உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, March 04, 2013

கல்வி சான்றிதழில் சாதி கட்டாயம் இல்லை


தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மக்களுக்கு வெளியிடப்படும் அரசு ஆணைகள்,மக்களின் கவனத்திற்கு தெரிவதில்லை.

இதனால்,  அரசு ஆணைகள் கேட்டு, மக்கள் அரசு அலுவலகங்களில் அலைவதும்,அரசு ஊழியர்களிடம் லஞ்சம் கொடுத்து அரசு ஆணைகளின் நகல்களை பெற்றுவருகிறார்கள்.மக்களுக்கு பயன்படும் பல அரசாணைகள், ரகசியமாக கையாளப்படுகிறது. ஒரு சில தனிநபர்கள் மட்டுமே அந்த அரசாணைகள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

இது போல், மக்களுக்கு பயன்படும், தமிழக மக்களின் கவனத்துக்கு தெரியாத பல அரசாணைகளை மக்கள்செய்திமையம் தொடர்ந்து வெளியிட முடிவு செய்துள்ளது.பள்ளி கல்விச்சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழில், சாதி, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் இடையே உள்ள அந்த இடத்தை காலியாகவிடலாம் என்று அரசு ஆணை தெளிவாக உள்ளது.
2.7.1973ல் போடப்பட்ட இந்த அரசு ஆணையை செயல்படுத்தப்படவில்லை.பிரபல நடிகர் கமலஹாசன், தன் மகள் கல்வி சான்றிதழில், ஜாதி, சமயம் பெயரை போட விரும்பவில்லை என்று தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், 1973ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு ஆணை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக அந்த அரசு ஆணை வெளியிட்டு உள்ளோம்.  
தகவல்: மக்கள் செய்தி மையம்
Related Posts Plugin for WordPress, Blogger...