உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, April 22, 2013

வேண்டுகோள் ( உதவி )

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலார் பெரிதும் பயன்படுத்திவந்த வண்டி எண் 1991( கோபி கிளை ) ஊத்துக்குளி செங்கப்பள்ளி கோபி வழி தட பேருந்தை மீண்டும் இயக்கி பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலார் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இத்தகவலை இணைய நண்பர்கள் அணைவரும் tnstccbeho@dataone.in , commercial@tnstc.in , erdtnstc@dataone.in என்ற முகவரிக்கு மெயில் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்  இத்தகவலை தங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி

Sunday, April 21, 2013

தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன?

'மாங்கலயம் தந்துனானே' என தொடங்கும் இம்மந்திரத்தில்,
''சோமஹ ப்ரதமோ விவிதே 
கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ 
அக்னிஸ்டே பதிதுரியஸ்தே 
மனுஷ்ய ஜாஹ''
எனும் வரிகளின் விளக்கம்,''நீ(மணமகள்) முதலில் 
சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், 
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், 
பின்பு அக்கினி உன்னை அடைந்தான். 
இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.'' 
இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தாள் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. 

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 

அவை- 

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு 

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன. 

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
. 
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். 

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். 
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.
திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. 

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 

அவை- 

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு 

Monday, April 15, 2013

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்-லைனில் மனு செய்யலாம்


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  
அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம்.இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Saturday, April 06, 2013

தெரிந்து கொள்ளுங்கள்...முத்தான 100 குறிப்புகள்.

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...