்த திட்டம் அமைக்கும் முடிவை எடுப்பதற்கான, உயர்மட்டக் குழுவில், தமிழக அரசின் இரண்டு உயர் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். நெய்வேலி நிறுவனத்தில், தி.மு.க., தொழிற்சங்கமே வலிமையானதாக உள்ளது. இத்தனை இருந்தும், இவர்கள் எல்லாம், கான்பூரில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, நெய்வேலி நிறுவன பணத்தை தூக்கித் தர, எப்படி ஒப்புக் கொண்டனர் என்பது தெரியவில்லை.- நமது டில்லி நிருபர்
Related Posts Plugin for WordPress, Blogger...