உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, March 30, 2013

TANGEDCO NEWS: ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ...

TANGEDCO NEWS: ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ...:  "வரும் ஜூன் மாதம் வரை, பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும்' என, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ...

Saturday, March 23, 2013

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

TANGEDCO NEWS: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...

CLICK VIEW NEWS TANGEDCO NEWS: மின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு....

Wednesday, March 13, 2013

சீமை கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!

கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்..?!

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில் களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும். 

Monday, March 11, 2013

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :


நன்றி -திரு.பிரசாத் -பெருந்துறை 


1.இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.


என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்?


முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி 

பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்? 
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக 
ரூ.75 கட்ட வேண்டும்.
இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 
கால வரையறை: 
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல்
ஆவணம் கிடைக்கக்கூடும். 
நடைமுறை: 
நகல் பாலிசி கோரும் 
விண்ணப்பக் கடிதம் அளித்தால்

அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்;
அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு,ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

Monday, March 04, 2013

கல்வி சான்றிதழில் சாதி கட்டாயம் இல்லை


தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மக்களுக்கு வெளியிடப்படும் அரசு ஆணைகள்,மக்களின் கவனத்திற்கு தெரிவதில்லை.

இதனால்,  அரசு ஆணைகள் கேட்டு, மக்கள் அரசு அலுவலகங்களில் அலைவதும்,அரசு ஊழியர்களிடம் லஞ்சம் கொடுத்து அரசு ஆணைகளின் நகல்களை பெற்றுவருகிறார்கள்.மக்களுக்கு பயன்படும் பல அரசாணைகள், ரகசியமாக கையாளப்படுகிறது. ஒரு சில தனிநபர்கள் மட்டுமே அந்த அரசாணைகள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்

 1. சாதி சான்றிதழ்
 2. வருமான சான்றிதழ்
 3. பிறப்பிடச் சான்றிதழ்
 4. இருப்பிடச் சான்றிதழ்
 5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
 6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
 7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
 8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
 9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
 10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
 11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
 12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
 13. சமூக நலம்
Related Posts Plugin for WordPress, Blogger...